Advertisment

பிரதமர் மோடியின் பாதுகாப்பில் புதிய சேர்ப்பு.. 12 கோடி ரூபாய் மேபேக் காரின் சிறப்பு அம்சங்கள் இதோ!

நிறுவனம் மற்றும் SPG இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வாகனம் கையகப்படுத்தப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவித்தன, காரின் ஒவ்வொரு பாதுகாப்பு அம்சத்தையும் ஆய்வு செய்தது மட்டுமல்லாமல் சில மாற்றங்களுக்கும் உத்தரவிட்டது.

author-image
WebDesk
New Update
mercedesmaybachinindia

PM's new car, Mercedes Maybach S 650 Guard| Pic credit: Instagram/mercedesmaybachinindia

மிகவும் பாதுகாக்கப்பட்ட மெர்சிடிஸ் மேபேக் (Mercedes Maybach) காருடன், பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு கூடுதலாக பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, பிரதமர் பாதுகாக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் வோக் மற்றும் டொயோட்டா லேண்ட் க்ரூஸரில் வலம் வந்தார்.

Advertisment

புதிய கார், மெர்சிடிஸ் மேபேக் எஸ் 650 கார்ட் (Mercedes Maybach S 650 Guard), புல்லட் மற்றும் பிளாஸ்ட்-ப்ரூஃப் அம்சங்களுடன், உலகெங்கிலும் உள்ள விஐபிகளுக்கான பாதுகாக்கப்பட்ட வாகனங்களில் வரிசையில் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரதமரின் குதிரைப்படையின் ஒரு பகுதியாக இந்த வாகனம் சமீபத்தில் வாங்கப்பட்டதாகவும், டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின், இரண்டு நாள் புது தில்லி பயணத்தின் போது, பிரதமர் கடைசியாக வாகனத்தில் சுற்றி வந்ததாகவும் ஆதாரங்கள் தெரிவித்தன.

“பிரதமரின் பாதுகாப்பு என்பது நிலையான மறுபரிசீலனைக்குரிய விஷயம். அதில் வாகனங்கள் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும், ”என்று ஒரு அதிகாரி கூறினார்.

நிறுவனம் மற்றும் SPG இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வாகனம் கையகப்படுத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. காரின் ஒவ்வொரு பாதுகாப்பு அம்சத்தையும் ஆய்வு செய்தது மட்டுமின்றி, பிரதமரின் பாதுகாப்பின் தேவைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களுக்கும் உத்தரவிட்டது.

S 650 கார்ட்’ VR10 இன் பாலிஸ்டிக் பாதுகாப்பு அளவைக் கொண்டுள்ளது. இது 360 டிகிரி பாதுகாப்பை உறுதி செய்யும், குடிமக்களுக்கு கிடைக்கும் மிக உயர்ந்த சான்றிதழ் தரமாகும்.

கார் வலுவூட்டப்பட்ட பாடி ஷெல் மற்றும் கிளாஸ் ஹெளசிங் (body shell and glass housing) வசதிகளால் ஆனது, இது விதிவிலக்கான வெடிபொருட்களின் விளைவை தாங்கும், மேலும் இராணுவத் தாக்குதல் துப்பாக்கிகளில் இருந்து சுடப்படும் தோட்டாக்களையும் கூட தாங்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

புகை அல்லது எரிச்சலூட்டும் வாயுக்கள் அல்லது வாயுத் தாக்குதல் போன்ற கண்ணுக்குத் தெரியாத ஆபத்துகளைச் சமாளிக்கும் வகையில் வாகனம் பொருத்தப்பட்டுள்ளது. அதன் அவசரகால புதிய காற்று அமைப்பு (emergency fresh air system) இயக்கப்படும் போது, ​​உள்ளே இருப்பவரைப் பாதுகாக்கும்.

பாதுகாப்பு கூறுகள் வாகனத்தில் மீண்டும் பொருத்துவதற்குப் பதிலாக, ஒரு பிரத்யேக உற்பத்தி செயல்பாட்டில், வாகனத்தின் பாடி ஷெல்லில் முழுமையாக ஒருங்கிணைக்கப்படுகின்றன. இது காருக்கு இயல்பான சீரிஸ் தயாரிப்பின் தோற்றத்தையும், உணர்வையும் தருகிறது.

காரில் செல்ஃப் சீலிங் ஃப்யூயல் டேங்க் உள்ளது. இது இன்பில்ட் தீயை அணைக்கும் கருவியுடன் வருகிறது.

இருக்கைகள் மசாஜ் அம்சத்துடன் வருகின்றன, அதில் பயணிகள் 'அதிக தீவிரம்' (high intensity) மற்றும் 'ஹாட் ரிலாக்சிங் பேக்' முதல் 'கிளாசிக் மசாஜ்' வரை மசாஜ் செய்து கொள்ளலாம். இதில் 360 டிகிரி கேமராவும் உள்ளது.

6 லிட்டர் V12 இன்ஜின் மூலம் 650 குதிரை சக்தியை உற்பத்தி செய்யும் இந்த கார் 5.45 மீ நீளமும் 3.36 மீ வீல்பேஸும் கொண்டது. வாகனத்தின் கனமான கதவுகள் திறப்பதற்கும் மூடுவதற்கும் எலக்ட்ரிக் மோட்டாரைப் பயன்படுத்துகின்றன.

பிரதமரின் வாகனத்தின் உண்மையான விலை தெரியவில்லை என்றாலும், அது 12 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment