Advertisment

உக்ரைனுக்கு இந்திய மாணவர்கள் செல்வது எப்படி? ஏஜெண்டுகள் நெட்வொர்க் பின்னணி

உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க செல்லும் இந்திய மாணவர்களில் பெரும்பாலானவர் 2 அல்லது 3-ம் வகுப்பு நகரங்கள் அல்லது கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் வரை உக்ரைனைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்பது சுவாரஸ்யமானது.

author-image
WebDesk
New Update
Ukraine Agents network, Ukraine Agents network recruits candidates for Ukrainian medical universities, உக்ரைனில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள், எம்பிபிஎஸ், மாணவர்களை உக்ரைனுக்கு அனுப்பும் ஏஜெண்ட்கள், இந்தியா, உக்ரைனில் இந்திய மாணவர்கள், Ukrainian medical universities, Indian medical aspirant students, India, Ukraine, indian student, Ukraine crisis

உக்ரைன் நெருக்கடி, இந்தியாவில் மருத்துவக் கல்வியில் உள்ள ஓட்டைகளை பொதுப்பார்வைக்கு முன்னே கொண்டு வந்தது. அது ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைனுக்குச் செல்கிறார்கள் என்ற உண்மையைக் காட்டினாலும், இந்த மாணவர்களில் பெரும்பாலோர் 2 அல்லது 3 ஆம் வகுப்பு நகரங்கள் அல்லது கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பது சுவாரஸ்யமானது. அவர்கள் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் வரை உக்ரைனைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை.

Advertisment

20 வயதான சந்தோஷ் யாதவ் தனது மருத்துவ நுழைவுப் பயிற்சி நிறுவனத்திற்கு வெளியே விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் படித்த ‘நன்கொடை இல்லாமல் எம்.பி.பி.எஸ் படிப்பு’ என்ற வார்த்தைகள் அவரை ஆலோசகர் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்றன.

சந்தோஷ் யாதவ், இப்போது மேற்கு உக்ரைனின் புகோவினியன் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர். அவர் நான்டெட்டில் உள்ள ஹிம்மத் நகர் என்ற சிறிய நகரத்தில் வசிப்பவர். விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த சந்தோஷ் யாதவ், ஆலோசகரின் அலுவலகத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் வரை ஐரோப்பிய தேசத்தைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. இந்திய மாணவர்கள் அதிக அளவில் இருப்பதால், முன்னாள் யு.எஸ்.எஸ்.ஆர் நாடு ஒன்றில் சேர்வது எளிது என்று முதலில் நம்பவைத்தார்.

“மருத்துவம் படிக்க வேண்டும் என்ற லட்சியம் உள்ளவர்களாகிய நாங்கள், நீட் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மற்றும் இறுதியில் எத்தனை பேர் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கு தயாராவதில் உள்ள முரண்பாடுகளை அறிவோம். இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் அதிகம். அரசாங்க சீட் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பது எனக்கும் தெரியும், மேலும், எனது பெற்றோரால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பணம் செலுத்த முடியாது என்று எனக்குத் தெரியும். எனவே, துண்டுப்பிரசுரத்தைப் பார்த்ததும் நான் சென்று விசாரிக்க முடிவு செய்தேன்” என்று சந்தோஷ் யாதவ் கூறினார்.

எனவே, மாணவர்கள் உக்ரைனிய பல்கலைக்கழகங்களில் எப்படி அடைகிறார்கள்? இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான தேவைக்கும் அணுகலுக்கும் இடையே உள்ள இடைவெளியை தங்கள் வாழ்வாதாரமாக மாற்றிய பல்கலைக்கழக ஏஜெண்ட்கள் மற்றும் துணை முகவர்கள் அதை எளிதாக்கும் நெட்வொர்க்களுக்கு நன்றி.

“இந்த ஏஜெண்ட்கள் எங்கள் பயிற்சி மையங்களுக்கு வெளியே துண்டு பிரசுரங்கள் அல்லது விளம்பர அட்டைகளை விநியோகிப்பதை நான் சில முறை பார்த்திருக்கிறேன். ஏஜெண்ட் ஒருவரின் அலுவலகத்திற்கு நான் சென்றபோது, ​​என்னிடம் காட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் வைத்திருந்தனர். இவ்வளவு வசதிகளுடன் கூடிய ஐரோப்பிய நாட்டில் வாழ்க்கையின் கனவு சித்திரத்தை வரைந்தார்கள். அனுமதியிலிருந்து வீடு மற்றும் உணவு வரை அனைத்தையும் கவனித்துக்கொள்வதாக உறுதியளித்தனர்” என்று சந்தோஷ் யாதவ் கூறினார்.

உக்ரைன் நெருக்கடி, இந்தியாவில் மருத்துவக் கல்வியில் உள்ள ஓட்டைகளை பொதுப்பார்வைக்கு முன்னே கொண்டு வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைனுக்குச் செல்கின்றனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த மாணவர்களில் பெரும்பாலோர் 2 அல்லது 3வது வகுப்பு நகரங்கள் நகரங்கள் அல்லது கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் வரை உக்ரைனைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை.

மருத்துவ மாணவர்களை ஏஜெண்ட்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள்? புதிய மாணவர்களைப் பெறுவதற்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்று முன்னாள் மாணவர்கள் வாய்மொழி வழியாக கூறும் பரிந்துரை முக்கியமனாது. அதுமட்டுமல்லாமல், செய்தித்தாள் மற்றும் வானொலி விளம்பரங்கள், கருத்தரங்குகள் மற்றும் வெளிநாட்டு கல்வி கண்காட்சிகள் மாணவர்களை ஈர்க்க உதவுகின்றன.

நான்டேட்டைச் சேர்ந்த மற்றொரு மாணவர் தேஜாஸ் தேவிதாஸ் கெய்க்வாட், அதே பல்கலைக்கழகத்தில் மூத்த மாணவர்களான அவர்களின் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தன்னை ஒரு ஆலோசகரிடம் செல்ல பரிந்துரைத்ததாகக் கூறினார். தேஜாஸ் தேவிதாஸ் கெய்க்வாட் கெய்க்வாட், அவரது தந்தையும் ஒரு மருத்துவர், பெரும்பாலான மாணவர்கள் மற்ற மாணவர்களின் பரிந்துரைகள் மூலம் உக்ரேனிய பல்கலைக்கழகங்களில் முடிவடைகின்றனர் என்றார்.

பெரும்பாலான மாணவர்கள் மற்ற மாணவர்களிடமிருந்து பரிந்துரைகள் மூலம் உக்ரைனிய பல்கலைக்கழகங்களில் சேர்கிறார்கள் என்று கூறினார்.

மேலும் கெய்க்வாட் கூறுகையில், “எங்கள் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் உள்ளே எந்த ஒரு ஏஜெண்ட்டும் வருவதையோ அல்லது எங்களுடன் பேச அனுமதிக்கப்படுவதையோ நான் பார்க்கவில்லை. உண்மையில், பயிற்சி நிறுவனங்கள் இந்தியக் கல்லூரிகளுக்கு மாணவர்களை ஊக்குவிக்கின்றன. ஏனெனில், வெளிநாட்டில் மருத்துவக் கல்வியை முடித்த பிறகு மருத்துவ கவுன்சிலின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை. இந்த ஏஜெண்டுகள் செய்தித்தாள்களில் பல விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். நான் அப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். அது அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கைப் பற்றியது. அதில் நான் எனது பயிற்சியில் இருந்து சில மாணவர்களுடன் கலந்து கொள்ளச் சென்றேன். அங்கே அவர்கள் இந்த வாய்ப்புகளைப் பற்றி எங்களிடம் சொன்னார்கள்” என்று அவர் கூறினார்.

ஆலோசகர்களுடன் நல்ல உறவை வைத்திருப்பது வாய்மொழி வழியான விளம்பரம் அதிக அளவில் இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று மாணவர்கள் தெரிவித்தனர். ஏனெனில், தற்போதைய மாணவர்கள் சேர்க்கை சீசன் நெருங்கியதும் அடுத்த பேட்ச்சில் அந்த வார்த்தைகளைப் பரப்ப உதவுகிறார்கள்.

சில சந்தர்ப்பங்களில், யவத்மாலைச் சேர்ந்த பிரதிக்ஷா ஜாதவ், தற்போது உக்ரைனிய பல்கலைக்கழகத்தில் தனது முதல் ஆண்டில், நீட் தேர்வுக்கு தயார் செய்யும் இணையதளங்களில் வரும் ஆன்லைன் விளம்பரங்கள் ஏஜென்ட்களுக்கு இட்டுச் செல்கின்றன. “நான் ஒரு ஆன்லைன் இணையதளத்தில் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். அது ஜே.இ.இ. மற்றும் நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராவதற்கான வீடியோக்கள் மற்றும் உள்ளடக்கத்திற்காக பிரபலமானது. அதன் மூலம், நான் ஒரு ஏஜெண்ட்டை தொடர்பு கொண்டேன். அவர் பின்னர் என்னையும் எனது குடும்பத்தினரையும் சம்மதிக்க வைத்தார். நான் ஒப்புக்கொண்டதில் இருந்து உக்ரைனில் இருக்கும்போது எதை எடுத்துச் செல்லலாம், ஷாப்பிங் செய்யலாம் என்ற பட்டிலில் இருந்து, உக்ரைனில் இருக்கும் படிப்பு மற்றும் வாழ்க்கை இரண்டிலும் இருந்து என்ன எதிர்பார்க்கலாம், என் பெற்றோரின் பயத்தைப் போக்குதல் என எல்லாவற்றையும் ஏஜெண்ட்கள் கவனித்துக்கொண்டனர். எனது பெற்றோர் நிதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. மற்றவை எல்லாம் கவனிக்கப்பட்டது” என்று அவர் கூறினார்.

சிறிய நகரங்களில் உள்ள மாணவர்களைத் தொடர்புகொள்வது மட்டுமல்ல, அவர்களுக்குத் தெரியாத ஒரு நாட்டில் அவர்களின் பாதுகாப்பைப் பற்றி பெற்றோரை நம்ப வைப்பது ஏஜெண்ட்களின் முக்கிய வேலையாகும் பெற்றோர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் நெட்வொர்க்கைக் காட்டுகிறார்கள். தற்போது படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அவர்கள் தெரிவிக்கிறார்கள். முதலாவதாக, அந்தப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுடன் நேரடியாகக் தொடர்புகொள்வதில்லை. ஆனால், அவர்கள் செய்தாலும், நாம் எதிர்கொள்ளக்கூடிய மொழிப் பிரச்சினைகள் அல்லது பிற கலாச்சார விஷயங்களைப் பற்றி என்ன செய்வது. நல்ல அறைகள், ஆரோக்கியமான இந்திய உணவு, பாதுகாப்பு மற்றும் பலவற்றைப் பெறுவதை உறுதிசெய்ய முடியும் என்று ஏஜெண்ட்கள் எங்கள் பெற்றோரிடம் கூறுகிறார்கள். அதனால், பெற்றோர்களும் பணம் செலுத்துகிறார்கள்” என்று ஜாதவ் கூறினார்.

உண்மையில் மாணவர்கள் ஒரு பல்கலைக்கழகத்திற்கு ஒரு ஒரு மாணவரை சேர்த்த பிறகு ஏஜெண்ட்டின் பங்கு முடிவடைவதில்லை. ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர்களுக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்று கூறுகிறார்கள். உதாரணமாக, யுத்தம் வெளிப்பட்டு, பல்கலைக்கழகங்களின் அடித்தளத்தில் மாணவர்கள் சிக்கிக்கொண்டதால், எல்லைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்துக்கு பேருந்துகளை ஏற்பாடு செய்வதில் உதவிக்காக அவர்கள் ஏஜெண்ட்களிடம் சென்றனர்.

அன்றாடப் பல்கலைக்கழக வாழ்க்கையில் கூட, ஏஜெண்ட்கள் அல்லது ஆலோசகர்களின் பங்கு மிகவும் பேசப்படுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். “எனது விடுதியில், இந்திய மாணவர்களுக்கான தனி மெஸ் உள்ளது. நான் உக்ரைனுக்கு வந்த அதே ஆலோசனை நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. ஏனெனில், இந்த பல்கலைக்கழகத்திற்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வருகிறார்கள். ஆகையால், நான் வந்த ஆலோசகருக்கு இங்கு நிறைய செல்வாக்கு உள்ளது. உணவு முதல் அறைகள் வரை, அவர்கள் எங்களுக்கு உதவலாம். எல்லாவற்றிலும் நம்மைக் கட்டுப்படுத்தலாம். இங்குள்ள பல பல்கலைக்கழகங்களில், ஆலோசகர்கள் துணை டீன்களாகவோ அல்லது வெளிநாட்டு மாணவர்களின் பொறுப்பாளராகவோ ஆக்கப்படுகிறார்கள். மேலும், அவர்களும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்” என்று சந்தோஷ் யாதவ் கூறினார்.

பெரிய நகரங்களில் உள்ள பெரிய ஏஜெண்ட்கள், சிறிய நகரங்களில் மாணவர்களைச் சேர்க்க துணை ஒப்பந்ததாரர்களின் நெட்வொர்க் வைத்துள்ளனர். பல 'பெரிய' ஏஜெண்ட்கள் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களின் உத்தரவாதத்திற்கு ஈடாக பல்கலைக்கழகங்களுடன் பிரத்தியேக ஒப்பந்தங்களைச் செய்துள்ளனர்.

"அவர் முக்கிய ஏஜெண்ட்டாக அல்லது பிரதிநிதியாக இருந்தால், வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் அவர் எந்த வகையான பதவியை வகிக்கிறார் என்பதைப் பொறுத்து அமைந்திருக்கும். அவர்கள் ஒரு மாணவருக்கு ரூ. 1 முதல் ரூ. 3 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்” என்று சந்தோஷ் யாதவ் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Ukraine Russia Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment