scorecardresearch

ஹிஜாப் சர்ச்சை: கேரளப் பள்ளியில் இருந்து அனைவரையும் உள்ளடக்கிய ஒரு குரல்

ஹிஜாப் சர்ச்சை எழுந்த மாண்டியாவில் உள்ள பி.யு.சி கல்லூரியில் இருந்து 400 கிமீ தொலைவில், கேரளாவின் எடப்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் (ஜி.ஹெச்.எஸ்.எஸ்) 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஷைபு கேபி ஒரு கவலை தெரிவிக்கிறார்.

Hijab row, Karnataka neighboring Kearala School Idea is to be inclusive, Hijab, ஹிஜாப் சர்ச்சை, கேரளப் பள்ளியில் இருந்து அனைவரையும் உள்ளடக்கிய ஒரு குரல், Hijab issues, muslim girls, shcools

கடந்த செவ்வாய்கிழமை, மாண்டியாவில் உள்ள ஒரு கல்லூரியில் பர்தா அணிந்திருந்த ஒரு முஸ்லிம் மாணவி, காவி சால்வை அணிந்த ஒரு பெரிய மாணவர்கள் குழு கோஷமிட்ட வீடியோ, கர்நாடகாவில் முஸ்லீம் மாணவர்களின் ஹிஜாப் அணிவதற்கான உரிமை தொடர்பான சலசலப்பு சர்ச்சையாகி தீவிரமடைந்தது.

முஸ்லிம் மாணவியை நோக்கி மாணவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டபோது மாணவி ‘அல்லாஹு அக்பர்’ என்று முழக்கமிட்டார்.

மாண்டியாவில் உள்ள பி.யூ.சி கல்லூரியில் இருந்து 400 கிமீ தொலைவில், கேரளாவின் எடப்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் (ஜி.ஹெச்.எஸ்.எஸ்) 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஷைபு கேபி ஒரு கவலையான மனிதரகாக இருக்கிறார். அண்டை மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எவ்வாறு மதப் பதட்டங்களுடன் வெடித்து வருகின்றன என்பதை கவலையுடன் பார்த்ததாக அவர் கூறினார்.

“கர்நாடகாவில் நடப்பது கண்டிக்கத்தக்கது. முஸ்லிம் மாணவிகளி பள்ளிகளுக்குள் நுழைய விடாமல், அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே இணக்கமான விவாதங்கள் மூலம் (ஹிஜாப் மீது) பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்”என்று ஷைபு கூறினார்.

அவர் முன்பு ஒரு பள்ளியில் அவர் கற்பித்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார், அங்கு மத உடை தொடர்பான இதேபோன்ற சம்பவம் ஏதோ பெரியதாக வெடிக்கும் முன் பள்ளி அதிகாரிகளால் தீர்க்கப்பட்டடைக் நினைவுகூர்ந்தார். “ஒரு நாள், ஒரு முஸ்லீம் பையன் வகுப்பிற்கு தொப்பி அணிந்து வந்தான். அந்த மாணவர் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்தவர். அதை அணிவதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். சபரிமலை வருடாந்திர யாத்திரை நேரம் என்பதால், தாங்களும் 41 நாள் விரதம ஏற்று கருப்பு உடை அணிந்து வகுப்பிற்கு வர விரும்புவதாக ஒரு சில இந்து மாணவர்கள் கூறினர். இது பெரும் சிக்கலில் இறங்கக்கூடும் என்பதை உடனடியாக உணர்ந்தோம். பள்ளி என்பது அவர்களின் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் இடம் அல்ல என்று இரு தரப்பினரிடமும் கூறினோம்” என்றார்.

“நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் என்ன சுதந்திரம் அளித்தாலும், அவை பின்பற்றப்பட வேண்டும். அதுதான் முன்னுரிமை. அதே சமயம், எங்கள் பள்ளிகளில் மத வெளிப்பாடுகள் அனுமதிக்கப்படக்கூடாது. இது அபாயகரமானது. வேண்டுமென்றே ஏதாவது (ஆத்திரமூட்டும் வகையில்) செய்யப்பட்டால், அது நிறுத்தப்பட வேண்டும்” என்று ஷைபு மேலும் கூறினார்.

