எல்.எஸ் மூர்த்தி என்பவர் 1971ம் ஆண்டு புனேவிற்கு வந்தார். அவர் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் பிறந்தவர். இந்நிலையில் புனேவில் எப்படி அவருக்கு தமிழ் பிராமிண சாப்பாடு கிடைக்கும். இதனால் அவர் தென் இந்திய சைவ உணவகத்தை ராஸ்தா பெத் என்ற பகுதியில் தொடங்கினார்.
இந்நிலையில் காலை டிபனுக்கு இட்லி, வடை , காப்பியை அவர் தயார் செய்வார். வீட்டு உணவைப்போலவே இது இருக்கும். இந்நிலையில் ஒவ்வோன்றுக்கும் 50 பைசா அல்லது தோசைக்கு ரூ .1 மட்டுமே வசுலிக்கிறார். மேலும் இங்கே பொங்கல், ஊத்தப்பம், மதிய உணவு சாதம், சாம்பார், பொறியல் எல்லாம் கிடைக்கும்.
அருகில் உள்ள தாராசன்ந்த் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், காலை உணவுக்கு இங்கே வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் சோலாபூர் மற்றும் மகாராஷ்ட்ராவின் பல்வேறு இடங்களில் இருந்து இங்கே சாப்பிட வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த மெஸ், தென் இந்திய அர்பன் ஹாஸ்டல் சொசைட்டியால் நடத்தப்படுகிறது. இந்த சொசைட்டியின் செயலாளர் வி.சி கணேஷ், இந்த மெஸ்-சுக்கு புதிதாக வருபவர்களிடம் ” இந்த உணவகம் 1933 தொடங்கப்பட்டது என்றும், இந்த உணவகத்திற்கு மேல் தளத்தில் தங்குவதற்கு இடம் இருப்பதாகவும்” கூறுகிறார்.
இந்நிலையில் இந்த உணவகம் தொடங்கிய காலத்தில் இது ’பி’ கிரேட் உணவகமாக இருந்தது. எல்லா சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இங்கே அனுமதி உண்டு. அப்போதெல்லாம் கேரளா, தமிழ்நாடு,கர்நாடகா, ஆந்திர பிரதேசம், உள்ளிட்ட இடங்களில் இருந்து இளைஞர்கள் அரசு வேலைக்காக பூனேவிற்கு வருவார்கள்.
ராஸ்தா பெத், ஒரு குட்டி தெற்கு இந்தியாவாகதான் இருந்தது. இங்கே தமிழ் பேசுபவர்கள்தான் இருந்தனர். தென் இந்தியாவின் உணவுகள் இங்கே கிடைக்கும். இந்நிலையில் தற்போது தனியார் நிறுவனங்கள் அதிகமாகிவிட்டதால், இங்கிருந்து வேறு இடத்திற்கு மக்கள் சென்றுவிட்டனர் என்று மூர்த்தி கூறுகிறார். இப்போது அவருக்கு 70 வயதாகிறது. இந்த சொசைட்டியின் துணை தலைவராக இவர் இருக்கிறார்.
இந்நிலையில் இந்த உணவகத்தில் சரியான நேரத்தில் மட்டுமே உணவு வழங்கப்படும். காலை உணவு 7 மணி முதல் 11 மணி வரையும். மதிய உணவு 11.30 முதல் 2.30 வரையும் . இரவு ஸ்நாக்ஸ் 6.15 முதல் 9 மணி வரை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தினமும் கிட்டதட்ட 200 பேர் இந்த உணவகத்திற்கு வருவார்கள். ஞாயிற்று கிழமைகளில் காலையில் மட்டும் 200 பேர் வருவார்கள். சில நேரங்களில் 30 நிமிடம் வரை காத்திருக்கும் நிலை ஏற்படும்.

இந்நிலையில் ரமேஷ் ஐயர்-தான் உணவகத்தில் தலைமை சமையல்காரர் மற்றும் மேலாளர். இந்நிலையில் இவர் தமிழகத்தில் உள்ள காரைக்குடியில் பிறந்தார். 25 வருடங்களுக்கு முன்பு பூனே வந்த இவர், ஸ்ரீ அன்னபூர்னா என்ற பெயரில் கேட்டரிங் தொழிலை செய்கிறார். பூனேவில் நடக்கும் தென் இந்திய திருமணங்களுக்கு, இவரது கேட்டரிங் சமையல்தான். இந்நிலையில் இவர் இந்த சொசைட்டிக்கு தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதால் இங்கே சமையல் பணியை செய்கிறார். “ மக்களுக்கு சமைத்து உணவு வழங்குவது என்றால் எனக்கு வருப்பம். எனது முன்னோர்களும் சமையல் துறையில்தான் இருந்தனர். நான் இங்கே நிறைய பேருக்கும் சமைக்கும்போது, எனது முன்னோர்கள் என்னை ஆசீர்வதிப்பதாக நினைக்கிறேன்” என்று கூறுகிறார்.
இந்நிலையில் 5 மாநிலங்களின் உணவுகள் இங்கே பரிமாறப்படுகிறது. மேலும் சோமாட்டோ மற்றும் சுகியில் கூட இந்த உணவகத்திற்கு பெரும் வரவேறுப்பு உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil