மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தின் காரணமாக மகாராஷ்டிராவில் சாத்தியமான துருவமுனைப்பை எதிர்கொண்ட பா.ஜ.க, குன்பிஸ் (பெரிய ஓ.பி.சி (OBC) குழுக்களில் ஒன்று) மற்றும் மராத்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீடு சலுகைகளை வழங்குவதை எதிர்த்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (OBCs) ஒருங்கிணைக்க ஒரு நுட்பமான உத்தியை உருவாக்கியது, பா.ஜ.க அதன் மஹாயுதி கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அந்த உத்தியானது சட்டமன்றத் தேர்தலில் பெரும் பலனைக் கொடுத்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: How BJP cracked the OBC puzzle in Maharashtra
பா.ஜ.க உத்தியின் ஒரு முக்கிய அம்சம், சிறிய ஓ.சி.பி சமூகங்களைச் சென்றடையும் வகையில் 20க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களை உருவாக்குவது ஆகும், சிறிய ஓ.பி.சி சமூகங்கள் சுமார் 350 என மதிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில பிற்படுத்தப்பட்ட நலத்துறையின் படி, ஒட்டுமொத்த மாநில மக்கள்தொகையில் 38% ஓ.பி.சி.,கள் உள்ளனர்.
இந்த துணை நிறுவனங்களை உருவாக்குவதற்கான அறிவிப்புகளை மகாராஷ்டிரா நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஆகஸ்ட் 2023 இல் வெளியிட்டபோது முதல் படி எடுக்கப்பட்டது. மாநில ஓ.பி.சி துறையின் கீழ் வரும் இந்த அமைப்புகள், கல்வி, வணிகம் அல்லது பிற நோக்கங்களுக்காக குறிப்பிட்ட சமூகங்களில் இருந்து தேவைப்படுபவர்களுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன. மேலும் இந்த துணை நிறுவனங்கள் ஓ.பி.சி சமூக உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.
ஆகஸ்ட் 2023 மற்றும் அக்டோபர் இடையே, சிறிய மற்றும் குறிப்பிடத்தக்க ஓ.பி.சி குழுக்களை இலக்காகக் கொண்ட 13 துணை நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. அவை குரவ் சமூகத்திற்கான சாண்ட் காஷிபா குரவ் யுவா நிதி மேம்பாட்டுக் கழகம்; லிங்காயத்துகளுக்கான ஜகத்ஜோதி மகாத்மா பசவேஷ்வர் நிதி மேம்பாட்டுக் கழகம், நாபிக்களுக்கான சந்த் சேனாஜி கேஷ்ஷில்பி நிதி மேம்பாட்டுக் கழகம்; பாரி சமூகத்திற்கான சாந்த் நர்ஹரி மஹராஜ் நிதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் ராஷ்ட்ரசன்ட் ஸ்ரீ ரூப்லால் மஹராஜ் நிதி மேம்பாட்டுக் கழகம்; லோனாரி சமூகத்திற்கான மறைந்த விஷ்ணுபந்த் தாத்ரே (லோனாரி) நிதி மேம்பாட்டுக் கழகம்; டெலி சமூகத்திற்கான சாந்தாஜி ப்ரிதிஷ்தான் தெலிகானா நிதி மேம்பாட்டுக் கழகம்; இந்து காடிக் சமூகத்திற்கான இந்து காடிக் சமாஜ் நிதி மேம்பாட்டுக் கழகம்; மற்றும் லோஹரி சமூகத்திற்கான லோஹர் சமூக நிதி மேம்பாட்டுக் கழகம்.
அக்டோபர் 10 அன்று, தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், ஷிம்பி சமூகத்திற்காக ஸ்ரீ சந்த் ஷிரோமணி நாம்தேவ் மகாராஜ் சமஸ்ட் ஷிம்பி சமாஜ் நிதி மேம்பாட்டுக் கழகம்; லட்ஷாகி வாணி மற்றும் வாணி சமூகங்களுக்கான சோலா குல்ஸ்வாமினி நிதி மேம்பாட்டுக் கழகம்; லிவா படிதார் சமூகத்திற்கான லிவா படிதார் நிதி மேம்பாட்டுக் கழகம்; குஜார்களுக்கான குஜர் சமாஜ் நிதி மேம்பாட்டுக் கழகம்; மற்றும் கவாலி சமூகத்திற்கான ஸ்ரீகிருஷ்ணா நிதி மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றை அமைக்க ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவை முடிவு செய்தது.
இந்த துணை நிறுவனங்களைத் தவிர, மற்ற சிறிய ஓ.பி.சி குழுக்களுக்காக இரண்டு சுயாதீன நிறுவனங்களும் மார்ச் மாதம் உருவாக்கப்பட்டன. சுடர் மற்றும் வின்கர் அல்லது நெசவாளர் சமூகங்களுக்கான சுடர் சமாஜ் நிதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் விங்கர் சமாஜ் நிதி மேம்பாட்டுக் கழகம்.
மாநிலத்தின் ஓ.பி.சி துறையின் கீழ் வரும் வசந்த்ராவ் நாயக் விமுக்த ஜாதி மற்றும் நாடோடி பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ், மேலும் நான்கு துணை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அவை ராமோஷி அல்லது பேடர் சமூகத்திற்கான ராஜே உமாஜி நாயக் நிதி மேம்பாட்டுக் கழகம்; வடார் சமூகத்தினருக்காக பைல்வான் லேட் மாருதி வடார் நிதி மேம்பாட்டுக் கழகம்; லோஹர் சமூகத்திற்கான பிரம்மாலின் ஆச்சார்யா திவ்யானந்த் பூரிஜி மகாராஜ் நிதி மேம்பாட்டுக் கழகம்; மற்றும் நாத்பனாதி தாவரி கோசாவி, நத்ஜோகி, பாரதி ஜோகி, இங்க்டிவாலே, மரியாயிவாலே, பஹுரூபி, கோசாவி, ஸ்மாஷன் ஜோகி, பால்சந்தோஷி, கோந்தலி, டோம்பாரி மற்றும் சித்ரகதி சமூகங்களுக்கு பரம்புஜ்ய கங்கநாத் மகராஜ் நிதி மேம்பாட்டுக் கழகம்.
"நிறுவனங்களை அமைப்பதன் பின்னணியில் உள்ள நோக்கங்களில் ஒன்று, ஓ.பி.சி.,களுக்குள் உள்ள சிறிய சமூகங்களை அரசாங்கம் கவனித்துக் கொள்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாகும். முன்னதாக ஓ.பி.சி.,க்களுக்குள் இருக்கும் பெரிய சாதிகள் கார்ப்பரேஷன் வழங்கும் சலுகைகளை எடுத்துக்கொள்வதாக எப்போதும் உணரப்பட்டது. கார்ப்பரேஷன்களை இலக்கு வைத்து அமைப்பது இந்த சமூகங்களை மஹாயுதியுடன் நெருக்கமாக்கியது,” என்று ஒரு பா.ஜ.க அமைச்சர் கூறினார்.
சட்டமன்றத் தேர்தல்கள் முதன்மையாக உள்ளூர்மயமாக இருப்பதால், இந்த ஒவ்வொரு சமூகமும், எவ்வளவு சிறியதாக இருந்தாலும், முக்கியமானது என்று அந்த பா.ஜ.க தலைவர் கூறினார். “சமூகங்கள் எண்ணிக்கையில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், சட்டமன்ற மற்றும் வார்டு அளவிலான தேர்தல் என்று வரும்போது அவர்களின் வாக்குகள் கணக்கில் கொள்ளப்படும். எங்கள் முயற்சிகள் அவர்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது போல் தெரிகிறது, மேலும் அவர்கள் எங்கள் பின்னால் அணிதிரண்டனர்,” என்று அந்த தலைவர் கூறினார்.
பா.ஜ.க மற்றும் மகாயுதியின் தேர்தல் கணிதம் வெற்றிபெற, ஓ.பி.சி.,யினரை ஒருங்கிணைப்பது முக்கியமானதாக இருந்தது, ஏனெனில் காங்கிரசுடன் பா.ஜ.க நேரடியாக போட்டியிடும் விதர்பாவில் உள்ள 62 இடங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் (36) இந்த சமூகங்கள் வெற்றிக்கு உதவும் என்று நம்பப்பட்டது. மகாராஷ்டிராவை வெல்வதற்கு விதர்பாவை வெல்வது முக்கியமானது மற்றும் விதர்பாவை வெற்றி பெற ஓ.பி.சி.,களின் ஆதரவு முக்கியமானது.
1980 களின் முற்பகுதியில் "MADHAV சூத்திரத்தை" பா.ஜ.க மேற்கொண்டதன் மூலம், ஓ.பி.சி.,களை ஒருங்கிணைக்கும் பா.ஜ.க.,வின் முயற்சி புதிதல்ல. மாதவ் என்பது ஆதிக்கம் செலுத்தும் ஓ.பி.சி குழுக்களான மாலி, தங்கர் மற்றும் வஞ்சாரியைக் குறிக்கிறது. மாதவ் சூத்திரம் மராட்டியர்களிடமிருந்து வேறுபட்ட ஆதரவுத் தளத்தை உருவாக்க உதவியது. மேலும் "பிராமண, பனியா கட்சி" என்ற பிம்பத்தை மாற்றியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.