ஒரு உதாரணம், மாணவர் காவலர்களை உருவாக்கும் போது எந்த வகையான மத அடையாளத்தையும் அல்லது சின்னத்தையும் காட்ட அனுமதிக்கக் கூடாது என்று கேரள அரசாங்கத்தின் கடுமையான அறிவுறுத்தலை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஆனால், அதை விமர்சித்த ஒரு பகுதி மக்கள் இருந்தனர். பள்ளி என்பது எல்லாம் தொடங்கும் இடமாகும். அங்கு நாம் ஒருவரையொருவர் மதிக்கிறோம். ஒருவருக்கொருவர் நம்பிக்கைகளை பொறுத்துக்கொள்கிறோம். (இத்தகைய மதக் கலவரம் தொடர்ந்தால்), அவர்கள் எப்படிப்பட்ட குடிமக்களாக மாறுவார்கள் என்று நாம் கவலைப்பட வேண்டும் என்று கூறினார்.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய அரசுப் பள்ளிகளில் ஒன்றான ஜி.எச்.எஸ்.எஸ் எடப்பள்ளியில், ஹிஜாப் அல்லது புர்கா போன்ற எந்த வகையான மத உடைகளையும் தடைசெய்யும் விதிகள் எதுவும் இல்லை. அனைத்து வகுப்புகளிலும் உள்ள மாணவர்கள் கல்வித் துறையின் விதிகளுக்கு உட்பட்டு உள்ளூர் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தால் அமைக்கப்பட்ட சீருடையை அணிவார்கள். இது ஆசிரியர்களுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் மாணவர்களை அடையாளம் காணவும், பிந்தையவர்களுக்கு பேருந்து கட்டணத்தில் சலுகைகளைப் பெறவும் உதவுகிறது. இப்பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் மொத்தம் 720 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் 150 பேர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்.

ஹனா பாத்திமா அஷ்ரப், 12 ஆம் வகுப்பு மாணவி, பள்ளியில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் தலையை மறைக்கும் எளிய ‘தட்டம்’ அல்லது ‘முக்காடு’ அணிவார்கள். மிகக் குறைவானவர்கள் ஹிஜாப் அணிவார்கள், இன்னும் சிலரே பர்தா அணிந்து வகுப்புகளுக்குச் செல்கின்றனர். “தட்டம்’ கூட அணியாதவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் என்ன அணிய வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். ஒவ்வொரு முஸ்லீம் குடும்பமும் தங்கள் சொந்த பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைக் கொண்டிருக்கலாம்” என்று அவர் கூறினார்.

கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளுக்கு பதிலளித்த ஹனா, “ஹிஜாப் தடை செய்யப்பட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இது ஒருவரின் நம்பிக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதை ஏன் தடை செய்ய விரும்புகிறீர்கள்? கர்நாடகாவில் நடப்பது தவறு. இங்குள்ள எனது நண்பர்கள் பலர் அதைக் கண்டித்து சமூக ஊடகங்களில் பதிவுகளைப் பகிர்ந்துள்ளனர்.

வகுப்புகளுக்கு ‘தட்டம்’ அணியும் அவருடைய பேட்ச்மேட் அஃப்னி பாத்திமா, ஆடை தொடர்பாக தனது நண்பர்கள் அல்லது பள்ளி அதிகாரிகளிடமிருந்து எந்தப் பிரச்சினையையும் எதிர்கொண்டதில்லை என்று கூறினார். “எங்கள் நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

பள்ளியின் மேல்நிலைப் பிரிவின் முதல்வர் சங்கரநாராயணன், அனைவரும் நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளை மனதில் வைத்திருப்பதால், பெற்றோர் ஆசிரியர்கள் கழகக் கூட்டங்களில் மத உடைகள் விவாதப் பொருளாக இருந்ததில்லை என்று அடிக்கோடிட்டுக் காட்டினார். “வெறுமனே, நாம் எதையும் யார் மீதும் திணிக்கக் கூடாது. ஒருவரின் மத அடையாளத்துடன் இணைக்கப்பட்ட உணர்வுகள் இருக்கலாம். அனைவரையும் உள்ளடக்கி வரவேற்க வேண்டும் என்பதே எண்ணம். இந்தியா என்பது அதைக் குறிக்கவில்லையா?” என்று கூறுகிறார்.

பள்ளிகளில் சீருடைகளை பயன்படுத்த அரசு பரிந்துரை செய்தும், அதை கட்டாயமாக்கவில்லை என சங்கரநாராயணன் தெரிவித்தார். “இப்போது நிறைய பேர் நிதி நெருக்கடியில் உள்ளனர் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்கிறது. அவர்கள் மீது எதையும் திணிப்பது சரியல்ல. சில்லறை விற்பனையாளர்களுக்கு நாங்கள் ஆர்டர்களை வழங்கும்போது, ​​தள்ளுபடிகளைப் பயன்படுத்துமாறும், வாங்க முடியாத குழந்தைகளுக்கு கூடுதல் சீருடைகளை வழங்குமாறும் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் அதை எப்படி செய்கிறோம்” என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Hijab row karnataka neighboring kearala school idea is to be inclusive