டிஐஜி ரூபாவை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சகல வசதிகளும் செய்யப்பட்டதாகவும், அதற்காக, ரூ.2 கோடி லஞ்சம் தரப்பட்டதாகவும் தன் மேலதிகாரி மீதே அதீத தைரியத்துடன் புகார் அளித்தவர்.
அப்படி புகார் கொடுத்ததற்காகவே சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, வேறொரு துறைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், சசிகலா மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தொடர்ந்து பல ஆதாரங்களை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்.
இந்நிலையில், டிஐஜி ரூபா, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். இந்த புகைப்படத்தை டிஐஜி ரூபா தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
November 2017
தன்னுடைய மற்றொரு ட்வீட்டில், “நான் ஒருவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டால் அவர்களுடைய கொள்கைகளையோ, அவர்களின் செயலையோ அப்படியே ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் கிடையாது. எல்லோரும் எல்லா தரப்பு மக்களையும் பார்க்கலாம்”, என குறிப்பிட்டுள்ளார்.
November 2017