Advertisment

100 ஆண்டுகளாக நடைபெறும் ஆராய்ச்சி... யார் கண்ணிலும் படாமல் ஏமாற்றும் பனிமனிதன்...

ஆசியாவின் கறுப்பு கரடி, திபெத்தின் பழுப்பு நிறக் கரடி, அல்லது இமயமலையின் கறுப்பு நிற கரடி என எந்த வகை விலங்காகவும் அது இருக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Himalayan Yeti Myths

Amitabh Sinha

Advertisment

Himalayan Yeti Myths and Facts : இந்த மாத துவக்கத்தில், இமயமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றிருந்தனர் இந்திய ராணுவ வீரர்கள். அவர்கள் தங்களின் பயணத்தின் போது 32 இன்ச் நீளம் மற்றும் 15 இன்ச் அகலம் கொண்ட விலங்கின் ஃபுட் பிரிண்ட்டினை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் குறிப்பின் படி, உலகின் நீளமான கால்களைக் கொண்டவரின் பாத அளவுகள் கூட 15.78 இன்ச் நீளம் தான். ஒரு சராசரி மனிதனின் பாதங்கள் 2 முதல் 4 இன்ச் அகலம் மட்டுமே கொண்டவை. கொரில்லா வகை குரங்கினங்களின் பாத அளவுகளும் கூட 10 முதல் 14 இன்ச் மட்டுமே.

இந்திய ராணுவம் தாங்கள் பார்த்த காட்சிகளை புகைப்படம் எடுத்து ஆன்லைனில் அப்லோட் செய்திருக்கின்றனர். இமயமலைத் தொடரில் வாழும் யெத்தி என்ற பனிமனிதனின் கால்த்தடங்களாக இது இருக்கலாம் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : Snowman: நேபாளத்தில் பனி மனிதனின் கால் தடத்தைக் கண்ட இந்திய ராணுவம்!

Himalayan Yeti Myths : நாட்டுப்புற கதைகளில் மட்டுமே வசித்த ராட்சத மனிதன்

இமயமலைத் தொடர்களில் வசிக்கும் மக்களிடத்தில் நிலவி வரும் பல்வேறு புராணக்கதைகளில் இந்த யெத்தி (எட்டி) என்ற மனிதன் குறித்த கதைகள் இடம் பெற்ற வண்ணம் இருக்கின்றன. இருந்தாலும், இது வரை நேரில் பார்த்ததிற்கான எந்த விதமான தரவுகளும் நம்மிடம் இல்லை என்பதே உண்மை. டின்டின் படத்திலும், புத்தகத்திலும் மட்டுமே இவ்வளவு பெரிய ராட்சத பனிமனிதன் பற்றிய கதைகள் இடம் பெற்றன.

இந்திய ராணுவ வீரர்கள் மட்டும் இது போன்ற ராட்சத கால்த்தடத்தை பார்த்ததாக கூறவில்லை. இதற்கு முன்பு, கடந்த 100 ஆண்டுகளாக இமயமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு செல்லும் சாகசவீரர்கள், மலையேற்ற பயிற்சியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைவரும் திரும்பி வரும் போது யெத்தி பற்றிய கதையுடன் தான் திரும்பி வருகின்றனர்.

அங்கு சுற்றிக்காட்டும் கைய்டுகள் இந்த நம்பிக்கையை அங்கு வரும் மக்கள் மனதில் நிலை நிறுத்த முயற்சி செய்கின்றார்கள். சொலரோ நேரில் பார்த்ததாகவும் கூறுகின்றனர். க்ரீக் நாட்டில் இருந்து வந்த புகைப்படக் கலைஞர் என்.ஏ. டோம்பாஸி 1925ம் ஆண்டு யெத்தியை 200 முதல் 300 யார்ட்கள் தொலைவில் இருந்து பார்த்ததாக கூறியுள்ளார்.

1925ம் ஆண்டு சிக்கிம் ஹிமாலயா பகுதியில் தன் கண்முன்னே பனிப்பகுதியின் மேலே ஏறி கீழே இறங்கி ஒரு உருவம் ஓடியது. பனிப்பிரதேசத்தில் அதை பார்க்க மிகவும் கரிய நிறம் கொண்டதாகவும், ஆடைகள் ஏதும் இன்றியும் இருந்தது. அதன் காலடித்தடங்கள் மனிதனுடையதைப் போலவே இருந்தது. அதன் நீளம் வெறும் 5 அங்குலம் மட்டும் தான் என்று கூறியுள்ளார் அவர்.

பனி மனிதனைத் தேடி தொடரும் பயணங்கள்

இது நாள் வரையில் இமயமலைத் தொடர்களில் புதிய வகையில் காலடித்தடங்கள் இருப்பதை மக்கள் ஆங்காங்கே கண்டு வந்தனர். 1951ம் ஆண்டு இலங்கையில் பிறாந்த வளார்ந்த எரிக் ஷிப்டன் மற்றும் மைக்கேல் வார்ட் இமயமலைக்கு சென்ற போது யெத்தியின் காலடி தடத்தினை புகைப்படங்களாக எடுத்தனர். அதன் அளவு 13 இன்ச் நீளமாகவும், 8 இன்ச் அகலம் கொண்டதாகவும் இருந்தது.

