Advertisment

மும்பை விளம்பர பலகை சரிந்த விபத்தில் 14 பேர் மரணம்; அலறல் சத்தம் கேட்டும், உதவ முடியவில்லை – பொதுமக்கள் வேதனை

மும்பை பெட்ரோல் பம்ப்பில் விளம்பர பலகை சரிந்து விபத்து ஏற்பட்டதில் 14 பேர் மரணம்; சிக்கிக் கொண்டவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டோம், ஆனால் உதவ முடியவில்லை – அருகில் இருந்தவர்கள் வேதனை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mumbai hoarding accident

மும்பை வடலாவில் மீட்புப் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்று வருகின்றன. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - அமித் சக்ரவர்த்தி)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pratip Acharya , Siddhant Konduskar

Advertisment

திங்களன்று மும்பையின் காட்கோபரில் உள்ள சி.என்.ஜி (CNG) பெட்ரோல் நிலையத்தில், விளம்பரப் பலகை சரிந்து 14 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், இந்த விபத்தில் சிக்கிக் கொண்ட பெரும்பாலானோர், எரிபொருள் நிரப்ப வந்தவர்கள் அல்லது சம்பவம் நடந்தபோது பெய்துக் கொண்டிருந்த மழைக்காக அங்கு தஞ்சம் அடைந்தவர்கள்.

இடிந்து விழுந்த விளம்பர பலகையின் கீழ் சிக்கி, கடினமான இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட, பந்த் நகரைச் சேர்ந்த பாலாஜி ஷிண்டே, தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப பெட்ரோல் பம்ப் சென்றிருந்தார்.

ஆங்கிலத்தில் படிக்க: Hoarding collapse in Mumbai: ‘We could hear people screaming for help, but couldn’t do anything’

“நாங்கள் குடும்ப விழாவிற்காக இன்று மாலை பேலாபூருக்கு (நவி மும்பை) செல்லவிருந்தோம், அதனால் அவர் (பாலாஜி ஷிண்டே) முன்கூட்டியே வாகனத்தில் எரிபொருளை நிரப்ப முடிவு செய்தார். அவர் அந்த இடத்தை அடைந்தபோது, விளம்பர பலகை இடிந்து விழுந்தது” என்று பாலாஜி ஷிண்டேவின் மனைவி ரமா கூறினார்.

கோவண்டியில் வசிக்கும் ஸ்வப்னில் குப்தே, புயல் மற்றும் மழையிலிருந்து தப்பிக்க பெட்ரோல் பம்பில் நின்றிருந்தார். “திடீரென பலகை எங்கள் மீது விழுந்து நாங்கள் அடியில் சிக்கிக்கொண்டோம். எங்களால் சுயமாக வெளியே வர முடிந்தது. மக்கள் உதவிக்காக அலறுவதை நாங்கள் கேட்க முடிந்தது, ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை,” என்று ஸ்வப்னில் குப்தே தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். சிறிய காயங்களைத் தவிர அவருக்கு வலது கண்ணில் பெரிய காயம் ஏற்பட்டது.

ரமாபாய் நகரைச் சேர்ந்த உறவினர்களான ஷுபம் கங்குர்டே, 17, மற்றும் வருண் தோரட் ஆகியோர், ஷுபமின் ஸ்கூட்டருக்கு எரிபொருள் நிரப்ப பெட்ரோல் பம்ப் சென்றுள்ளனர். "எனக்கு தொலைப்பேசி அழைப்பு வந்ததால், நான் பம்ப்க்கு வெளியே சென்றேன், அப்போது விளம்பர பலகை சரிவதைக் கண்டேன்... ஷூபம் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் நின்றபோது சிக்கிக் கொண்டார்," என்று வருண் தோரட் கூறினார். ஷூபம் கங்குர்டே முதுகில் காயம் அடைந்து காட்கோபர் ராஜாவாடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திலக் நகரைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநரான கோபால் தத், தனது காருக்கு எரிபொருளை நிரப்புவதற்காக பெட்ரோல் பம்பில் நிறுத்தியபோது, இடிந்து விழுந்த விளம்பரப் பலகையின் கீழ் சிக்கிக் கொண்டார். தேசிய பேரிடர் மீட்புப் படையால் (என்.டி.ஆர்.எஃப்) மீட்கப்படுவதற்கு முன்பு கோபால் தத் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சிக்கிக் கொண்டிருந்தார். இதற்கிடையில், கோபால் தத் தனது மொபைல் போனில் இருந்து தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு எஸ்.ஓ.எஸ் (SOS) (அவசரகால அழைப்பு) செய்திகளை அனுப்பினார்.

"நாங்கள் இரவு 7.30 மணியளவில் அந்த இடத்தை அடைந்தோம், அரை மணி நேரத்திற்குள், எங்கள் தந்தை மீட்பு படையினரால் மீட்கப்பட்டார்," என்று அவரது மகள் பெயர் வெளியிட விரும்பாத நிலையில் கூறினார். கோபால் தத்துக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.

சாட்சிகளின் கூற்றுப்படி, விளம்பர பலகை மரம் வேரோடு சாய்ந்தது போல் சரிந்தது. பெட்ரோல் பம்ப் வாடிக்கையாளர் சயீத் பன்சோப்கர் கூறுகையில், “பெரிய பலகை இடிந்து விழுவதைக் கண்டவுடன், எனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளியே ஓடி வந்தேன். ஆனால் என்னுடன் இருந்த என் சகோதரன் உள்ளே மாட்டிக்கொண்டான்... அதிர்ஷ்டவசமாக பலகை ஒரு டிரக் மீது விழுந்ததால் அவர் தப்பினார், கீழே இருந்தவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது,” என்று கூறினார்.

"கடுமையான காற்று வீசத் தொடங்கியதும், விளம்பரப் பலகை அசைந்து சத்தம் எழுப்பியது... அது சரிந்துவிடுமோ என்ற அச்சத்தில், பலர் அங்கிருந்து நகரத் தொடங்கினர், சில நிமிடங்களில், பலகை பெட்ரோல் பம்ப் மீது மோதியது," என்று அருகில் வசித்து வரும் சாதிக் ஹுசைன் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Mumbai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment