scorecardresearch

தமிழகத்தின் ஒரு சிறிய தலித் கட்சி கே.சி.ஆரின் தேசிய திட்டத்தில் இடம்பிடித்தது எப்படி?

தமிழகத்தில் தி.மு.க-வின் முக்கிய கூட்டணி கட்சித் தலைவரான தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் முக்கிய பங்கெடுக்க திட்டமிட்டுள்ளது.

Telangana Rashtra Samithi, Bharat Rashtra Samithi, கேசிஆர், தெலங்கானா, தலித் கட்சி, தமிழ்நாடு, தொல் திருமாவளவன், விசிக, K Chandrasekhar Rao, Tamil Nadu, politicla pulse, thirumavalavan, Viduthalai Chiruthaigal Katchi, Tamil indian express news

தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) என மாற்ற ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய நாளில், ஐதராபாத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக தலித் தலைவரும், தி.மு.க-வின் முக்கிய கூட்டணி கட்சித் தலைவருமான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இருந்தார். இதைத் தொடர்ந்து, மறுநாள், ஐதராபாத்தில் தலித் மாநாட்டை கூட்டப்போவதாக தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்) அறிவித்தபோது அப்போதும் தொல். ​​திருமாவளவன் உடனிருந்தார்.

பி.ஆர்.எஸ் கட்சித் தொடக்க விழாவில் தொல். திருமாவளவன் கலந்து கொண்டது கவனத்தை ஈர்த்துள்ளது. தி.மு.க-வின் சிறிய கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான வி.சி.கே, தெலங்கானாவில் கே.சி.ஆரின் தேசிய குரலில் எவ்வாறு பொருந்திப்போனது?

2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் வாக்குகளை பிரித்து அதன் தோல்வியை உறுதி செய்த இடதுசாரிக் கட்சிகளின் மூன்றாவது அணியில் வி.சி.க இருந்தது என்றாலும் 2019 மக்களவைத் தேர்தலில் தொல். திருமாவளவன் மீண்டும் தி.மு.க கூட்டணிக்கு வந்தார். இப்போது தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் விருப்பமான கூட்டணி கட்சிகளில் ஒன்றான வி.சி.க, 2019 தேர்தலில் 2 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், சட்டமன்றத்தில் நான்கு எம்.எல்.ஏ-க்களையும் பிடித்தது. தொல். திருமாவளவனும் அவருடைய நம்பிக்கைக்குரிய எழுத்தாளரும் மூத்த வி.சி.க தலைவருமான டி.ரவிக்குமாரும் வெற்றி பெற்ற இரண்டு எம்.பி. சீட்கள் வி.சி.க.வின் வாய்ப்பை பெரிய அளவில் மாற்றியது.

தொல். திருமாவளவன் பா.ஜ.க-வின் கடுமையான எதிர்ப்பாளராகத் தொடர்கிறார். பா.ஜ.க-வுடன் மென்மையாக நடந்து கொள்வதாகத் தெரியும் போதெல்லாம் தி.மு.க-வை எச்சரித்து வருகிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ரவிக்குமார், தலித் மாநாட்டிற்கு கே.சி.ஆரின் அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு தங்களுக்குப் பல காரணங்கள் இருப்பதாகக் கூறினார்.

“முக்கியமாக, தெலுங்கானா அரசின் முன்முயற்சிகளை நாங்கள் மதிக்க விரும்பினோம். தலித் நலனுக்காக அவர்கள் தங்களின் பட்ஜெட்டில் சுமார் 13 சதவீதத்தை செலவிடுகிறார்கள். இது தேசிய சராசரியை விட ஐந்து மடங்கு அதிகம். தலித் மக்களுக்கு அரசு ஒப்பந்தங்களில் 10 சதவீதமும், தலித் தொழில் முனைவோர்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்கும் தலித் பந்து உள்ளிட்ட பல திட்டங்களை அவர்கள் அறிமுகப்படுத்தினர். இவை ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் கொள்கைகளாக நாங்கள் கருதுகிறோம்” என்று ரவிக்குமார் கூறினார். மேலும், தெலுங்கானா அரசு அனைத்து தலித் பள்ளிகளையும் தற்போது மாநிலத்தில் சிறந்ததாக இருக்கும் சிறப்புப் பள்ளிகளாக மாற்றியுள்ளது.

“பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் அரசு ஒப்பந்தங்களில் தலித்துகளுக்கு வெறும் 1 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். ஆனால், அது ஒருபோதும் கவனத்தில் கொள்ளப்படவில்லை” என்று ரவிக்குமார் கூறினார்.

இருப்பினும், 2019-ம் ஆண்டில், மு.க. ஸ்டாலினை கே.சி.ஆர் அழைத்த நேரத்தில், தெலுங்கானா முதல்வருடன் கைகோர்ப்பதற்கு எதிராக திமுகவை எச்சரித்த வி.சி.க அவரை பாஜகவின் பி டீம் தலைவர் என்று அழைத்தார். இதுபற்றி ரவிக்குமார் கேட்டதற்கு, சூழ்நிலைகள் கே.சி.ஆர் கட்சியை பா.ஜ.க. கட்டாயப்படுத்தியது. எனவே, அவர்கள் இனி பாஜக பி-டீம் அல்ல என்று அவர் கூறினார்.

மேலும், ரவிக்குமார் கூறுகையில், காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி பா.ஜ.க-வுக்கு சாதகமாக அமையும் என்ற நிலைப்பாட்டை வி.சி.க தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சி கூட்டணியில் முக்கியப் பங்கு வகிக்க வி.சி.க திட்டமிட்டுள்ள நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 1% வாக்குகளைப் பெற்றிருந்த வி.சி.க தமிழ்நாட்டுக்கு வெளியில் தனது பார்வையை விரிப்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. வி.சி.க இப்போது தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் கட்சிப் பொறுப்பாளர்களைக் கொண்டுள்ளது. மேலும், மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலும் தமிழர்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றுள்ளது. கேரளா, கர்நாடகா போன்ற தமிழ் மக்களுடன் மட்டும் கட்சி நின்றுவிடாமல், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வி.சி.க அலுவலகத்தில் தெலுங்கு பேசும் தொண்டர்களையும் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில், வி.சி.க-க்கு சொந்தமாக ‘நமது தமிழ் மண்’ மாத இதழும், வெளிச்சம் என்ற தொலைக்காட்சி சேனலும் உள்ளது. ஆனால், அவை இன்னும் முழு வீச்சில் செயல்படாமல் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: How a small tamil nadus dalit party found its space in kcrs national blueprint

Best of Express