இதனைத் தேடிக் கொண்டு பல்வேறு காலகட்டங்களில் அவர்கள் இருவரும் இமயமலைச் சரிவில் சுற்றி வந்தனர். ஆனாலும் அவர்களால் முடி, எலும்புகள், எச்சம் ஆகியவற்றையே கண்டறிய முடிந்தது.

ஜூலை மாதம் 1986ம் ஆண்டு மலையேற்ற வீரர் ரெய்ன்ஹோல்ட் மெஸ்னர் திபெத் மலைச்சாரலில் இது போன்ற மிகப்பெரிய காலடித்தடங்களை கண்டதாக கூறினார்.

“மற்ற காலடித்தடங்களை விட மிக வித்தியசமாக இருந்தது. மேலும் அந்த உருவம் அப்போது தான் அங்கு நகர்ந்து சென்றிருக்க கூடும் என்றும் தன்னுடைய புத்தகமான யெத்தி : ஆன் அபாமினபிள் ஹிஸ்டரி என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் க்ரஹாம் ஹொய்லாந்த்.

சர் ஜான் ஹண்ட், சார் எட்மண்ட் ஹிலாரி போன்ற மலையேற்ற வீரர்களும் தங்களின் அனுபவத்தைப் பற்றி கூறீயுள்ளனர்.

ஆராய்ச்சிகள்

இது போன்ற உயிரினங்கள் இருப்பை உறுதி செய்ய பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சமீபத்தில் 2014 மற்றும் 2017ல் இது தொடர்பான முக்கிய முடிவுகளை வெளியிட்டது ராயல் சொசைட்டி.  2014ம் ஆண்டு, மரபுக்கூறுகள் ஆராய்ச்சியாளர், அந்த பகுதியில் இருந்து பெறப்பட்ட 30க்கும் மேற்பட்ட முடிகளை வைத்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டார்.

இரண்டு முடிகளின் மாதிரிகளை தவிர மற்ற அனைத்து முடிகளின் மாதிரிகளும் மற்ற விலங்கினங்களோடு ஒத்துப்போவதை அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் இப்படி ஒரு உயிரினம் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அங்கு மிக மிக அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

2017ம் ஆண்டு டியான்யிங் லான் என்பவர் தலைமையில் பஃப்பல்லோ பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், இமயமலையில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் சில யெத்தியுடையதாக இருக்கலாம் என்று கூறியதோடு, அந்த விலங்கினம் தற்போது முற்றிலும் அழிந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

பனிமனிதன் உண்மையா - பொய்யா ?

உள்ளூரில் வாழும் கருப்பு மற்றும் பழுப்பு நிற கரடிகளாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.  1997ல் எரிக் ஷிப்டன் 1951ல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பெரிய பெரிய கால்களைக் கொண்ட மனிதர்களின் காலடித் தடங்களாகவும் இருக்கலாம் என்று கூறினார் அவருடன் பயணப்பட்ட மைக்கேல் வார்ட் என்ற மருத்துவர். ஏன் என்றால் பல வருடங்கள் நாங்கள் அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். அங்கு அப்படி ஒரு விலங்கு வாழ்வதற்கான ஆதாரங்களை எங்களால் திரட்ட இயலவில்லை.

ஒவர்லேப்பிங் மூலமாகவும் இது போன்ற காலடித்தடங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். அந்த காலடித்தடங்கள் லங்கூர் குரங்குகள் அல்லது பழுப்புநிறக் கரடிகளுடையதாகவும் இருக்கலாம். ஆனால் வால்கள் இருந்ததிற்கான அடையாளங்களை எங்களால் கண்டறிய இயலவில்லை.

சில மனிதர்கள் வெறுங்காலில் இமயமலையில் பயணித்ததையும் நான் நேரில் பார்த்ததுண்டு என்று கூறுகிறார். The Yeti Footprints: Myth and Reality என்ற புத்தகத்தில், 1951ம் ஆண்டு மனிதர்களுக்கும், இதர விலங்குகளுக்குமான பாதங்களில் இருக்கும் வித்தியாசங்களை எங்களால் அறிந்து கொள்ள இயலவில்லை. ஒரு வேலை அது மனிதனின் அழிக்கப்பட்ட கால்தடங்களாகவும் கூட இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவின் கறுப்பு கரடி, திபெத்தின் பழுப்பு நிறக் கரடி, அல்லது இமயமலையின் கறுப்பு நிற கரடி என எந்த வகை விலங்காகவும் அது இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். பனி உருகுவதால் அந்த பாத அமைப்பு சற்று பெரிதாவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாக The Yeti — Not a Snowman என்ற கட்டுரையை ஜே.ஏ. மெக்நீலி, ஈ.டபிள்யூ. க்ரோனின், எச்.பி எமெரி உள்ளிட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய ராணுவத்தினர் கண்டது தான் இதுவரையில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய காலடித்தடங்கள் ஆகும். உள்ளூரில் இருக்கும் கரடிகளின் காலடித்தடமாக இருக்கலாம் என்கிறார் Yeti: The Ecology of a Mystery புத்தகத்தின் எழுத்தாளார் டேனியல் சி. டெய்லர்.

இது தொடர்பான முழுமையான கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

Himalaya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment