குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் அக்டோபர் 7, 2001 அன்று அவரது மகன் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக முதல் முறையாக பதவியேற்றபோது, அப்போது 78 வயதான ஹீராபென் தாமோதர்தாஸ் மோடி, பார்வையாளர்கள் மத்தியில் முன் வரிசையில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும், அந்த அரசாங்கத்தில் அமைச்சராகவும், பின்னர் குஜராத்தின் முதலமைச்சராகவும், உத்தரப்பிரதேசத்தின் ஆளுநராகவும் இருந்த ஆனந்திபென் படேல் - அவரிடம் சென்று மேடையில் ஏறச் சொன்னார். ஹீரா பென் கலந்துகொண்ட மோடியின் ‘கடைசி பொது நிகழ்வு’ அதுதான் என்று ஜூன் 18, 2022 அன்று, ஹீரா பென் தனது நூற்றாண்டு விழாவில் நுழைந்தபோது, பிரதமர் தனது வலைப்பதிவில் எழுதினார்.
ஹீரா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி மற்றும் ரிசர்ச் சென்டரில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் காலமானார். பெரும்பாலும் குடும்ப விவகாரமாக இருந்த இறுதிச் சடங்குகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி அதிகாலையில் வந்தார். ஹீரா பென் மற்ற மகன்கள் - மூத்தவர் அம்ருத்பாய், சோம்பாய், பிரஹலாத்பாய் மற்றும் பங்கஜ்பாய், இவர்களுடன் ஹீரா பென் தங்கியிருந்தார் - அவர்களும் உடனிருந்தனர். காந்திநகர் செக்டார் 30-ல் உள்ள சுடுகாட்டில் அவரது இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.
1923-ம் ஆண்டு வாட்நகர், மெஹ்சானாவிற்கு அருகிலுள்ள விஸ்நகரில் பிறந்த ஹீரா பென் ‘எளிய, ஆரோக்கியமான மற்றும் பாசமுள்ளவர்’ என்று அவரை அறிந்த அனைவராலும் நினைவுகூரப்படுகிறார்.
பிரதமர் மோடி தனது வலைப்பதிவில், மறைந்த தனது தந்தை தாமோதர்தாசும் தனது 100வது பிறந்தநாளை தனது தாய்க்கு ஒரு வாரத்திற்கு முன்பே கொண்டாடியிருப்பார் என்று கூறியுள்ளார். “சமுதாயத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர், என் தந்தையின் புகைப்படம் ஒரு நாற்காலியில் வைக்கப்பட்டது, ஒரு கீர்த்தனை பாடப்பட்டது. அம்மா மஞ்சீரா வாசித்துக்கொண்டு பஜனைப் பாடுவதில் மூழ்கியிருந்தார். அவர் இன்னும் அப்படியே இருக்கிறார் - வயது உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால், அவர் எப்போதும் போல் மனதளவில் விழிப்புடன் இருக்கிறார்” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் கருத்துப்படி, அவரது தாயார் எந்த அரசு அல்லது பொது நிகழ்ச்சிகளுக்கும் அவருடன் சென்றதில்லை. 1991 ஆம் ஆண்டு ஏக்தா யாத்திரையை முடித்துக்கொண்டு லால் சௌக்கில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு ஸ்ரீநகரில் இருந்து திரும்பிய போது, அவரது பதவிப்பிரமாணத்தைத் தவிர, மேலும் ஒரே ஒரு முறை அவர் பொது நிகழ்ச்சியில் காணப்பட்டார். “அகமதாபாத்தில் நடந்த ஒரு பொது விழாவில், ஸ்ரீநகரில் இருந்து நான் ஏக்தா யாத்திரையை முடித்துக்கொண்டு லால் சௌக்கில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டுத் திரும்பிய பிறகு, அவர் என் நெற்றியில் திலகமிட்டார்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
2014-ல் அவர் பிரதமராக பதவியேற்றபோது ஹீரா பென் கலந்து கொள்ளவில்லை. ஆனால், பின்னர் 2016 இல் 7 ரேஸ் கோர்ஸ் சாலையில் அவரைச் சந்தித்தார். அந்த புகைப்படங்களை மோடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதே ஆண்டில், மோடி பிரதமராக இருந்தபோது, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தபோது, வங்கியில் ஹீரா பென் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட கரன்சியை மாற்றும் வீடியோக்கள் வைரலானது. அவர் வழக்கமாக தவறாமல் வாக்களிப்பார், மேலும், கடைசியாக குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க சக்கர நாற்காலியில் சென்றார்.
தனது பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஹீரா பென் ஆசிர்வாதத்தைப் பெற அடிக்கடி காந்திநகருக்கு வருவார்.
ஹீரா பென் மறைவுக்கு அஞ்சலி செலுத்த முதலில் வந்தவர்களில் ஒருவரான முன்னாள் முதல்வர் ஷங்கர்சிங் வகேலா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “நான் நரேந்திர சகோதரரை அறிந்த காலத்திலிருந்தே ஹீரா பென்னை அறிந்திருக்கிறேன். அதாவது, 1984-85 காலகட்டத்தில் இருந்தே… அவர் எப்போதும் ஆரோக்கியமாக இருந்தார். ஒரு உண்மையான குடும்பத் தலைவியாக மிகவும் அன்பாக இருந்தார். நாங்கள் அவரைச் சந்திக்கும் போது அவருடிஅய முதல் கேள்வி, ‘நீங்கள் சாப்பிட்டீர்களா? நீங்கள் சாப்பீடுகிறீர்களா?” என்பதாகத்தான் இருக்கும். வகேலாவும் மோடியும் ஆர்.எஸ்.எஸ்-ல் ஒன்றாக இருந்தார்கள். அவர் தனது சொந்தக் கட்சியைத் தொடங்க பா.ஜ.க-விலிருந்து விலகினார். பின்னர், அவர் காங்கிரஸில் சேர்ந்தார்.
பிரதமர் மோடியின் குறிப்பிடுகையில், “ஹீரா பென் குழந்தையாக இருந்தபோது ஸ்பானிஷ் காய்ச்சலால் தனது தாயை இழந்தார். “அவருக்கு என் பாட்டியின் முகமோ, அவர் மடியில் தவழ்ந்த சந்தோஷம்கூட நினைவில் இல்லை. அவர் தன் குழந்தைப் பருவம் முழுவதையும் தன் தாய் இல்லாமல் கழித்தார். நாம் அனைவரும் செய்வது போல் அவரால், தன் தாயின் மீது கோபத்தை வீச முடியவில்லை. நாம் எல்லோரையும் போல அவரால் தன் தாயின் மடியில் இளைப்பாற முடியவில்லை” என்று அவரது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஹீரா பென் ஒருபோதும் பள்ளிக்குச் செல்லவில்லை, வறுமையும் இல்லாமையும் நிறைந்த குழந்தைப் பருவத்தில், வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க ஒரு சில வீடுகளில் பாத்திரங்களைக் கழுவினார் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
“இந்தப் போராட்டங்களால் அம்மாவுக்கு குழந்தைப் பருவ மகிழ்ச்சி அதிகம் இல்லை – அவர் வயதைத் தாண்டி வளர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் குடும்பத்தில் மூத்த குழந்தையாக இருந்ததால், அவர் திருமணத்திற்குப் பிறகு மூத்த மருமகளாகிவிட்டார். குழந்தைப் பருவத்தில், குடும்பம் முழுவதையும் கவனித்துக் கொண்டு, எல்லா வேலைகளையும் செய்து வந்தார். திருமணத்துக்குப் பிறகும் இந்தப் பொறுப்புகள் அனைத்தையும் அவர்தான் ஏற்றுக்கொண்டார். கடினமான பொறுப்புகள் மற்றும் அன்றாட போராட்டங்கள் இருந்தபோதிலும், அம்மா முழு குடும்பத்தையும் அமைதியுடனும் தைரியத்துடனும் நடத்தினார.” என்று மோடி தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மோடி தனது தாயார் ஒரு ‘கபீர்பந்தி’ பாடகர் என்றும், அவருக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் ஒன்று நரசின் மேத்தா இசையமைத்த ‘ஜல்கமல் சாடி ஜா நே பாலா, ஸ்வாம் அமரோ ஜாக்சே…’ என்ற பாடல் என்றும் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.