Himachal man sold his cow to buy a smartphone for online classes : உலகெங்கும் கொரோனா நோய் தொற்றால் பல்வேறு இயல்பு நடவடிக்கைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வியும் எதிர்காலமும் முற்றிலும் கேள்விக் குறியாகியுள்ள நிலையில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருகின்றது. ஆனால் தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை படிக்க வைக்கும் ஏழை பெற்றோர்களுக்கு ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினி என்பது மிகவும் சவலான ஒன்றாகும் தான்.
ஹிமாச்சல் மாநிலத்தில் உள்ள கங்க்ரா மாவட்டத்தில் உள்ள கும்மர் கிராமத்தை சேர்ந்தவர் குல்தீப் குமார். அவருடைய மகள் அனு மற்றும் மகன் வன்ஷ் முறையே நான்காம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வரும் அரசு பள்ளியில் அவ்விருவரும் படித்து வருகின்றனர். அங்கு அனைவருக்கும் இலவசமாக கல்வி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் ஹிமாச்சல் முழுவதும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குல்தீப் குமாருக்கு ஸ்மார்ட்போனும் இணையமும் எட்டமுடியாத இலக்காக இருந்திருக்கிறது.
மேலும் படிக்க : சிட்டு குருவிகளுக்காக 35 நாட்கள் இருளில் மூழ்கிய கிராமம்… சிவகங்கையில் நெகிழ்ச்சி
இருப்பினும் தங்களுக்கு வருமானம் அளித்து வரும் ஒற்றை பசுமாட்டை ரூ. 6000-க்கு விற்று ஸ்மார்ட்போன் வாங்கியுள்ளார். தன்னால் ஒரு ஸ்மார்ட்போன் கூட வாங்கி தன்னுடைய பிள்ளைகளுக்கு தர முடியவில்லையே என்ற எண்ணம் என்னை உறுத்திக் கொண்டே இருந்தது என்று கூறினார் குல்தீப். இந்த விவகாரம் சற்று அதிர்ச்சியை அளிப்பதாக இருப்பினும் பலரும் குல்தீப்பிற்கு மனம் உவந்து பாராட்டுகளை தெரிவித்ததோடு உதவியும் செய்து வருகின்றனர். பாலை விற்று தங்களின் வாழ்வை நடத்தி வந்த அவர்கள் ஸ்மார்ட்போன் வாங்க வங்கியிடம் கடன் கூட கேட்டுள்ளனர் என்பது வேதனையாக இருக்கிறது.
அவருக்கு உதவும் நோக்கில் நடிகர் சோனு சூட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குல்தீப் குறித்த தகவல்களை பகிருமாறு கேட்டுக் கொண்டார். நிச்சயம் அவருக்கு அவருடைய பசு திரும்பிக் கிடைக்க வேண்டும் என பலரும் தங்களின் கருத்துகளை கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil