Advertisment

ஷாக் அடித்த கரண்ட் பில்... ஒரு மாதத்துக்கு ரூ.210 கோடி: அதிர்ந்து போன இமாச்சல் தொழிலதிபர்!

முந்தைய மாத மின்சார கட்டணமாக அவர் ரூ2,500 மட்டுமே கட்டணமாக செலுத்திய நிலையில, தற்போது ரூ210.42 கோடி ரசீது வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Electricity metre

இமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில், தொழிலதிபர் லலித் திமான் என்பவருக்கு 2024  டிசம்பருக்கான மின்சார கட்டணமாக ரூ210.42 கோடிக்கு ரசீது வந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளது. அதற்கு முந்தைய மாத மின்சார கட்டணமாக அவர் ரூ2,500 மட்டுமே கட்டணமாக செலுத்திய நிலையில, தற்போது ரூ210.42 கோடி ரசீது வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

இமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான கான்கிரீட் வணிக உரிமையாளராக இருப்பவர் லலித் திமான். இவருக்கு 2,10,42,08,405 (ரூ. 210 கோடி) மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ரசீது வந்துள்ளது. இந்த ரசீது கடந்த ஜனவரி 8ம் தேதி வெளியிடப்பட்டது.இதில் 264 யூனிட் மின் நுகர்வுக்கு மட்டுமே மின் கட்டணம் வழங்கப்பட்டது. மேலும், 30 கோடி ரூபாய்க்கு மேல் மானியமும், இரவு நேரச் சலுகையாக சுமார் 13.9 கோடி ரூபாய் பில்லுக்குப் பயன்படுத்தப்பட்டது.

ஹிமாச்சல பிரதேச மாநில மின்சார வாரியம் லிமிடெட் வழங்கிய அசல் பில்லின்படி, நிலுவைத் தேதிக்கு முன் செலுத்த வேண்டிய தொகை ரூ.210.42 கோடி. நிலுவைத் தேதிக்குப் பிறகு பில் செலுத்த வேண்டும் என்றால், அந்தத் தொகை ரூ.213,44,18,465 ஆக கணக்கிடப்பட்டிருந்தது. இந்த ரசீதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து உடனடியாக மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மின்கட்டணம் வந்துள்ளதாக கூறியுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து மின்சாரத் துறை விரைவாகத் தவறை உடனடியாக சரி செய்து, மின கட்டணத்தை, ரூ. 4,047 ஆகத் திருத்தியது. இது குறித்து மின்சாரத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இது ஒரு மென்பொருள் செயலிழப்புதான்,நுகர்வோர் தவறான பில் பெற காரணமாக இருந்துள்ளது. அதன் பின்னர் இந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டது. இதேபோல் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுப்போம்," என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisement

இதற்கிடையில், கடந்த மாத தொடக்கத்தில், வீடுகளில் அசாம் மின் விநியோக நிறுவனம் லிமிடெட் (APDCL) ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட் மீட்டர்களை அசாம் நிறுவியுள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களை விட மாநிலத்தின் கிராமப்புறங்களில் அதிக ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவியுள்ளது பெரும் குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசால் தொடங்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் (RDSS) கீழ் நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் நிறுவப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Himachal Pradesh Electricity
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment