surat wedding, groom's father elopes , surat news, gujarat news, indian express news
திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்ட நிலையில், மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் தலைமறைவான நிகழ்வு சூரத் நகரில் நிகழ்ந்துள்ளது.
Advertisment
குஜராத் மாநிலம் சூரத்தில் முன்னணி தொழிலதிபரின் மகனுக்கும், நவ்சரி பகுதியில் உள்ள வைர வர்த்தகர் ஒருவரின் மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. திருமணம், பிப்ரவரி 13ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. திருமண ஏற்பாடு நிகழ்ச்சிகளில், இருவீட்டாரும் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில், மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் சில நேரங்களில் அன்யோன்யமாக இருந்ததை கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..
Advertisment
Advertisements
பெரியவர்களிடம் எப்படி இதைப்பற்றி கேட்பது என்று அவர்கள் ஒதுங்கியிருந்த நிலையில், கல்யாண வேலைகளில் பிஸியாகி விட்டனர். கல்யாண பத்திரிகை ஊர் முழுக்க கொடுக்க வேண்டியிருந்ததால், உறவினர்கள் இந்த விசயத்தை அப்போதைக்கு பெரிதுபடுத்தவில்லை. கிட்டத்தட்ட அனைவருக்கும் கல்யாண அழைப்பிதழ் வழங்கப்பட்ட நிலையில, திருமண நிகழ்ச்சிகளில் அனைவரும் ஈடுபட்டிருந்த வேளையில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும், வீட்டை விட்டு ஓடிவிட்டனர். இதன்காரணமாக, மணமக்களின் திருமணம் நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக, நவ்சாரி போலிஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை கண்டு திடுக்கிட்ட போலீசார், விசாரணையை முடுக்கிவிட்டனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாவது, மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும், சிறுவயதிலேயே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் அப்போது கைகூடாததால், பெண், இந்த வைர வர்த்தகரை திருமணம் செய்துள்ளார். இதற்கு காதலரும் துணைபுரிந்துள்ளார்,.தற்போது சந்தித்த இந்த காதல் ஜோடி, அப்போதுதான் சேர முடியவில்லை, இனியாவது நாம் ஒன்றுசேருவோம் என்று நினைத்து தற்போது தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உண்மையான காதல், இப்போதைக்கு ஒன்றுசேரவில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் நிச்சயம் ஒன்றுசேரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த முதுமை காதல் ஜோடிகள் வாழ்ந்துள்ளதாக கருத்து கந்தசாமிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.