Deeptiman Tiwary
இந்திய திருநாட்டின் வரலாறு, 1947 முதல் 1977ம் ஆண்டு வரையிலான 30 ஆண்டு காலகட்டத்தில் 20 ஆண்டுகள் மவுலானா அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட கல்வி அமைச்சர்களாலும், 10 ஆண்டுகள் இடதுசாரிகளாலும் சிதைக்கப்பட்டுள்ளதாக சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் எம் நாகேஸ்வர ராவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகேஸ்வர ராவ் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, மவுலானா அபுல் கலாம் ஆசாத் – 11 ஆண்டுகள் (1947 -58), ஹிமாயூன் கபீர், எம் சி சக்லா, பக்ருதீன் அலி அகமது – 4 ஆண்டுகள் ( 1963-67), நுருல் ஹாசன் – 5 ஆண்டுகள் (1972-77) மீதி 10 ஆண்டுகள், விகேவிஆர் ராவ் உள்ளிட்ட இடதுசாரி கட்சியினர் இந்திய திருநாட்டின் வரலாற்றை சிதைக்கும் பணியில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த டுவிட்டர் பதிவை Story of Project Abrahamisation of Hindu Civilization என்ற பெயரிலேயே ஆரம்பித்துள்ள நாகேஸ்வர ராவ், அடுத்து 6 குறிப்புகளை குறிப்பிட்டுள்ளார்
1. இந்துக்களுக்கு கல்வியறிவு பெற மறுப்பு
2. இந்து மதத்தில் அதிகளவில் மூடநம்பிக்கைகள் உள்ளது எனக்கூறி இழிவுபடுத்துதல்
3. ஆபிரகாமினிச கல்வி
4. ஆபிரகாமினிச ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு
5. இந்துக்களை அவர்களது அடையாளங்களை வைத்து அசிங்கப்படுத்துதல்
6. இந்து மற்றும் இந்து சமூகத்திற்கு அழிவு ஏற்படுத்துல் உள்ளிட்ட குறிப்புகளுடனேயே மேற்கூறிய வரிகள் இடம்பெற்றுள்ளன.
நாகேஸ்வர ராவ், தற்போது ஊர்க்காவல் படை, தீயணைப்பு சேவை மற்றும் சிவில் டிபன்ஸ் பிரிவுகளில் இயக்குனர் ஜெனரலாக உள்ளார். இவர் வரும் 31ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்த டுவிட்டர் பதிவு குறித்த கேள்விக்கு அதில் பதிலோ எவ்வித விளக்கமோ அளிக்கவில்லை.
ஐபிஎஸ் அந்தஸ்தில் பணியில் இருப்பவர்கள், அறிவியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட புத்தகங்களை எழுதலாமே தவிர, அதில் அவர்களது சொந்த கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது என்று நடைமுறை உள்ளது
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நமது நாட்டின் சத்யமேவ ஜெயதே – அதாவது வாய்மையே வெல்லும் என்பது தற்போது நடைமுறையில் இல்லை. நமது அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக, நமது கல்விமுறையில் எண்ணிலடங்கா பொய்களை புகுத்திவிட்டனர். நாமெல்லாம் இந்த நாட்டின் நயவஞ்சகர்களே அன்றி வெற்றிபெற்றவர்கள் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவுகள் தொடர்பாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பாக நாகேஸ்வர ராவை தொடர்புகொள்ள முற்பட்டபோது பிஸி ஆக இருப்பதாக கூறி சந்திப்பை தவிர்த்துவிட்டார்.
2018ம் ஆண்டில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், துணை இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போரின் காரணமாக, நாகேஸ்வர ராவ், 2018ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி சிபிஐ இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற சில நாட்களிலேயே, ஐசிஐசிஐ கடனுதவி வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த விசாரணை அதிகாரி இடமாற்றம் உள்ளிட்ட 100 அதிகாரிகளின் இடமாற்றங்களுக்கு உத்தரவிட்டிருந்தார். நாகேஸ்வர ராவ், கடந்த ஆண்டு ஜூலை முதல் ஊர்க்காவல் படை, தீயணைப்பு சேவை மற்றும் சிவில் டிபன்ஸ் பிரிவுகளில் இயக்குனர் ஜெனரலாக உள்ளார்.
