Advertisment

ராமர் கோவில் விண்வெளியில் இருந்து எப்படித் தெரியும்? செயற்கைக்கோள் படத்தை வெளியிட்ட இஸ்ரோ

அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயிலின் செயற்கைக்கோள் படங்களை வெளியிட்ட இஸ்ரோ; கார்டோசாட் மூலம் எடுக்கப்பட்டது

author-image
WebDesk
New Update
ram temple isro

புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலின் செயற்கைக்கோள் படம் கார்டோசாட் மூலம் எடுக்கப்பட்டது. (புகைப்பட உதவி: ISRO)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயிலின் செயற்கைக்கோள் படங்களை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: How does Ayodhya’s Ram Mandir look from space? ISRO releases satellite image

இந்திய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளில் இருந்து எடுக்கப்பட்ட, இஸ்ரோ பகிர்ந்துள்ள இந்த படம் ஜனவரி 22 அன்று திறக்கப்படும் புதிய ராமர் கோவிலை காட்டுகிறது.

இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டரால் (NRSC) செயலாக்கப்பட்ட கார்டோசாட் மூலம் ராமர் கோயிலின் செயற்கைக்கோள் படம் எடுக்கப்பட்டது. கார்டோசாட் என்பது தொலைதூர உணர்திறன் செயற்கைக்கோள் ஆகும், இது சுற்றுப்பாதையில் ஸ்டீரியோ படங்களை வழங்கும் திறன் கொண்டது.

பி.எஸ்.எல்.வி-சி40 கார்டோசாட்-2 சீரிஸ் செயற்கைக்கோளைக் கொண்டு செல்கிறது என்று இஸ்ரோவின் இணையதளம் கூறுகிறது, கார்டோசாட் பயனர்களுக்கான தரவுச் சேவைகளை மேம்படுத்தும் வகையில் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் ஆகும். இந்தத் தொடரில் முந்தைய செயற்கைக்கோள்களின் வடிவமைப்பைப் போலவே இந்த செயற்கைக்கோள் உள்ளது.

"செயற்கைக்கோள் மூலம் அனுப்பப்படும் படங்கள் வரைபடவியல் பயன்பாடுகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பயன்பாடுகள், கடலோர நில பயன்பாடு மற்றும் ஒழுங்குமுறை, சாலை நெட்வொர்க் கண்காணிப்பு போன்ற பயன்பாட்டு மேலாண்மை, நீர் விநியோகம், நில பயன்பாட்டு வரைபடங்களை உருவாக்குதல், புவியியல் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட அம்சங்கள் பல்வேறு நிலத் தகவல் அமைப்பு (எல்.ஐ.எஸ்) மற்றும் புவியியல் தகவல் அமைப்பு (ஜி.ஐ.எஸ்) பயன்பாடுகள் ஆகியவற்றை வெளிக்கொணரவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்று இஸ்ரோ கூறியது.

கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தசரத் மஹால், அயோத்தி ரயில் நிலையம் மற்றும் புனிதமான சரயு நதி ஆகியவை வான்வழிப் படத்தைக் காட்டுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பலர் முன்னிலையில் திங்கள்கிழமை ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Isro Ram Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment