10ம் தேதிக்குள் மூலிகை பெட்ரோல் ஃபார்முலாவை மக்களிடம் சேர்க்கவேண்டும்.. தற்கொலை எச்சரிக்கை விடுத்த ராமர் பிள்ளை

பிரதமர் மோடிக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் இறுதி வேண்டுகோள் என்று வீடியோ வெளியீடு

By: Updated: December 7, 2018, 05:31:15 PM

மூலிகை பெட்ரோல் :  மாநில அரசின் ஒரு வரி மத்திய அரசின் ஒரு வரி என சாமானியனால் விலைக்கே வாங்க இயலாத ஒரு பொருளாய் எரிபொருட்கள் மாறிவிடுமோ என்ற சந்தேகம் நம்முள் மிக பலமாய் ஏற்பட்டது கடந்த இரண்டு மாதத்து கதை.  சில வருடங்களுக்கு முன்பு மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிக்கின்றேன் என்று ஒருவர் கிளம்பி சிலருக்கு பெரும் நிம்மதியும், விஞ்ஞானிகளுக்கு பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியர் ராமர் பிள்ளை.

1990களுக்கு பின்பு மூலிகைப் பொருட்களில் இருந்து பெட்ரோல் தயாரிக்க இயலும் என்று கூறி அதற்கு ஏஜென்சிகள் அமைப்பதாக அறிவித்திருந்தார் ராமர் பிள்ளை. ஏஜென்சிகளை வழங்குவதாக கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து பணத்தை வசூலித்து ஏமாற்றிவிட்டதாக ராமர் பிள்ளை மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பெட்ரோலியப் பொருட்களான டொலுவீன் மற்றும் நாஃப்தா போன்ற பொருட்களை கலந்து ராமர் பெட்ரோல் என்ற பெயரில் விற்று வந்தார். மோசடி வழக்குடன், மோட்டர் எரிபொருள் வாகனச் சட்டப்படி அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலிகை பெட்ரோல் – தற்கொலை எச்சரிக்கை :

இந்நிலையில் ராமர் பிள்ளையின் கருணை மனு என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியுட்டுள்ளார் ராமர் பிள்ளை. அதில் தன்னுடைய உயிரைப் பணயம் வைத்தாவது மூலிகை பெட்ரோல் ஃபார்முலாவை மக்கள் கையில் கொண்டு போய் சேர்ப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் டிசம்பர் 10ம் தேதி அன்று இந்த முடிவினை செயல் முறைப்படுத்த இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். பிரதமர் மோடிக்கும் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிக்கும் இறுதி வேண்டுகோள் என்று கூறி வீடியோவினை வெளியிட்டிருக்கிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Herbal petrol issue ramar pillai urges central to produce formula to the people

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X