Advertisment

மூடுபனியில் சிக்கிய புனே ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் பரிதமாக பலி

புனேயில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் புனேவின் பாவ்தான் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதமாக உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Helicopter flying to Mumbai crashes in Pune 3 killed Tamil News

கடந்த ஆகஸ்ட் 24 அன்று, மும்பையில் உள்ள ஜூஹூவில் இருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்ட தனியார் ஹெலிகாப்டர், பாட் கிராமம் அருகே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளனது.

புனேயில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் புனேவின் பாவ்தான் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதமாக உயிரிழந்தனர். இந்த விபத்தை உறுதி செய்துள்ள பிம்ப்ரி சின்ச்வாட் போலீஸ் கமிஷனர் வினோய்குமார் சௌபே, "ஹெலிகாப்டர் ஆக்ஸ்போர்டு கோல்ஃப் கோர்ஸ் ரிசார்ட்டில் இருந்து ஜூஹூவுக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, எங்களது குழுக்கள் பதிலளித்துள்ளன”என்று அவர் கூறினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: 3 killed as helicopter flying to Mumbai crashes in Pune

காவல்துறையின் கூற்றுப்படி, இறந்தவர்கள் கிரிஷ்குமார் பிள்ளை, பிரீதம்சந்த் பரத்வாஜ் மற்றும் பரம்ஜீத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஹெரிடேஜ் ஏவியேஷன் என்ற நிறுவனத்தால் இயக்கப்படும் ஹெலிகாப்டர் புறப்பட்டபோது மூடுபனி இருந்ததாக உள்ளூர்வாசிகள் கூறியதாக என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஹின்ஜேவாடி காவல்துறையின் கூற்றுப்படி, 'பாவ்தானில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான செய்திகளுக்கு தீயணைப்புப் படையுடன் அவர்களின் குழுக்கள் பதிலளித்தன. இந்த விபத்து காலை 7 மணிக்கு முன்னதாக நடந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன' என்று தெரிவித்துள்ளனர். 

"காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை ஆகியவை சிவில் விமான போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளன. இந்த விபத்து குறித்து டி.ஜி.சி.ஏ விசாரணை நடத்தும்” என்று காவல்துறை துணை ஆணையர் விஷால் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆகஸ்ட் 24 அன்று, மும்பையில் உள்ள ஜூஹூவில் இருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்ட தனியார் ஹெலிகாப்டர், பாட் கிராமம் அருகே விழுந்து நொறுங்கியது. விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டது மற்றும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mumbai Pune
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment