கர்நாடகாவில் உள்ள சில கல்லூரிகளில் ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி புதன்கிழமை உத்தரவிட்டது.
பெங்களூருவில் உள்ள பள்ளிகள், புதுமுக கல்லூரிகள் (பியூசி), கல்லூரிகள் அல்லது பிற கல்வி நிறுவனங்களின் வாயில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டம் நடத்துவதற்கு, கூட்டம் கூடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு கர்நாடகா மாநில காவல்துறை தடை விதித்துள்ளது. ஹிஜாப் சர்ச்சை தொடர்பான மனுக்களை செவ்வாய்கிழமை விசாரித்த நீதிமன்றம், மாணவர்களும் பொதுமக்களும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
“முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளின் விவாதத்தை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் விசாரிக்க ஒரு பெரிய அமர்வை அமைக்க முடியுமா என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கருதுகிறது” என்று நீதிபதி தீட்சித் கூறினார். “தலைமை நீதிபதி அவஸ்தி அமைக்கக்கூடிய பெரிய அமர்வு முன் இடைக்கால கோரிக்கைகள் வைக்கப்பட வேண்டும் என்றும் இந்த் அமர்வு கருதுகிறது என்று நீதிபதி தீட்சித் உத்தரவில் குறிப்பிட்டார்.
கர்நாடகா மாநிலத்தில், பல்வேறு பகுதிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பாக எழுந்த சர்ச்சை மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட கர்நாடகா அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா புதன்கிழமை கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் சர்ச்சையை கடுமையாக சாடினார். பிகினி, 'கூங்காட்' அல்லது 'ஹிஜாப்' என்ன அணிய வேண்டும் என்பதை முடிவு செய்வது என்பது அந்த பெண்ணின் உரிமை என்று கூறி சாடினார்.
கர்நாடக அமைச்சரவை ஹிஜாப் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க முடிவு செய்தது; மேலும், இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணையை கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டார். உடுப்பியில் உள்ள அரசு முதுநிலைக் கல்லூரியில் ஹிஜாப் அணிவதைக் கேள்விக்குட்படுத்தி அதில் படிக்கும் 5 சிறுமிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது.
“நாங்கள் அமைச்சரவையில் ஹிஜாப் சர்ச்சை பற்றி விவாதித்தோம். ஆனால், உயர்நீதிமன்றம் இந்த விஷயத்தை விசாரித்து வருவதால், இந்த விவகாரத்தில் அமைச்சரவை இன்று எந்த முடிவையும் எடுப்பது பொருத்தமானதாக இருக்காது என்று நாங்கள் உணர்ந்தோம். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க முடிவு செய்யப்பட்டது. என்று சட்டம் மற்றும் சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் ஜே.சி. மதுசாமி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.