இந்துத்துவா கொள்கையின் காரணமாக பணிக்காலத்தின் போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவந்த நாகேஸ்வர ராவ், கோல்கட்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டிரேடிங் நிறுவனத்தில், ராவின் மனைவி நிதி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்குள் ஆளாகியிருந்தார். தன் குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நாகேஸ்வர ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நாகேஸ்வர ராவ், ஜூலை 25ம் தேதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இந்துக்களின் மதிப்பிழப்பு மற்றும் கல்வித்துறை அமைச்சகர்களின் டைம்லைன் என்றே தலைப்பு இட்டிருந்தார்.
1958ம் ஆண்டில் மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் மறைவிற்கு பிறகு, ஹிமாயூன் கபீர் கல்வி அமைச்சராக பதவியேற்றார். எம் சி சக்லா, 1963 முதல் 66 வரை கல்வி அமைச்சராக இருந்தார். பின்னர் பக்ருதீன் அலி அகமது கல்வி அமைச்சர் பொறுப்பை ஏற்றார். 1971 முதல் 1977ம் ஆண்டு வரை சய்யீத் நுருல் ஹசன், கல்வித்துறை பொறுப்பை வகித்து வந்தார்.
தமிழகத்தின் முன்னணி பொருளாதார நிபுணரான விகேவிஆர் ராவ், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் துவங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். பின் டெல்லி பல்கலைகழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட நிலையில், திட்டக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார். 1969 முதல் 1971ம் ஆண்டில் கல்வி அமைச்சராகவும் பதவிவகித்தார்.
நாகேஸ்வர ராவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, மேற்கண்டவர்கள் அனைவரும் நாட்டின் தொழில்வளர்ச்சியை சிதைத்துவிட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்பதால், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள சாலைகள் உள்ளிட்டவைகளுக்கு கிருஷ்ணா, பாண்டவர்கள் உள்ளிட்ட பெயர்களை வைக்காமல், இஸ்லாமியர்களின் பெயர்களை வைத்துள்ளனர். டெல்லியை உருவாக்கியவர்களின் உண்மையானவர்களை அவர்கள் மறைத்து விட்டனர்.
இஸ்லாமிய கருத்துகளை அதிகளவில் பரப்பப்பட்டு வந்த நிலையில் 1980ம் ஆண்டில் பலர் எடுத்த நடவடிக்கைகளினாலேயே, ராமாயணம், லவகுசா உள்ளிட்ட இதிகாச தொடர்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப துவங்கின.
ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளின் கடினமான உழைப்பால், தற்போது மீண்டும் இந்து சமூகம் தழைத்தோங்க துவங்கியுள்ளது இதன்காரணமாகவே, 1985ம் ஆண்டில் 2, 1989ம் ஆண்டில் 85 மற்றும் 1991ம் ஆண்டில் 120 எம்பிக்கள் என பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சி பெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பதிவில் ராவ் குறிப்பிட்டுள்ளதாவது, 1990ம் ஆண்டில் மீண்டும் இந்துக்களின் மீதான மதிப்பிழப்பு துவங்கியது. இந்துக்களுக்கு எதிரானவர்கள், பொதுக்கல்வி, வழிமுறைகள் உள்ளிட்டவைகளில் இந்துக்களுக்கு எதிரான கருத்துகள் பரப்ப துவங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்சிஇஆர்டி கல்விமுறையில் ஆபிரகாமினிசம் அதிகளவே உள்ளது.இதேநிலையே, கலை மற்றும் சினிமாவிலும் தொடர்கிறது. திரைப்படங்களில், அதிகளவில் கிறிஸ்டோ – இஸ்லாமிக் கருத்துகள் கொண்ட பாடல்கள், விசுவல் காட்சிகள் அதிகளவில் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில், நாகேஸ்வர ராவ், இந்தியாவில் உள்ள என்ஜிஓக்களுக்கு வரும் வெளிநாட்டு நிதிக்கு முழுவதுமாக தடைவிதிக்க வேண்டும் என்ற தலையங்கம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சிலநாட்களுக்கு முன்னர், மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடைக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதேபோல், சினிமாவில் நல்ல கதைகள் உள்ள திரைப்படங்கள் எடுக்க இந்து – சமஸ்கிருத இலக்கியங்கள் பேருதவி புரியும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்துக்களுக்கு எதிரான சுய வெறுப்பு கொண்டவர்களை தான் காமெடியனாக பார்ப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil