பஞ்சாபில், பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி நேர்ந்ததாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அவர் நீண்ட நாள்கள் நலமுடன் வாழ வேண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜக தலைவர்களும், அமைச்சர்களும் பிரார்த்தனை நடத்தினர்.
அந்த வகையில், மும்பையில் புகழ்பெற்ற ஹாஜி அலி தர்காவில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, பிரதமர் மோடிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
மேலும், டெல்லியில் உள்ள நிஜாமுதீன் தர்கா மற்றும் அஜ்மீர் ஷெரீப் தர்கா உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களிலும் பிரதமருக்காக இதேபோன்ற பிரார்த்தனைகள் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு மரியாதை
மலேஷியாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பி என் ரெட்டி, அண்மையில் கம்பாரில் கிரீன் ரிட்ஜ் பகுதியில் முதன்முறையாக நடைபெற்ற கம்பார் போரின் 80வது ஆண்டு நினைவு தின விழாவில் பங்கேற்றார்.
அப்போது, 1941-42 இல் இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்தின் கீழ் வீழ்ந்த இந்திய வீரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியை ஓய்வுபெற்ற மேஜர் பல்தேவ் சிங் தலைமையிலான மலேசிய ஆயுதப்படை சீக்கிய படைவீரர் சங்கம் (MAFSVA)ஏற்பாடு செய்தது. கம்பரில் போர் நினைவிடம் அமைக்க இந்திய மற்றும் மலேசிய அரசுகள் கலந்தாலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசி பணியை வேகப்படுத்துங்கள்
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்சிபிசிஆர்) தலைவர் பிரியங்க் கனூங்கோ பஞ்சாப், நாகாலாந்து, மேகாலயா மற்றும் மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், NCPCR தலைவர் பிரியங்க் கனூங்கோ, நாட்டில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட தடுப்பூசி பிரிவில், ஏற்கனவே 22 சதவீத சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இந்த நான்கு மாநிலங்களில் தான் நாட்டிலேயே மிகக் குறைந்தவான அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், பஞ்சாபின் தான் தடுப்பூசி விகிதம் 1.3 ஆகக் குறைவாக உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil