மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பல அரசியல் தலைவர்கள் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பல அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
அந்த வரிசையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து அவர் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொண்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனை அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
कोरोना के शुरूआती लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया और रिपोर्ट पॉजिटिव आई है। मेरी तबीयत ठीक है परन्तु डॉक्टर्स की सलाह पर अस्पताल में भर्ती हो रहा हूँ। मेरा अनुरोध है कि आप में से जो भी लोग गत कुछ दिनों में मेरे संपर्क में आयें हैं, कृपया स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं।
— Amit Shah (@AmitShah) August 2, 2020
அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகள் இருந்ததால் நான் பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனை முடிவு மீண்டும் தொற்று உறுதி என்று வந்தது. எனது உடல்நிலை நன்றாக உள்ளது. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தயவுசெய்து தனிமைப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல்காந்தி டுவீட்
“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில்
குணமடைய வேண்டுகிறேன்!”
Wishing Mr Amit Shah a speedy recovery.
— Rahul Gandhi (@RahulGandhi) August 2, 2020
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும்
– முதல்வர் பழனிசாமி
Praying the almighty God for speedy recovery of Shri @AmitShah ji from his present illness.
Best wishes from TamilNadu for his good health.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 2, 2020
ஸ்டாலின் டுவீட்
Heard the news about Union Home Minister @AmitShah being admitted to hospital.
I wish him a speedy recovery from illness and safe return to good health.
— M.K.Stalin (@mkstalin) August 2, 2020
அதே போல, தமிழகத்தில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி செல்வராஜுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Home minister amit shah tested covid 19 positive
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி
யாராலும் தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது: ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை
அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் உரையாடல்: முகம்சுளிக்கும் பாஜக தலைவர்கள்