அரசு மருத்துவமனையில் எல்லோரும் வேண்டுவதற்கென தனி அறை

இந்து, முஸ்லிம், சீக்கியம், கிறிஸ்துவம் உள்ளிட்ட எல்லா மதத்தினரும் சமமாக, தங்கள் அன்பானவர்கள் குணமடைய வேண்டும் என வேண்டுவதற்கென ஒர் அறை திறக்கப்பட்டுள்ளது.

சண்டிகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்து, முஸ்லிம், சீக்கியம், கிறிஸ்துவம் உள்ளிட்ட எல்லா மதத்தினரும் சமமாக, தங்கள் அன்பானவர்கள் குணமடைய வேண்டும் என வேண்டுவதற்கென ஒர் அறை திறக்கப்பட்டுள்ளது.

சண்டிகரில் உள்ள மருத்துவமனைகளில் இவ்வாறு எல்லா மதத்தினரும் வேண்டுவதற்கென அறை திறக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இந்த அறைக்கான வழிகாட்டும் பலகைகளும் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அறை அமைந்துள்ள தளத்தில் 10 ஆப்பரேஷன் தியேட்டர்களும் உள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அந்த அறையில் அமர்ந்து தங்களுடைய மதத்தின்படி வேண்டிச் செல்கின்றனர்.

எல்லா மதத்தினரும் ஒன்றாக அமர்ந்து தங்கள் மதத்தின்படி வேண்டுவது ஒருவித மன அமைதியை தருவதாக மக்கள் கருதுகின்றனர்.

“நான் காலையில் இறைவனை வேண்டும்போது, என்னருகே முஸ்லிம் நபர் ஒருவர் அவரது முறைப்படி வேண்டினார். எல்லா மதத்தினரும் ஒரே இடத்தில் சந்திப்பது மன அமைதியை தருகிறது”, என தன் உறவினர் நலம்பெற இறைவனை துதிக்க வந்த பல்ஜிந்தர் சிங் என்பவர் தெரிவித்தார்.

“இந்த மாதிரியான கஷ்டமான காலங்களில் எல்லோரும் இறைவனை வேண்ட வேண்டுமென்று நினைப்பர். அந்த மாதிரியான சமயத்தில் யாரும் மத வேறுபாடுகளை பார்க்க மாட்டார்கள்.”, என முகமது அஃப்ரசூல் கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close