இஸ்ரோ வழக்கு : இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நாராயணன் நம்பி இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பங்களை ரஷ்யாவிற்கும் பாகிஸ்தானிற்கும் பணத்திற்காக விற்றுவிட்டார் என்று கூறி 1994ல் கைது செய்யப்பட்டார்.
அவருடன் விஞ்ஞானி சசிக்குமாரும் கைது செய்யப்பட்டார். 1994ல் கைது செய்யப்பட்டு 1998ல் அவர் குற்றமட்டவர் என்று கூறி அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் நம்பி நாராயணனைப் போல் நஷ்டஈடு கேட்டு வழக்கு ஒன்றும் போடவில்லை.
இந்த வழக்கினை அடுத்து இஸ்ரோவைப் பற்றியும் நாட்டில் நடக்கும் விசயங்கள் பற்றியும் எதையும் பெரிதாக காதில் போட்டுக் கொள்வதில்லை என்று கூறியிருக்கிறார் அந்த 79 வயது விஞ்ஞானி.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இஸ்ரோ வழக்கு குறித்து பேசும் நம்பி நாராயணன் தோழர் மற்றும் விஞ்ஞானி
நம் நாட்டின் முதல் தலைமுறை விஞ்ஞானிகளில் ஒருவரான சசிக்குமார் 1999ல் இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்றவர். பின்னர் தன் வாழ்நாளை திருவனந்தபுரத்தில் கழித்து வருகிறார். அவருடைய நண்பருக்கு நஷ்ட ஈடாக 50 லட்சம் ரூபாய் கிடைத்திருப்பதை எண்ணி அதிக மகிழ்ச்சி அடைந்ததாக அவர் கூறியிருக்கிறார். ஆனாலும் இழந்து போன அனைத்தையும் பணத்தைக் கொண்டு ஈடு செய்ய இயலாது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
நம்பி நாராயணன் நவம்பர் 30, 1994ல் கைது செய்யப்பட்டார். சசிக்குமார் நவம்பர் 21, 1994ல் கைது செய்யப்பட்டார். இருவரும் கேரள காவல் துறையால் 50 நாட்கள் சிறையில் சித்ரவதை அனுபவித்திருக்கிறார்கள்.
இந்த கைது நடவடிக்கை மற்றும் மொத்த வழக்கும் ஒருவரின் முட்டாள் தனத்தால் உருவானதே தவிர வேறொன்றும் இல்லை. இந்த காரணத்தால் மொத்த நாடே பாதிக்கப்பட்டது. இது ஒரு வழக்கு அல்ல. கூர்ந்து கவனித்தால் மூன்று முக்கிய தேவைகளுக்காக ஜோடிக்கப்பட்ட வழக்காகும்.
மற்ற விஞ்ஞானிகளின் தற்போதைய நிலை
அரசியல்வாதிகள் இடையில் நடைபெறும் பிரச்சனைகள் காரணமாக இஸ்ரோ நிறுவனத்திற்குள் பெரிய பெரிய தடங்கல்கள் உள்ளாகின. ரஷ்யாவில் இருந்து கிடைக்கப்பெற வேண்டிய க்ரையோஜெனிக் எஞ்சின்கள் கிடைக்கப் பெறுவதில் நிறைய தாமதம் ஏற்பட்டது.
ரஷ்யாவில் இருந்து உதவிகளை அந்த காலத்தில் பெறுவது மிகவும் சுலபமான ஒன்றாக இருந்தது. ஆனால் இந்த நிகழ்வுக்குப் பின்னால் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. இந்த விசாரணைக்காக கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்குமே இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சசிக்குமார் கூறியிருக்கிறார்.
ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான க்ளாவ்கோஸ்மாஸின் இந்திய பிரதிநிதியாக இருந்த கே. சந்திரசேகரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் தான். அவர் கடந்த ஞாயிறு அன்று பெங்களூரில் உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.கே. ஷர்மா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்.
சந்திரசேகர் மிகவும் வறுமையான நிலையில் உயிரிழந்தார். அவருடைய இறுதி நாட்கள் முழுவதையும் மருத்துவமனையில் கழித்தார். அவருடைய கட்டணங்களை கட்டுவதற்கும் கூட முடியாமல் இறந்துவிட்டார். இந்திய பிரதிநிதியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்.
ஷர்மாவும் தற்போது மிகவும் மோசமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த வழக்கிற்கு பின்னால் எங்களின் வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமைந்துவிடவில்லை என வருத்தம் தெரிவித்திருக்கிறார் சசிக்குமார்.
இழப்பீடு ஏதும் வேண்டாம் என கூறும் சசிக்குமார்
இந்த குற்றச்சாட்டிற்கு அடிப்படை ஆதாரமாக இருந்தவர்கள் மாலத்தீவினை சேர்ந்த மரியம் ரஷீதா மற்றும் பௌசியா ஹாசன் ஆவார்கள். ஆனால் இந்த விசாரணை முடியும் வரை இந்தியாவில் தான் இருந்தார்கள். விசாரணை முடிவுற்ற பின்பும் அவர்கள் மாலத்தீவிற்கு அனுப்பி வைக்கப்படவில்லை. மாறாக இந்தியாவில் தான் இருந்தார்கள்.
எனக்கு நஷ்டஈடு எதுவும் தேவையில்லை. ஒரு வேளை எனக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டால் அதை பிரதமர் நிவாரணா நிதிக்கு அனுப்புவேன். ஆனால் குற்றம் செய்யப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் கூறினார் சசிக்குமார்.