/tamil-ie/media/media_files/uploads/2021/01/Godse.jpg)
Hindu Mahasabha opens Nathuram Godse Library Portray True Nationalist
Hindu Mahasabha opens Nathuram Godse Library : விஸ்வ இந்தி திவாஸின் அகில் பாரதிய இந்து மகாசபை, கடந்த ஞாயிற்றுக்கிழமை குவாலியரில் மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் வாழ்க்கை மற்றும் சித்தாந்தத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் நூலகம் திறக்கப்பட்டது.
தவுலத் கஞ்சில் உள்ள மகாசபாவின் அலுவலகத்தில் கோட்ஸே ஞான ஷாலா திறந்து வைக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் படுகொலைக்கு கோட்சே எவ்வாறு திட்டம் தீட்டினார், அவருடைய கட்டுரைகள் மற்றும் உரைகள் பற்றிய இலக்கியங்கள் இதில் உள்ளன.
“கோட்ஸே என்ற உண்மையான தேசியவாதியை உலகிற்கு முன் வைக்க இந்த நூலகம் திறக்கப்பட்டது. அவர் பிரிக்கப்படாத இந்தியாவுக்காக நின்று, இறந்தார். இந்தக் காலத்து இளைஞர்களில் கோட்ஸேவின் உண்மையான தேசியவாதத்தை ஊக்குவிப்பதே நூலகத்தின் நோக்கம்” என மகாசபாவின் துணைத் தலைவர் ஜெய்வர் பரத்வாஜ் கூறினார்.
ஜவஹர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னா ஆகியோரின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக இந்தியா பிளவுபட்டுள்ளதாக பரத்வாஜ் குறிப்பிட்டார். மேலும், இவர்கள் இருவரும் தேசத்தை ஆள விரும்பினார்கள். அதே நேரத்தில் கோட்சே அதை எதிர்த்து நின்றார்.
திட்டம் தீட்டி காந்தியைப் படுகொலை செய்யப்பட்ட நகரமான குவாலியர், கோட்சேவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நூலகத்தின் தளமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, கோட்சேவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் மகாசபாவால் குவாலியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டது. காங்கிரஸின் சலசலப்பைத் தொடர்ந்து இது அகற்றப்பட்டது.
இதற்கிடையில், இந்தியப் பிரிவினை என்பது மகாத்மா காந்தியின் தவறு என்று புரோடெம் சபாநாயகர் ராமேஸ்வர் சர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். "இந்தியாவை இரண்டு பகுதிகளாகப் பிரிப்பதில் முகமது அலி ஜின்னா வெற்றி பெற்றது மகாத்மா காந்தியின் தவறு" என்று அவர் போபாலில் செய்தியாளர்களிடம் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.