Sakshi Dayal
Hindu Sena : ஹிந்து சேனா என்ற அமைப்பு, 2011ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நான் - ப்ரோஃபிட் ஆர்கனிசேசனாக பதிவு செய்யப்பட்ட இந்த அமைப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையே நடைபெற இருந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு கடும் கண்டனம் விதித்திருந்தது. மேலும் டெல்லியில் அமைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் இண்டெர்நேசனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது 2016ம் ஆண்டு தாக்குதல் நடத்தியது.
இதனுடைய தலைவர் விஷ்ணு குப்தா, இதற்கு முன்பும் பல்வேறு இடங்களில் கலகத்தில் ஈடுபட்டத்தால் கைது செய்யப்பட்டவர். 2015ம் ஆண்டு, கேரளா அரசு விருந்தினர் மாளிகையில் பீஃப் கறி சமைக்கப்படுவதாக கூர்கான் போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு கால் செய்தவர். பலுசிஸ்தான் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் மற்றும் 2017ம் ஆண்டு ஜந்தர் மந்தரில் டொனால்ட் ட்ரம்ப் பிறந்தநாளை கொண்டாடியவர்கள் என்று இவர்களின் அட்டகாசம் அதிகம்.
ஹரியானாவின் தலைவர் “இந்த அமைப்பில் சுமார் 3 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஹரியானாவில் 6000 பேரும், கூர்கானில் 5000 பேரும் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறும் நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான ஞாயிற்றுக் கிழமையன்று, அப்பகுதியில் இயங்கி வந்த மாமிச கடைகளை மூடக் கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அந்த அமைப்பு பேசிய போது, அனுமதி வாங்கி நடத்தப்படும் மாமிசக் கடைகளால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நவராத்திரி காலங்களில், இறைச்சியை வெட்டுவது. அதன் இரத்தத்தை தெருவில் தெளிப்பது போன்றவை இந்து மக்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக அமைந்துள்ளது.
குருகிராம் காவல்த்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் நாங்கள் அந்த கடைகளை மூடும் பணிகளை மேற்கொண்டோம் என்று அவர் கூறினார். கூர்கானில் உள்ள பலம் விஹார் மற்றும் ராஜிந்திர பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த 15ற்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளை கட்டாயப்படுத்தி மூடியுள்ளனர்.
2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 300 கடைகளை வம்படியாக மூடியுள்ளனர். அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 500 கடைகளை மூடியுள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்திலும் கடை உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்து கடை மூடப்பட்டதாக ஹிந்து சேனா கூறினாலும், உரிமையாளர்கள் தங்களை இவர்கள் மிரட்டினார்கள் என்று கூறியுள்ளனர்.
இரண்டு முறை மட்டுமே புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன
இவர்கள் இத்தனை அட்டூழியங்கள் செய்து வந்த போதும், இது நாள் வரையில் இரண்டே இரண்டு புகார்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. 2018ம் ஆண்டு, வங்கத்தை சேர்ந்த மாதவ் கரன் என்பவர், ராஜீவ் நகரில் அவர் வைத்திருந்த மீன் கடையை மூடச்சொல்லி சன்க்யூத் இந்து சங்கர்ஷ் சமித்தி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மிரட்டவதாகவும், கடையை மூடவில்லை என்றால் கொலை செய்துவிடுவோம் என்றும் கூறியுள்ளனர். 6 மாதங்கள் கழித்தே அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அங்கு விசாரணை செய்த போது, அந்த புகார் திரும்பப் பெறப்பட்டதாக கூறுகின்றனர்.
இது குறித்து இந்து சேனா கூறும் போது, நாங்கள் எங்களுடைய சித்தாந்தங்களில் ஒத்த கருத்து உடையவர்களுடன் தான் இணைவோம். நாங்கள் எந்த கட்சியின் பின்னணியில் இருந்தும் செயல்படவில்லை. இந்துத்துவா கொள்கையும், சோசியல் மோட்டிவேசன் இருப்பினும் நாங்கள் அரசியலில் ஈடுபடமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.