Advertisment

ஷிவ் நாடார் பல்கலைகழக வளாகத்தில் மாணவி சுட்டுக் கொலை: போலீஸ் தீவிர விசாரணை

ஷிவ் நாடார் பல்கலைக்கழக மாணவி சினேகா சௌராசியா (21) கிரேட்டர் நொய்டாவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்ற சக மாணவர் அனுஜ் தற்கொலை செய்துகொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How can you let a man roam around with a gun asks father of woman killed at Shiv Nadar University

கிரேட்டர் நொய்டா ஷிவ் நாடார் பல்கலைக்கழகம்

கிரேட்டர் நொய்டாவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் ஷிவ் நாடார் பல்கலைக்கழக மாணவி சினேகா சௌராசியா (21) அனுஜ் என்ற சக மாணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாக உயிரிழந்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய சினேகாவின் தந்தை ராஜ் குமார் சௌராசியா, “எனது குழந்தை விபத்தில் சிக்கியதாக பல்கலைக்கழகம் மூலம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் விரைவாக கான்பூரில் இருந்து பல்கலைக்கழகம் வந்து என்ன நடந்தது என்று தெரிந்துகொண்டேன்.

என் மகளை அவன் இரண்டு முறை சுட முயன்றுள்ளான். பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிக்கு என்ன வேலை? ஒருவன துப்பாக்கியுடன் சுற்றி திரிந்துள்ளான் என்றால் பல்கலைக்கழக பாதுகாவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்” எனக் கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து, “என் மகள் வியாழக்கிழமை சுடப்பட்டுள்ளார். இன்னமும் உடற்கூராய்வுகள் முடியவில்லை. நான் 24 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கிறேன்” என்றார்.
இதற்கிடையில் வழக்கின் விசாரணையின்போது பல்கலைக்கழக அதிகாரிகள் முறையாக பதில் சொல்லவில்லை என போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள், “அவர்கள் முதலில் நாய் கடி என்றார். பின்னர் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர்” என்றார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டுகளை மறுத்தார். “சம்பவம் மற்றும் மாணவர் துப்பாக்கி வைத்திருந்தது எப்படி என்பது குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் போலீஸ் விசாரணையையும் ஒருங்கிணைத்து வருகிறோம்” என்றார்.

மேலும், நாங்கள் மாணவிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்துவிட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்” என்றனர்.

நள்ளிரவு 1.20 மணியளவில் அனுஜ் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு வீடியோ கிளிப்பை அனுப்பியதாகக் கூறப்படுகிறது, அதில் அவர் சினேகாவுடன் உறவில் இருப்பதாகவும் ஆனால் அவர்கள் இனி ஒன்றாக இல்லை என்றும் கூறினார்.

22 நிமிட வீடியோவில், யாரையும் நம்ப முடியவில்லை" என்றும் கூறினார். அவர் "மூன்றாம் கட்ட மூளை புற்றுநோயால் கண்டறியப்பட்டதாக" கூறினார், ஆனால் அவரது பெற்றோரிடம் சொல்லவில்லை. அந்த பெண்ணை தண்டிப்பது குறித்து பேசிய அனுஜ், இருவரின் பெற்றோரிடமும் மன்னிப்பு கேட்டார்.

சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு பல்கலைக்கழக அதிகாரிகள் வீடியோவைப் பார்த்தீர்களா என்று கேட்டதற்கு, அனுஜ் சினேகாவை சுட்டுக் கொல்லும் முன் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ தனக்கு கிடைக்கவில்லை என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதற்கிடையில் அனுஜ்க்கு மூளை புற்றுநோய் பிரச்னை இல்லை என்பதும் அவரிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Noida
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment