Advertisment

லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம் - அமித்ஷா அறிவிப்பு

லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதை, சிறந்த நிர்வாகம் மற்றும் செழிப்புக்கான ஒரு படியாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

author-image
WebDesk
New Update
ladakh leh

லடாக் புதிய மாவட்டங்கள்; லடாக்கில் உள்ள லே நகரத்தின் ஒரு காட்சி (Express Photo by Tashi Tobgyal)

லடாக் யூனியன் பிரதேசத்தில் (UT) ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை அறிவித்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Home Minister Amit Shah announces creation of 5 new districts in Ladakh

உள்துறை அமைச்ச அமித்ஷா எக்ஸ் சமூக வலைதளப் பதிவு ஒன்றில்,  “வளர்ந்த மற்றும் வளமான லடாக்கை உருவாக்குவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி, 5 புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய மாவட்டங்களின் பெயர்கள், ஜான்ஸ்கார், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகும். ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஆட்சியை வலுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கான நன்மைகளை அவர்களின் வீட்டு வாசலுக்கு எடுத்துச் செல்லும்” என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும், லடாக் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

“லடாக் பரப்பளவில் மிகப் பெரிய யூனியன் பிரதேசம். தற்போது, ​​லடாக்கில் இரண்டு மாவட்டங்கள் உள்ளன; லே மற்றும் கார்கில். இது இந்தியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். மிகவும் கடினமான மற்றும் அணுக முடியாத நிலையில், தற்போது மாவட்ட நிர்வாகம் அடிமட்டத்தை எட்டுவதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறது. இந்த மாவட்டங்கள் உருவான பிறகு, இப்போது மத்திய அரசு மற்றும் லடாக் நிர்வாகத்தின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் மக்களை எளிதில் சென்றடையும், மேலும், அதிகமான மக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். உள்துறை அமைச்சகத்தின் இந்த முக்கியமான முடிவு லடாக்கின் அனைத்து வளர்ச்சிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு “கொள்கை ரீதியில் ஒப்புதல்” வழங்குவதோடு, தலைமையகம், எல்லைகள் போன்ற புதிய மாவட்டங்களை உருவாக்குவது, கட்டமைப்பு, பதவிகளை உருவாக்குதல் மற்றும் மாவட்டங்கள் அமைப்பது தொடர்பான பல்வேறு அம்சங்களை மதிப்பிடுவதற்கு ஒரு குழுவை அமைக்குமாறு லடாக் நிர்வாகத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் லடாக் நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

“குழுவின் அறிக்கையைப் பெற்ற பிறகு, அந்த அறிக்கையின் அடிப்படையில் புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான இறுதி திட்டத்தை லடாக் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அடுத்த நடவடிக்கைக்காக அனுப்பும்” என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சமூக அமைப்பில் உள்ள வேறுபாடு மற்றும் மாநில அரசுகளின் பாகுபாடு என அழைக்கப்படுவதால், லடாக் பகுதி வளர்ச்சிக்கான போட்டியில் பின்தங்கியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். ஆகஸ்ட் 5, 2019-ல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. மற்றொரு யூனியன் பிரதேசம் ஜம்மு காஷ்மீர் ஆகும்.

“ஐந்தாண்டுகளுக்கு முன்பு அந்த நாளில், அதற்கு முன் அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டில் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, லடாக் யூனியன் பிரதேசம் அந்தஸ்தைப் பெற்றது. மேலும், அது மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது” என்று அந்த அதிகாரி கூறினார்.

லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதை, சிறந்த நிர்வாகம் மற்றும் செழிப்புக்கான ஒரு படியாக பிரதமர் மோடி பாராட்டினார். புதிய மாவட்டங்கள் இப்போது அதிக கவனம் செலுத்தும், சேவைகள் மற்றும் வாய்ப்புகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வரும் என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி பகிர்ந்துகொண்ட எக்ஸ் பதிவில், “, “லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவது சிறந்த நிர்வாகம் மற்றும் செழிப்புக்கான ஒரு படியாகும். ஜன்ஸ்கார், டிராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகியவை இப்போது அதிக கவனம் செலுத்தும், சேவையை கொண்டு வரும்.” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், மத்திய அரசின் ஒத்துழைப்போடு, இப்போது லடாக் சுதந்திரமாக அதன் வளர்ச்சிக்கு வழி வகுத்து வருகிறது என்றார். “பிரதமர் மோடி ஒரு வளர்ச்சிப் திட்டங்களின் தொகுப்பை அறிவித்தார்; பிரதம மந்திரி மேம்பாட்டுத் தொகுப்பு (பி.எம்.டி.பி), முந்தைய ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக மொத்தம் ரூ.80,068 கோடி செலவில் 63 திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த 63 திட்டங்களில், மொத்தம் ரூ.21,441 கோடி செலவில் 9 திட்டங்கள் லடாக்கிற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது திட்டங்களில், ஒன்று கைவிடப்படுவதற்கு முன், முடிந்தால் மற்றொரு திட்டத்திற்கு மாற்றப்படும், இரண்டு திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன, மீதமுள்ள 6 திட்டங்கள் செயல்பாட்டின் பல்வேறு கட்டங்களில் உள்ளன” என்று அந்த அதிகாரி கூறினார்.

மேலும், “லடாக்கின் முழு வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, 2020-21, 2021-22, 2022-23 மற்றும் 2023-24-ம் ஆண்டுகளில் பட்ஜெட் ஒதுக்கீடு ஆண்டுக்கு 5,958 கோடி ரூபாயாக கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  சிந்து உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (சிட்கோ) அமைக்கப்படுவதன் மூலம், 25 கோடி ரூபாய் பங்கு மூலதனத்துடன், சிட்கோ நிறுவனம் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும்” என்று அந்த அதிகாரி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ladakh Jammu Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment