குஜராத்தில் 3 சிங்களுடன் போராடிய தனது எஜமானை காப்பாற்றிய வளர்ப்பு பிராணியான நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள அம்பார்டி கிராமத்தில் பவேஷ் ஹமிர் பர்வாட் என்ற இளைஞர் கடந்த சனிக்கிழமை(21.7.18) அன்று வழக்கம் போல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 3 சிங்கங்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பவேஷை சுற்றி வளைத்தனர்.
பயத்தில் செய்வதறியாமல் திகைத்த அந்த இளைஞர் கத்தியபடியே ஓட ஆரம்பித்தார். சிங்களுடன் அவரை விடாமல் துரத்தில் அவர் மீது தாக்குதலில் ஈடுப்பட்டனர். தனது எஜமானின் அழுக்குரல் கேட்டு ஓடிய அவரின் வளர்ப்பு பிராணி தையரியமாக அந்த சிங்களுடன் சண்டை போட முன் சென்றது.
சிங்கங்கள் தன்னை விட வலினையானவை என்று தெரிந்தும் எஜமானின் உயிரைக் காப்பாற்ற அந்த வளர்ப்பு பிராணி சிங்கங்களுடன் சண்டை போட்டு பயங்கரமாக குறைத்துள்ளது. நாயின் குறைத்தல் சத்தத்தில் மிரண்டுபோன சிங்கங்கள் தாக்குதலில் இருந்து பின்வாங்கியுள்ளன. நாய் மிக வேகமாக சத்தம் போட்டு குறைத்ததால் அருகே இருந்த கிராமத்தினர் சிலர் ஏதோ அசம்பாவிதம் நடப்பதாகக் கருதி சம்பவ இடத்துக்கு திரண்டு வந்துள்ளனர். மக்கள் கூட்டமாக வருவதைப் பார்த்த சிங்கங்கள் ஆடு மேய்க்கும் பவேஷ் ஹமிர் பர்வாட் மீதான தாக்குதலை விட்டுவிட்டு காட்டுக்குள் ஓடி மறைந்துள்ளன.
பின்பு, பொதுமக்கள் சிங்கத்தின் தாக்குதலில் கை மற்றும் கழுத்து பகுதியில் காயமடைந்திருந்த பவேஷ் ஹமிர் பர்வாட்டை மீட்டு சர்வகுண்ட்லா மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Gujarat: A shepherd from Amreli's Ambardi village who was grazing his sheep was saved by his dog after he was attacked by three lions on July 21. pic.twitter.com/wskdicko6c
— ANI (@ANI) 23 July 2018
பின்னர், பொதுமக்கள், காடுகளிலிருந்து சிங்கங்கள் கிராமப்புற பகுதிக்கு வந்திருப்பதை வனத்துறைக்கு தெரிவித்தனர். சர்வகுண்ட்லா அம்பார்டி கிராமத்தில் சிங்கங்களின் தாக்குதலில் இருந்து தனது எஜமானைக் காப்பாற்றிய நாயை மக்கள் அனைவரும் பாராட்டினர். இந்த சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.