NGO-களுக்கு வெளிநாட்டு நிதி கிடைப்பதை நிறுத்த அடிக்கடி FRCA சட்டத்தை கையில் எடுக்கும் உள்துறை

அம்னஸ்டி இன்டர்நேஷனல், தி லாயர்ஸ் கலெக்டிவ், கிரீன்பீஸ் இந்தியா மற்றும் தி ஃபோர்டு அறக்கட்டளை உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் எஃப்.ஆர்.சி.ஏ. ரத்து செய்யப்பட்ட பிறகு சி.எச்.ஆர்.ஐ. அமைப்பின் பதிவு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு முக்கிய கவனம் பெறுகிறது.

அம்னஸ்டி இன்டர்நேஷனல், தி லாயர்ஸ் கலெக்டிவ், கிரீன்பீஸ் இந்தியா மற்றும் தி ஃபோர்டு அறக்கட்டளை உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் எஃப்.ஆர்.சி.ஏ. ரத்து செய்யப்பட்ட பிறகு சி.எச்.ஆர்.ஐ. அமைப்பின் பதிவு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு முக்கிய கவனம் பெறுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NGO-களுக்கு வெளிநாட்டு நிதி கிடைப்பதை நிறுத்த அடிக்கடி FRCA சட்டத்தை கையில் எடுக்கும் உள்துறை

 Ritu Sarin 

Advertisment

Home often invokes Section 13 of FCRA : அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் கணக்குகள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்த நிலையில், மற்றொரு முக்கிய அமைப்பான காமன்வெல்த் ஹூமன் ரைட்ஸ் இனிசியேட்டிவிற்கு கிடைக்க வேண்டிய (Commonwealth Human Rights Initiative (CHRI) வெளிநாட்டு நன்கொடை மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தற்போது வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) சட்டம் 2010-ன் (Foreign Contribution Regulation Act (FCRA)) முக்கிய விதிகள் இடைநீக்கம் செய்யப்படும் அதிகாரம் குறித்த கேள்வி எழுகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்பு சி.எச்.ஆர்.ஐ. அமைப்பின் வெளிநாட்டு நன்கொடைகள் நிறுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்த பிரபலமான சிவில் உரிமைகள் குழு டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது. தற்போது இரண்டாவது முறையாக அந்த அமைப்பிற்கு கிடைக்க வேண்டிய வெளிநாட்டு நன்கொடைகள் மீது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் 13வது விதியின் படி, நன்கொடை இடைநீக்கம் ஒவ்வொரு முறையும் 180 நாட்கள் வரை நீடிக்கும். இந்த அமைப்பின் எஃப்.ஆர்.சி.ஏ பதிவு ரத்து செய்யப்படுவதற்காக காத்திருக்கிறது என்று மத்திய அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் இயக்குநர் சஞ்சய் ஹஜாரிக்கா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, “இந்த அமைப்பின் ஆக்ஸிஜனை நிறுத்துவது போன்றது வெளிநாட்டு நன்கொடையை ரத்து செய்வது. காவல்துறை மற்றும் சிறைகள் மறுசீரமைப்பு, ஆர்.டி.ஐ போன்ற துறைகளில் 25 ஆண்டுகாலமாக வளர்ச்சிப்பணிகளை செய்து வருகிறது இந்த அமைப்பு. நாங்கள் இந்த தடையை எதிர்கொண்டிருக்கும் போதும் கூட அரசாங்கத்தின் பங்குதாரர்கள் மற்றும் NHRC, CIC போன்ற சுதந்திரமான அமைப்புகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

Advertisment
Advertisements

சண்டிகர் நகராட்சி தேர்தல்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற 5 முக்கிய காரணங்கள் என்ன?

மற்றொரு பிரபலமான சிவில் உரிமைக் குழுவான இந்தியன் சோஷியல் ஆக்சன் ஃபோரமின் (INSAF) வெளிநாட்டு நிதி உதவி இடைநீக்கத்தை 2013ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்த போதும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் FCRA கண்காணிப்புப் பிரிவால் தொடர்ந்து இடைநீக்கம் செய்யும் பணிகள் அதிகரித்து வருகிறது என்பதை காட்டுகிறது சமீபத்திய உத்தரவுகள்.

