/indian-express-tamil/media/media_files/8QlRIMPBTm17zYw0TR7V.jpg)
கேதர்நாத்துக்கு, 7 பயணிகளுடன் ஹெலிகாப்டர் நிலை தடுமாறி தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டர் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் பயணிகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது .
கேதர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களுக்கு வருடந்தோறும் ஏராளமானபக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த சார்தாம் புனித யாத்திரையானது யமுனோத்ரியிலிருந்து தொடங்கி, கங்கோத்ரி, கேதார்நாத் வழியாகச் சென்று இறுதியாக பத்ரிநாத்தில் முடிவடைகிறது.
இந்த பயணம் ஏப்ரல் – மே முதல் அக்டோபர்- நவம்பர் வரை மேற்கொள்ளப்படும். இந்த இடங்களுக்கு மிகவும் ஆபத்தான வழிகளிலும் மோசமான வானிலையிலும் பயணம் செய்ய வேண்டி உள்ளதால் சார்தாம் புனித யாத்திரை மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கடந்த மே 10 அன்று தொடங்கியது.
இந்நிலையில் இன்று பக்தர்களை கேதார்நாத்துக்கு ஏற்றி வந்த ஹெலிகாப்டர் நிலைதடுமாறி சுழன்றது. சிர்சி ஹெலிபேடில் இருந்து கேதார்நாத் தாமுக்குவிமானியுடன் 7 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த கெஸ்ட்ரல் ஏவியேஷன்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலை 7.05 மணி அளவில் கேதார்நாத் தாம் ஹெலிபேடுக்கு அருகில் கட்டுபாட்டை இழந்தால் சுமார் 100 மீட்டர் முன்னதாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில், ருத்ரபிரயாக் மாவட்ட மாஜிஸ்திரேட் சவுரப் கஹர்வார், ஹெலிகாப்டரின் பின்புற மோட்டாரில் சிக்கலை உருவாக்கி, விமானியை தரையிறக்கத் தூண்டியதாக கூறினார்.
Read in english
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.