ஹைதராபாத்தில் 11 மாதங்களுக்கு முன் நடைபெற்ற கொலைக்கு பழிவாங்கும் வகையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நபர் பட்டப்பகலில் நடுச்சாலையில் பொதுமக்கள் மத்தியில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாதில் உள்ள ராஜேந்திர நகரைச் சேர்ந்தவர் மகேஷ் கௌட். இவர் கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி ஷம்சாபாத் எனும் இடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் 24 வயதான ஜெரிகல்லா ரமேஷ் என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை உப்பர் ஹள்ளி என்ற இடத்தில் உள்ள நீதிமன்றதில் நடைபெற்று வருகிறது. முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ரமேஷ் இன்று இந்த நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தார்.
அப்போது அட்டாபூர் என்ற இடத்தில் பில்லர் எண்140 அருகே, ரமேஷை வழிமறித்த மகேஷின் தந்தை லக்ஷ்மணன் மற்றும் மாமா கிஷன் கௌட் ஆகியோர், ரமேஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
பொதுமக்கள் திரண்டிருந்த பகுதியில், பட்டப்பகலில் இந்த கொலை நிகழ்த்தப்பட்டது காண்போரை அதிர வைத்தது. ரமேஷ், முதலில் வெட்ட வந்த இருவரையும் முடிந்த அளவிற்கு தடுத்துவிட்டு ஓட முயன்றார். அப்போது சாலையில் நடந்து சென்ற ஒருவர் கிஷனை பிடித்துக் கொண்டு, ரமேஷ் தப்பி ஓட உதவி செய்தார்.
ஆனால், கிஷன் அந்த நபரையும் வெட்டுவது போல் எச்சரிக்க செய்ய, அவர் பின் வாங்கினார். இதனால் 100மீ வரை ரமேஷால் தப்பியோட முடிந்தது. ஆனால், அதற்குள் இருவரும் அவரை சரமாரியாக வெட்டத் தொடங்கிவிட்டனர்.
முன்னதாக, இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போது, அங்கு ஒரு போலீஸ் பேட்ரோல் வாகனம் கடந்து சென்றது. ஆனால், அந்த வாகனம் நிற்கவில்லை.
இந்த கொலை நடந்த பிறகு, ராஜேந்திர நகர் காவல் நிலைய அதிகாரிகள் கூறுகையில், அந்த வாகனத்தில் போலீஸ் அதிகாரி யாரும் இல்லை என்றும், டிரைவரும் அந்த சம்பவத்தை கவனிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூர கொலைக்கு முக்கிய காரணமே காதல் தான்.
மகேஷ் காதலித்து வந்த பெண்ணை, அதே ஏரியாவைச் சேர்ந்த கணேஷும் பின் தொடர்ந்ததால், மது அருந்தலாம் என அழைத்துச் சென்று மகேஷும் அவரது நண்பர்களும் கணேஷின் கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை யாருக்கும் தெரியாமல் எரித்து சாம்பலாக்கி இருக்கின்றனர். ஆனால், போலீசார் இவர்களை கண்டுபிடித்துவிட்டனர்.
சிகப்பு உடையில் இருப்பவர் கிஷன்
அந்த வழக்கில் தான், கணேஷின் தந்தையும், மாமாவும் மகேஷை இன்று கொலை செய்துள்ளனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் போலீசார் இருவரையும் கைது செய்துவிட்டனர்.
இருப்பினும், பட்டப்பகலில் சாலையின் நடுவே ஒருவரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தெலங்கானாவை அதிர வைத்துள்ளது.