சி.எச்.ஆர்.ஐ-ஐ பொறுத்த வரை, இடைநீக்கம் தொடர்பான ஷோ-காஸை (show-cause) முன்பே பெறவில்லை. இன்சாஃப் வழக்கில் 2013ம் ஆண்டு நீதிபதி வி.கே. ஜெய்னின் உத்தரவில், ”இத்தகைய முறைகேடு காரணங்களை பிற்காலத்தில் ஆதாரங்களாக சமர்பிக்க முடியாது. காரணங்கள் ஏதும் இல்லாத போது, அமைப்புகள் மூலம் இந்த இடைநீக்கத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ள இயலாது” என்று குறிப்பிட்டிருந்தது.

அம்னஸ்டி இன்டர்நேஷனல், தி லாயர்ஸ் கலெக்டிவ், கிரீன்பீஸ் இந்தியா மற்றும் தி ஃபோர்டு அறக்கட்டளை உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் எஃப்.ஆர்.சி.ஏ. ரத்து செய்யப்பட்ட பிறகு சி.எச்.ஆர்.ஐ. அமைப்பின் பதிவு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு முக்கிய கவனம் பெறுகிறது.

உள்துறை அமைச்சகம் இதுவரை 20 ஆயிரம் அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி உதவியை பெற உரிமம் வழங்கியுள்ளது. 2020ம் ஆண்டு மார்ச் மாதம், நாடாளுமன்ற மக்களவையில், “கடந்த மூன்று வருட காலங்களில் 6,676 அமைப்புகளுக்கான உரிமத்தை ரத்து செய்துள்ளது அரசு” என்று கூறப்பட்டுள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட அமைப்புகளின் எண்ணிக்கை வழங்கப்படவில்லை.

ஏற்கனவே ஒரு சில முக்கியமான அமைப்புகளின் எஃப்.ஆர்.சி.ஏ. ரத்துகளை எதிர்த்து வழக்குகள் போடப்பட்டிருப்பதாலும், சில அமைப்புகள் நிவாரணம் பெறுவதாலும் இந்த ரத்துகள் ஒரு பேட்டர்ன் போல் செயல்படுகிறது என்பதை உணர முடிகிறது. இந்த அமைப்புகளின் உரிமம் ரத்து செய்யப்படலாம். அல்லது ரத்து செய்யப்படாமல் இருப்பதற்கான சாத்தியங்களும் உள்ளது.

வெங்கடேஷ் நாயக் என்ற எஃப்.ஆர்.சி.ஏ ஆராய்ச்சியாளர் பெற்ற ஆர்.டி.ஐ. கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 உரிமங்கள் இடைநீக்கம் நடைபெற்றிருப்பதாகவும், எந்த உரிமமும் ரத்து செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த 20 நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் உரிமங்கள் இரண்டாவது முறையாக இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஒரே மாதிரியான காரணங்களை இடைநீக்க உத்தரவுகள் காட்டுகின்றன. அவற்றில் முக்கியமானவை கீழே.

6 இடைநீக்க உத்தரவுகளில், இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் நிலம் வாங்கியிருப்பது மற்றும் நிலையான வைப்பு நிதிகளில் முதலீடு செய்திருப்பது போன்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில உத்தரவுகளில், பெறப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடைகளை கலந்து நிர்வாகிகளுக்கு கணக்கு காட்டுவது போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஃப்.ஆர்.சி.ஏ. சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டிருக்கும் மதமாற்றம் மற்றும் பள்ளிவாசல் கட்டும் பணிகளுக்காக நிதி பெறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இரண்டு அமைப்புகளுக்கு உத்தரவு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு இடைநீக்க உத்தரவில், ஒரு அமைப்பின் செயலாளர் மற்றும் நிர்வாகி பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியதால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதை குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த இடைநீக்க உத்தரவுகளில் நான்கு மட்டுமே FCRA இன் பிரிவு 13 இன் விதிகளின் கீழ் தேவைப்படும் ஷோ காஸ் உத்தரவு முன்பே பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

சி.எச்.ஆர்.ஐ. அமைப்பு மீது பல்வேறு விதிமுறை மீறல்களை மத்திய உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதில் பரிந்துரைக்கப்பட்ட படிவங்களில் நிரப்பப்படாத நிதியைப் பயன்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு பங்களிப்புகள் டெபாசிட் செய்யப்பட்ட இரண்டு வங்கிக் கணக்குகளுக்குத் தெரிவிக்காதது போன்ற தொழில்நுட்ப விதிகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: