கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தோல்வியை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஒப்புக்கொண்டார். இதனால், அதன் தோல்விக்கு வழிவகுத்த காரணிகளைப் பற்றிய சுயபரிசோதனையை அக்கட்சி தொடங்கியுளளது.
எனினும், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பே தேர்தலில் தோல்வியடைந்ததை பாஜக வட்டாரங்கள் ஒப்புக்கொண்டன.
தலைமை குழப்பம்
பாரதிய ஜனதா கட்சிக்கு இளைய தலைமை வேண்டும் என்ற எண்ணத்தில் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் பசவராஜ் பொம்மைக்கு முதல் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
பசவராஜ் பொம்மை நல்ல நிர்வாகி என்று பெயரெடுத்தார். எனினும் ஒரு தலைவராக தன்னை வெளிப்படுத்த தவறிவிட்டார். இதனால் பி.எஸ். எடியூரப்பாவிடம் இருந்து பின்வாங்கினார்.
ஒரு கட்டத்தில் நரேந்திர மோடியுடன் அனைத்து பரப்புரை கூட்டங்களிலும் எடியூரப்பாதான் காணப்பட்டார். இது கட்சித் தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்தக் குழப்பம் கட்சிக்குள்ளும் நீடித்தது. கட்சி 72 புதிய வேட்பாளர்களை அறிமுகம் செய்தது. இதனால் மூத்த நிர்வாகிகளுக்கு சீட் கொடுக்கவில்லை.
அதிருப்தி காரணமாக ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட 8 முக்கிய தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தனர்.
தெளிவில்லாத பரப்புரைகள்
பாரதிய ஜனதாவின் தேர்தல் பரப்புரைகள் வளர்ச்சி என்ற பாதையில் பயணித்து இந்துத்துவா என்ற பாதையில் நிறைவுற்றது. பஜ்ரங் தளம் பற்றிய காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை தொடர்ந்து, பாஜக ஹனுமன் தோளில் சவாரி செய்ய ஆரம்பித்தது.
மறுபுறம் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளுங்கட்சி தலைவர்களிடம் இருந்து நம்பகமான தகவல்கள் வரவில்லை. இதனை எதிர்க்கட்சித் தலைவர்கள் சுட்டிக் காட்டினர்.
குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் தோல்வி
கர்நாடக பாரதிய ஜனதா அரசாங்கம் 40 சதவீத கமிஷன் அரசு என்ற பரப்புரையை காங்கிரஸ் முன்னெடுத்தது. இதனை எதிர்கொள்ள பாஜக தவறிவிட்டது.
பாஜக தலைவர்களால் இதற்கு தக்க பதிலடி கொடுக்க முடியவில்லை. மறுபுறம் சித்த ராமையா, டி.கே. சிவக்குமார் இடையே முரண்பாடுகள் இருந்த போதிலும் இருவரும் ஒன்றிணைந்து பரப்புரையை மேற்கொண்டனர்.
மோடி மீதான அதீத நம்பிக்கை
இமாச்சலப் பிரதேசத்துக்கு அடுத்தப்படியாக கர்நாடகாவில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. உள்ளூர் தலைவர்கள் மோடியை நம்பியிருந்தனர்.
மாநில, தேசிய அரசியலுக்கு இடையே மக்கள் வித்தியாசம் காட்டுகிறார்கள் என்பதை படிக்கவும் மாநில தலைமை தவறிவிட்டது.
இரண்டாம் நிலை தலைவர்கள் இல்லை
கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாவை தவிர சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் தலைவர் இல்லை. இந்நிலையில், எடியூரப்பா கூட களத்தில் இல்லை.
இது கர்நாடகத்தில் மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களில் பாஜக இந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறது. உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத், அஸ்ஸாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தவிர முக்கிய தலைவர்கள் இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“