Advertisment

அசோக் கெலாட்டின் சாமர்த்திய ஆட்டம்; காங்கிரஸ் தலைமை வருத்தம்

முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்க கூடாது என நெருக்கடி கொடுக்கும் அசோக் கெலாட்; சிக்கலில் காங்கிரஸ் தலைமை

author-image
WebDesk
New Update
அசோக் கெலாட்டின் சாமர்த்திய ஆட்டம்; காங்கிரஸ் தலைமை வருத்தம்

Manoj C G 

Advertisment

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது முடிவை அறிவித்த பிறகு, ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தானில் முழுப் பொது பார்வையில் மூத்த தலைவர் அசோக் கெலாட்டின் திறமையான பவர்ப்ளே விளையாட்டு, விரும்பிய முடிவுகளை நோக்கி முடிவுகளை எடுக்கும் கட்சித் தலைமையின் திறன் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

காங்கிரஸின் தலைமை அதாவது காந்தி குடும்பம் அசோக் கெலாட்டின் சாமர்த்தியமான நாடகத்தால் சிக்கலில் உள்ளது, அசோக் கெலாட் தான் தலைமை பொறுப்பில் இருந்தாலும் ஆதிக்கம் செலுத்த மாட்டேன் என்றும், கொல்லைப்புறத்தில் ராஜாவாக இருக்க விரும்புவதாகவும் கூறிய நிலையிலும், காந்தி குடும்பத்துக்கு இந்த சிக்கல் வந்துள்ளது. ராஜஸ்தானின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளைக் கேட்க விரும்புவதாக அசோக் கெலாட் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியதால் இந்த சிக்கல் எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்: ஹாலிவுட் நடிகர் போட்ட ஒத்த ட்வீட்.. குதுகலமான காங்கிரஸ் தலைவர்கள்..!

தனக்கு நெருக்கமான ஒரு தலைவரை அடுத்த முதல்வராக நியமிக்க வேண்டும் என்பதில் அசோக் கெலாட் ஆர்வமாக இருந்தார். அவர் சச்சின் பைலட் பதவியேற்பதற்கு எதிராக இருக்கிறார், அதனால் தான்  அவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை முதலமைச்சராகத் தொடர விரும்புவதாக சிக்னல் காட்டி வருகிறார்.

தலைமை ஒருவேளை அசோக் கெலாட்டின் சமிக்ஞைகளை தவறாகப் புரிந்துக் கொண்டிருக்கலாம். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை கூட முதல்வர் தாக்கல் செய்யாததால், புதிய முதல்வரை அபிஷேகம் செய்ய கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டுவது குழப்பமாக இருப்பதாக அசோக் கெலாட் முகாம் வட்டாரங்கள் தெரிவித்தன.

இரண்டு பதவிகளையும் ஒருவர் ஆக்கிரமிக்க முடியாது என்று ராகுல் காந்தி அசோக் கெலாட்டுக்கு பகிரங்கமாக சமிக்ஞை கொடுத்தது அவருக்கு (கெலாட்) சங்கடமாக இருந்தது என்றும், இருப்பினும் காங்கிரஸ் தலைவராக அவர் வரலாம் என்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.

அசோக் கெலாட் கருத்தைப் பகிர்ந்து கொண்டாரா என்பது தெரியவில்லை. ராகுல் காந்தியை அசோக் கெலாட் கொச்சியில் சந்திப்பதற்கு முன்பே தனது கருத்துக்களைப் பகிரங்கப்படுத்துவதன் மூலம், ராகுல் காந்தி சாதுரியமான தலைவரின் போட்டியை குறைக்க முயன்றதாக சில தலைவர்கள் கூறினர். காந்திகள் நடுநிலைமையை அறிவித்த போதிலும், பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் குடும்பத்தின் ஆசீர்வாதம் அவருக்கு இருப்பதாக நம்புகிறார்கள்.

அசோக் கெலாட் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்பு, கட்சி சட்டமன்ற குழுத் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று சச்சின் பைலட் எம்.எல்.ஏ.,க்களை அழைத்து பேசியதாக அசோக் கெலாட் முகாம் வட்டாரங்கள் தெரிவித்தன. இது எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது என்கிறார்கள். ஆக, ராகுல் காந்தியிடமிருந்து சிக்னல் கிடைத்தவுடன் சச்சின் பைலட் கை ஓங்குகிறதா?

இது ஒரு பேச்சாக இருந்து வந்தாலும், AICC பார்வையாளர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மாநிலத்தின் AICC பொறுப்பாளர் அஜய் மக்கன் ஆகியோர் பொது மோதலுக்கு முன் எம்.எல்.ஏ.,க்களுடன் எந்த சந்திப்பையும் நடத்தவில்லை என்பதே உண்மை.

அசோக் கெலாட்டுக்கு விசுவாசமான எம்.எல்.ஏக்களின் மினி கிளர்ச்சிக்குப் பிறகு, அதாவது அவர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டுவதையும் பார்த்தபின்னர், ஜெய்ப்பூரில் இருந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய அஜய் மக்கன், எம்.எல்.ஏக்களின் கருத்தைப் பெற சோனியா காந்தி தனக்கும் கார்கேவுக்கும் அறிவுறுத்தியதாக கூறினார். இது ஒரு பின் சிந்தனை போல் தெரிகிறது.

கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் அசோக் கெலாட்க்குப் பிறகு முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுபவரை, தேர்வு செய்ய காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானம் வந்தாலும், முடிவெடுப்பதற்கு முன் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் கருத்துக்களும் கேட்கப்படும் என்ற சோனியா காந்தியின் செய்தியை தானும் மல்லிகார்ஜூன கார்கேவும் சாந்தி குமார் தரிவால், அசோக் கெலாட் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா ஆகியோருக்கு தெரிவித்துள்ளோம் என்று அஜய் மக்கன் கூறினார்.

அப்படியானால், அசோக் கெலாட் முகாம் அதற்கு முன் தனது பலத்தைக் காட்ட விரும்பியது என்பது தெளிவாகிறது. அல்லது இப்படி ஒரு பொது நிலைப்பாட்டை தலைமை எதிர்பார்க்கவில்லை. எது எப்படியிருந்தாலும், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே அசோக் கெலாட் அளித்த நெருக்கடி அவரது தலைவர் தேர்தல் முயற்சியில் இருட்டடிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டரை தசாப்தங்களில் காந்தி குடும்பத்திற்கு வெளியே முதல் தலைவராக வரக்கூடிய அசோக் கெலாட், சச்சின் பைலட்டைப் போலவே, ராஜஸ்தானுக்கு அப்பால் சிந்திக்க முடியாது என்றும், தனது தரையை பாதுகாக்க தலைமைக்கு சவால் விடலாம் என்றும் தெளிவாக தெரிகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment