ஹேமந்த் சோரென் முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜார்க்கண்டில் அமைந்துள்ள ஜே.எம்.எம்-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கூட்டணியின் புதிய அரசு அம்மாநிலத்தில் அமைதி மற்றும் செழிப்பான சகாப்தத்தை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜே.எம்.எம்-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ஜே.எம்.எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரென் இன்று அம்மாநிலத்தின் பதினோராவது முதல்வராக பதவியேற்றார்.
ஆளுநர் துருபதி முர்மு, ஹேமந்த் சோரனுக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு உறுதிமொழியை செய்து வைத்தார்.
ஹேமந்த் சோரெனுடன், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆலம்கீர் ஆலம், மாநில காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வர் ஓரான், ஆர்.ஜே.டி எம்.எல்.ஏ சத்யானந்த் போக்தா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ஜே.எம்.எம் கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரெனின் முதல்வர் பதவியேற்பு விழா, மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவைப் போல இல்லாமல், எதிர்க்கட்சிகளின் வலிமைக்கு முழு காட்சியாக இருந்தது.
இந்த விழாவில் ராகுல் காந்தி மட்டுமில்லாமல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஆர்.ஜே.டி யின் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுசெயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது வேலைகள் காரணமாக விழாவில் கலந்து கொள்ள இயலாமையை தெரிவித்துள்ளார்.
I attended the swearing in ceremony of CM Hemant Soren Ji & ministers from the Congress party in Ranchi today. I'm confident that the new Govt in Jharkhand will work for the benefit of all citizens & usher in an era of peace & prosperity in the state. pic.twitter.com/nIg1svJ0uL
— Rahul Gandhi (@RahulGandhi) December 29, 2019
இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ஜார்க்கண்டில் புதிய கூட்டணி அரசாங்கம் அனைவருக்காகவும் பணியாற்றும் என்றும் மாநிலத்தில் அமைதி மற்றும் செழிப்பான சகாப்தத்தை உருவாக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். “நான் இன்று ராஞ்சியில் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். ஜார்க்கண்டில் உள்ள புதிய அரசாங்கம் அனைத்து குடிமக்களின் நலனுக்காகவும், மாநிலத்தில் அமைதி மற்றும் செழிப்பு சகாப்தத்தை உருவாக்கும் என்றும் நான் நம்புகிறேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்டில் சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜக ஆட்சி அதிகாரத்தை இழந்தது. மக்களவைத் தேர்தலில் மிக அதிக உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஏழு மாதங்களுக்குள் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடந்துள்ளது. சோரன் தலைமையிலான ஜே.எம்.எம், காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி கூட்டணி 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 47 இடங்களை வென்றது. ஜே.எம்.எம் 30, காங்கிரஸ் 16, ஆர்.ஜே.டி 1 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. சோரென் போட்டியிட்ட டும்கா மற்றும் பர்ஹைட் தொகுதிகளில் வெற்றி பெற்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.