இமாச்சல பிரதேசம், சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் (எஸ்சி) தொகுதியில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பாதுகாப்புப் பிரிவுக்கு நியமிக்கப்பட்ட ஒன் டைம் கமாண்டோ நந்த் லால், பாஜகவின் அறிமுக வீரரான கவுல் நேகியை (34) எதிர்கொள்கிறார்.
இந்த தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. ஆக இருக்கும் நந்த் லால் ஏற்கெனவே கடந்த மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றவர்.
நந்த் லால் 2007 இல் தனது முதல் தேர்தலில் 7,470 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2012ல் மீண்டும் 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2017 இல், பாஜக நேர்மைவாதி இங்கு பிஎஸ் டிரைக்கை களமிறக்கியது. ஆனால் அவர் மீண்டும் நந்த் லாலிடம் 4,137 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் இல்லமான பதம் அரண்மனை இங்கு அமைந்துள்ளதால், 40 ஆண்டுகளாக ராம்பூர் காங்கிரஸின் கோட்டையாக இருந்து வருகிறது. முந்தைய புஷாஹர் சமஸ்தானத்தின் வாரிசுகளின் செல்வாக்கு காரணமாக, 1982 முதல் காங்கிரஸ் அந்த இடத்தை இழக்கவில்லை.
காங்கிரஸ் வேட்பாளருக்கு இந்த தொகுதியில் வெற்றி பெறுவதற்கு ராஜா சாஹிபின் (வீரபத்ர சிங்) ஒரு நாள் பிரச்சாரம் மட்டுமே போதும் என்று கூறப்படுவதுண்டு. இதற்கு முன், முன்னாள் அமைச்சர் சிங்கி ராம், 1982 முதல் 2007 வரை, ஆறு முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் மேலிடத்தால் நந்த் லால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. அவர் விரைவில் வீரபத்ராவின் ஆதரவைப் பெற்றார். கடந்த ஆண்டு மரணமடைந்த வீரபத்ர சிங்கின் ஆதரவு இல்லாமல் நந்த் லால் தேர்தலில் போட்டியிடுவது இது முதல் முறையாகும். வீரபத்ராவின் மனைவியோ அல்லது அவரது மகனோ (மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் மற்றும் எம்எல்ஏ வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்) அவருக்கு ஆதரவு திரட்ட வரவில்லை.
மேலும் நந்த் லாலுக்கு எதிராக, இந்த தொகுதியில் காங்கிரஸ் கிளர்ச்சியாளர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிங்கி ராம் மற்றும் பிரிஜ் லால் ஆகியோர் பாஜகவின் நேகிக்காக பிரச்சாரம் செய்கிறார்கள்.
நந்த் லால், வீரபத்ர சிங்கின் வெற்றிடத்தை நிரப்புவது கடினம் என்றாலும், மற்றவர்கள் அவருக்காக பிரச்சாரம் செய்வதால் அவர் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறினார். “நாங்கள் மீண்டும் இந்த தொகுதியில் வெற்றி பெறுவோம்,” என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
அதே நேரம் பிரிஜ் லால், உள்ளூர் இளைஞர்கள் நேகியின் பின்னால் இருப்பதாகவும், அவரது தலைமையில் ஏபிவிபி உள்ளூர் ராம்பூர் கல்லூரியில் மாணவர் சங்க தேர்தலில் வென்றதாகவும் கூறினார். மக்கள் இனி ராணி மற்றும் டிக்கா (பிரதீபா சிங் மற்றும் விக்ரமாதித்ய சிங்) பேச்சை கேட்க மாட்டார்கள் என்றார்.
இந்த ஆண்டு பாஜக இந்தத் தொகுதியைக் கைப்பற்றும் என்று அவர் எதிர்பார்ப்பது ஏன் என்பது பற்றிப் பேசிய பிரிஜ் லால், இந்தத் தொகுதியில் 6-7 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் ஆன்மீக குருவும் உத்தரகாண்ட் பாஜக தலைவருமான சத்பால் மகாராஜைப் பின்பற்றுகிறார்கள், அவர் நவம்பர் 9 ஆம் தேதி இங்கு ஒரு பேரணியில் உரையாற்றினார்.
அவருக்கு ஆதரவாக வியாழன் அன்று நடைபெற்ற பேரணியில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கலந்து கொண்டு பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“