கதுவா சிறுமி வழக்கை கண்காணிக்கும் பிரபல ஹாலிவுட் நடிகை!

கதுவா சிறுமி வழக்கு குறித்து ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் ட்வீட்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் சிறுமி சார்பில் வாதாட தீபிகா எஸ். ரஜாவத் என்பவர் முன்வந்தார். இதனால் தீபிகாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தீபிகா கூறுகையில், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். நான் எத்தனை நாள் உயிருடன் இருப்பேன் என்று தெரியவில்லை. என்னை பலாத்காரம் செய்யக்கூடும் அல்லது மானபங்கப்படுத்தக்கூடும். உன்னை மன்னிக்க மாட்டோம் என்று என்னிடம் தெரவித்தனர்’ என்றார். இருப்பினும், கதுவா மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் தனது ட்விட்டரில் கதுவா சிறுமி வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞருக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், வழக்கிறஞர் தீபிகாவின் படத்தை பதிவிட்டு, ‘அனைத்து சக்தியும் இவருக்கு கிடைக்கட்டும்’ என வாழ்த்தியுள்ளார்.

பிரிட்டிஷ் நடிகையான எம்மா வாட்சன் சமூக ஆர்வலராகவும் உள்ளார். இந்தியாவில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமையை, ஹாலிவுட் நடிகையாக இருந்தாலும், அறிந்து வைத்திருக்கும் எம்மா வாட்சன், அந்த வழக்கின் வழக்கறிஞருக்கு வாழ்த்து தெரிவித்து இருப்பதில் இருந்து, இந்த வழக்கை அவர் எந்தளவிற்கு தொடர்ந்து வந்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close