தவறான கட்டட வடிவமைப்பு, கண்மூடித்தனமான கட்டுமானப் பணிகள் மற்றும் புலம்பெயர்ந்த கட்டிடக் கலைஞர்கள், இந்த வாரம் தனது அரசு எதிர்கொண்ட அழிவுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டிய ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, எதிர்காலத்தில் கடுமையான கட்டிட விதிகளை சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சாலைகளை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக கூடுதல் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், அதன் பொறியாளர்கள் இன்னும் அறிவியல்பூர்வமாக மலைகளை வெட்ட வேண்டும் என்றும் முதல்வர் கூறினார்.
மாநிலத்தில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 70 பேர் இறந்துள்ளனர் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. “நஷ்டத்தில் இருந்து மீள எங்களுக்கு ஒரு வருடம் ஆகும். நான்கு ஆண்டுகளுக்குள், ஹிமாச்சல் சுயாட்சி பெறும். அடுத்த 10 ஆண்டுகளில், நாட்டின் முதல் மாநிலமாக இது மாறும், ”என்று முதல்வர் கூறினார்.
இந்த பேரழிவு குறித்து அவர் கூறுகையில், “அறிவியல் முறைகளைப் பயன்படுத்தாமல் மக்கள் வீடுகளைக் கட்டுகிறார்கள்.
சமீபத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களில், வடிகால் அமைப்பு மிகவும் மோசமாக உள்ளது. மலைகளுக்குள் தண்ணீர் செல்வதை அறியாமல் தண்ணீரை வெளியேற்றி, மக்கள் அவற்றை உடையக்கூடியதாக ஆக்குகிறார்கள்.
சிம்லா ஒன்றரை நூற்றாண்டு பழமையானது, அதன் வடிகால் அமைப்பு சிறப்பாக இருந்தது. இப்போது நல்லாக்களில் (runlets) கட்டிடங்கள் உள்ளன. இன்று இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகள் கட்டமைப்பு பொறியியல் தரத்தை எட்டவில்லை. நான் 'பிஹாரி கட்டிடக் கலைஞர்கள்' என்று அழைக்கும் புலம்பெயர்ந்த கட்டிடத் தொழிலாளிகள் (மேசன்) இங்கு வந்து கட்டுகிறார்கள். எங்களிடம் உள்ளூர் கொத்தனார்கள் இல்லை.
மோசமான வடிகால் வசதியே சாலைகள் சேதமடைவதற்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். “எங்கள் செயலகம் ஒன்பது மாடிக் கட்டிடம், சம்மர் ஹில்லில் உள்ள ஹிமாச்சல் பல்கலைக்கழகத்தில் உள்ள (மேம்பட்ட படிப்பு Advanced Study) கட்டிடம் எட்டு மாடி கொண்டது.
இந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டபோது தொழில்நுட்பம் இல்லை ஆனால் கட்டமைப்பு இருந்தது. இந்த கட்டிடங்கள் ஆபத்தில் இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 4 வழிச்சாலை குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்தப் பகுதியில் வாகன நெருக்கடியை சமாளிக்க சுரங்கங்கள் மட்டுமே சாத்தியமான வழி. கல்காவிற்கும் சிம்லாவிற்கும் இடையே ரயில் இணைப்புகளை ஏற்படுத்த ஆங்கிலேயர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகளை உருவாக்கினர்.
அன்றிலிருந்து சுரங்கப்பாதைகள் நிலையாக நிற்கின்றன. சுரங்கப்பாதைகளை உருவாக்குவது மிகவும் விலை உயர்ந்த விஷயம், ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செலவுகளைப் பற்றி கவலைப்படக்கூடாது.
கடந்த சனிக்கிழமை பர்வானூ-சோலன் திட்டத்தை பார்வையிட்ட NHAI இன் பிராந்திய தலைவர் அப்துல் பாசித் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு 68 சுரங்கப்பாதை திட்டங்கள் உள்ளன, அவற்றில் 11 முடிக்கப்பட்டுள்ளன, மீதமுள்ளவை கட்டுமானத்தில் உள்ளன, முந்தையவற்றில் இணைக்க முடியாத பல மேம்பாடுகளுடன் இது அமைப்படுகிறது.
நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவதற்காக பாறைகளை தவறாக வெட்டியதே நிலச்சரிவுக்கு காரணம் என்றும் முதல்வர் குற்றம்சாட்டினார். “மலைகளை வெட்ட ஒரு வழி இருக்கிறது. மலைகள் எப்போதும் 45 டிகிரி, 60 டிகிரி போன்ற கோணங்களில் சரிவுகளில் வெட்டப்படுகின்றன, ஆனால் கல்காவிற்கும் சிம்லாவிற்கும் இடையில் பல இடங்களில் செய்யப்பட்டது போல் 90 டிகிரியில் இல்லை,” என்று அவர் கூறினார்.
கண்மூடித்தனமான கட்டுமானத்தை குற்றம் சாட்டிய அவர், "ஆறு வீடுகளுக்குள் நுழையவில்லை, வீடுகள் தான் ஆற்றில் நுழைந்தன" என்று கூறினார்.
மேலும் காலநிலை மாற்றத்தின் விளைவையும் அவர் குறிப்பிட்டார்: "லாஹவுல்-ஸ்பிடியில் நாங்கள் ஒருபோதும் மழையைப் பார்ப்பதில்லை, ஆனால் இந்த ஆண்டு அந்த பகுதி மழையைப் பெற்றது."
ஜூலை முதல் மாநிலம் சுமார் 300 உயிர்களை இழந்துள்ளதாகவும், 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பை சந்தித்துள்ளதாகவும் முதல்வர் கூறினார்.
இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசு விதிமுறைகளை மாற்ற வேண்டும். மலையக மாநிலங்களும், வடகிழக்கு மாநிலங்களும் அதிகம் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஒரு கிலோமீட்டர் பழுதடைந்த சாலையை சீரமைக்க ரூ.1.5 லட்சத்தை மத்திய அரசு வழங்குகிறது, அதில் ஒன்றுமே இல்லை என்றார்.
இமாச்சலப் பிரதேசம் பாராளுமன்றத்தில் சிறிய பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பதால் புறக்கணிக்கப்படுகிறது, ஆனால் அது "வட இந்தியாவின் நுரையீரல்" என்பதால் மத்திய அரசு சிறப்பு தொகையை மாநிலத்திற்கு வழங்க வேண்டும் என்று சுகு கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.