RSS general secretary Dattatreya Hosabale on Covid, 'Home medicines’ Tamil News: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா நேற்று முன்தினம் 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில், நேற்று 5 ஆயிரத்தை கடந்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,091-ல் இருந்து 25,587ஆகவும் அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலை தூக்கியுள்ள நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு
இந்நிலையில், 'கொரோனாவை எதிர்த்துப் போராட வீட்டு மருத்துவமும் உதவியது' என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேசியுள்ளார். ரெலிகேர் எண்டர்பிரைசஸ் ஏற்பாடு செய்த உலக சுகாதார தினத்தைக் குறிக்கும் கூட்டத்தில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே, கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் அனுபவம் தனித்துவமானது மற்றும் முன்மாதிரியானது. நவீன மருத்துவம் பல உயிர்களைக் காப்பாற்றியது. நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் தொற்றுநோயைச் சமாளிக்க “வீட்டு மருத்துவத்தை” பயன்படுத்துகின்றனர். கதாஸ் மற்றும் பிராணாயாமம் (மூச்சு ஒழுங்குமுறைப் பயிற்சி) ஆகியவை தொற்றுநோயைத் தடுக்கும் கருவிகளாகவும், மருந்துகளாகவும் உள்ளன." என்று கூறினார்.
ஆர்எஸ்எஸ்-ன் அகில இந்திய விளம்பரப் பொறுப்பாளர் சுனில் அம்பேகர், "ஆரோக்கியத்தை தனிமையில் பார்க்க முடியாது. உடல் அளவுருக்களைப் பற்றியது மற்றும் மன ஆரோக்கியம் சமமாக முக்கியமானது" என்று கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், ஆயுர்வேதம் எப்படி வாழ வேண்டும் என்று கூறும் வாழ்க்கை அறிவியல். "நம்மில் பலர் இதை ஒரு பழமையான அறிவியலாகக் கருதுகிறோம். ஆனால் அறிவியல் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். மேலும் இது தொன்மையானதாக கருத முடியாது." என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil