இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் கட்சியின் 2 தலைவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு எண்ணப்பட்டது. பெரும்பான்மைக்கு 36 தொகுதிகள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இதனிடையே இமாச்சலப் பிரதேசத்தில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் 2 தலைவர்களுக்கு இடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்றும், மற்றொருவர் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிம்லாவில் கூடி, இமாச்சலப் பிரதேசத்தின் அடுத்த முதல்வரை தேந்தெடுக்க அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினர்.
இதனிடையே காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு முன்னதாக, கட்சியின் மாநிலத் தலைவர் பிரதீபா சிங், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முகேஷ் அக்னிஹோத்ரி மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோருக்கு ஆதரவாக அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தை அடைந்து முழக்கங்களை எழுப்பினர்.
ஹர்ஷ்வர்தன் சவுகான்
68 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச மாநிலத்தில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், முதல்வர் பதவிக்கான தேர்வுகளில் அக்கட்சி பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. இதில் மேற்கூறிய முதல் மூன்று போட்டியாளர்களுக்கு ஆதரவு குரல்கள் இருந்தாலும், ஆறு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த ஹர்ஷ்வர்தன் சவுகான் மற்றும் நான்கு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த சுதி சர்மா ஆகிய இருவரின் பெயர்கள் தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
ஹர்ஷ்வர்தன் சவுகான் இரண்டாவது தலைமுறை காங்கிரஸ் தலைவர். ஹர்ஷ்வர்தன் சவுகானின் தந்தை குமான் சிங் சவுகான் 1972 முதல் 1985 வரை சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள ஷில்லாய் தொகுதியில் 4 முறை வெற்றி பெற்றுள்ளார். ஆனால் 1990 இல் ஜனதா தளத்தின் ஜகத் சிங் நேகி அந்த தொகுதியை கைப்பற்றினார். தொடர்ந்து 1993 இல் ஹர்ஷ்வர்தன் சவுகான் தனது முதல் தேர்தல் பயணத்தில் அதை மீண்டும் கைப்பற்றுவதற்கு முயன்றார். ஆனால் அது நடக்கவில்லை.
ஆனால் அதன்பிறகு 1998, 2003 மற்றும் 2007, 2017, மற்றும் 2022ல் அதே தொகுதியில் பெற்றி பெற்ற ஹர்ஷ்வர்தன் சவுகான் 2012 தேர்தலில் பாஜகவின் பல்தேவ் தோமர் தோல்வியடைந்தார். அதே சமயம் இந்த முறை அதே தொகுதியில், பல்தேவ் தோமருக்கு எதிராக கடுமையான போட்டியை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது சிர்மூர் மாவட்டத்தின் டிரான்ஸ்-கிரி பகுதியில் வசிக்கும் ஹட்டீ சமூகத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து பாஜக தேர்தலை சந்தித்து. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹட்டீ சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்தை மத்திய அரசு விரைவில் வழங்கும் என்று உறுதியளித்தார்.
ஆனால் பாஜக தலைவர்கள் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், மத்திய அரசால் ஏன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பிய சவுகான் தோமருக்கு எதிராக 382 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சுதிர் சர்மா
பரபரப்பான மற்றொரு பெயர், முன்னாள் அமைச்சர் சுதிர் சர்மா, தர்மசாலா சட்டமன்றத் தொகுதியில் 3,285 வாக்குகள் வித்தியாசத்தில் முத்தரப்புப் போட்டியில் பாஜகவின் ராகேஷ் சவுத்ரியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் கேபினட் அமைச்சர் பண்டிட் சாந்த் ராமின் மகன், சர்மா எப்போதும் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங்குக்கு நெருக்கமானவராக கருதப்பட்டார்.
சர்மா 2012 இல் வீர்பத்ரா தலைமையிலான அரசாங்கத்தில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சராக இருந்தார். கடந்த 2003 பைஜ்நாத்தில் தனது முதல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சர்மா 2007-ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து, பைஜ்நாத் தொகுதி SC பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து 2012 தேர்தலில் சர்மா தர்மசாலாவில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், 2017 இல், பாஜகவின் கிஷன் கபூரிடம் தோல்வியடைந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கபூர் காங்க்ரா நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அந்த விட்டு, அக்டோபர் 2019 இல் நடைபெற்ற இடைத்தேர்தலுக்காக தனக்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் தோல்வியடைந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற தேர்தலில் சர்மா மீது கட்சி நம்பிக்கை வைத்து அவருக்கு அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, உள்துறை அமைச்சர் ஷா காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவிக்கு குறைந்தது எட்டு போட்டியாளர்கள் உள்ளனர் என்று கேலி செய்திருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த சர்மா, “காங்கிரஸ் ஒரு ஜனநாயகக் கட்சி, அங்கு யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம். அமித் ஷா எட்டு முதல்வர் வேட்பாளர்கள் என்று கூறினார். ஆனால் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று என்னால் சொல்ல முடியும். எப்படியிருந்தாலும், காங்கிரஸ் எவ்வளவு ஜனநாயகமானது என்பதை இது காட்டுகிறது. தலைமை குறித்து கட்சி மேலிடம் எடுக்கும் முடிவில் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறுவோம்”.
பதவிக்கான போட்டியில் கருதப்பட்ட மற்ற இரு தலைவர்களான ஆஷா குமாரி மற்றும் கவுல் சிங் தாக்கூர் ஆகியோர் உள்ளனர். டல்ஹவுசியில் ஆறு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த குமாரி, தற்போது தனது இடத்தை இழந்தாலும், எட்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த தாக்கூர், மண்டியின் தரங் தொகுதியில் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்று தற்போது பாஜகவின் பூரன் சந்த் தாக்கூரிடம் தோல்வியை சந்தித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil