Advertisment

Coronavirus India: ஹோலி கொண்டாட்டத்தை தவிர்க்கும் மோடி; அப்போ நீங்க?

தும்மலினால் அவதிப்படும் ஒருவரிடமிருந்து குறைந்தது மூன்று அடி தூரமாவது நாம் விலகியிருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus India: ஹோலி கொண்டாட்டத்தை தவிர்க்கும் மோடி; அப்போ நீங்க?

washing hands, cough sneeze, common cold, holi celebration coronavirus

இந்தியாவில் 29 மக்களுக்கு கொரோனா வைரஸ்  கண்டறியப்பட்டதை அடுத்து, ஹோலி கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் அறிவித்துள்ளனர்.

Advertisment

சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...

பிரதமர் மோடி தனது ட்விட்டரில் "உலக நிபுணர்கள் அனைவரும் COVID -19 நாவல் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொது இடங்களில் கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்கள், எனவே நான் இந்த வருட ஹோலி கொண்டாட்டத்தை தவிர்க்கிறேன்" என்று பதிவு செய்தார்.

இருமல், தும்மலினால் அவதிப்படும் ஒருவரிடமிருந்து குறைந்தது மூன்று அடி தூரமாவது நாம் விலகியிருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, ஹோலி (தமிநாட்டில் மாசிமகம் )போன்ற ஒரு திருவிழாவில் இதைப் பின்பற்றுவது மிக மிக சவாலாக இருக்கும்.

ஃபோர்டிஸ் மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் மற்றும் எச்.ஐ.வி மருத்துவர் டாக்டர் கீர்த்தி சப்னிஸ், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழிடம் பேசுகையில் , “உங்களுக்கு இருமல், தும்மல் இருந்தால் மற்றவர்களை தழுவுவதை தவிர்க்கவும். பாதிக்கப்பட்டவர்கள் உங்களைத் தொட்டால், நீங்கள் உடனடியாக உங்கள் கைகளைக் கழுவ வேண்டும்” என்றார்.

குறைந்தது 20 விநாடிகளாவது நமது கைகளை கழுவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கைகளின் பின்புறம்,  விரல்கள், நகங்களுக்கு இடையிலும் நன்கு கழுவ வேண்டும்.

உங்களுக்கு இருமல்/தும்மல் இருந்தால் தயவு செய்து மாஸ்கினை பயன்படுத்துங்கள. இதன் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்கும்.

உடல்நலம் சரியில்லாதவர்கள், இருமல்/தும்மல்/ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் கொண்டவர்கள், ஹோலி கொண்டாடத்தை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர் சப்னிஸ் பரிந்துரைத்தார். ஏனெனில் நீங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது உங்களுக்கு கூட தெரியாமல் இருக்கலாம்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் பெரும்பாலான வழக்குகள், பயணத்துடன் தொடர்புடையவை. கடந்த 15 நாட்களில் இந்தியாவுக்கு வெளியே பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்றவர்கள் வெகுஜனக் கூட்டங்களில் கலந்துகொள்வதையும் அவர்களுடன் ஹோலி கொண்டாடுவதையும் தவிர்க்க வேண்டும்.

நாம் பார்க்க நலமாக இருந்தாலும் கூட, கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் குறைந்தது 14 நாட்களுக்கு இதனை மற்றவர்களுக்கு பரப்ப முடியும் என்று மருத்துவர் விளக்கினார்.

ஹோலி (மாசிமகம்) கொண்டாட்டத்திற்கு பிறகு, ஒருவர் சோப்பு அல்லது ஆல்கஹால் சார்ந்த கை சானிட்டைசர் மூலம் கைகளை கழுவி குளிக்க வேண்டும்.

India Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment