வேம்பநாடு ஏரி இந்தியாவின் மிக நீளமான மற்றும் மிகப்பெரிய ஏரியும் ஆகும். கேரளாவில் இருக்கும் இந்த மிகப் பெரிய ஏரி கோட்டயம் மற்றும் ஆலப்புழா பகுதி வரை பரவி இருக்கும் மிகப் பெரிய ஏரி. கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் மிகப் பெரிய பாதிப்பினை சந்தித்திருக்கிறது இந்த ஏரி.
வேம்பநாடு ஏரி மாற்றம்
வெள்ளத்தினால் வந்த 1.63 பில்லியன் க்யூபிக் மீட்டரில் வெறும் 0.6 பில்லியன் க்யூபிக் மீட்டர் நீரை மட்டுமே கொள்ளளவாக இந்த ஏரி ஏற்றுக் கொள்ள முடியும்.
மிகப் பெரிய மழை வெள்ளத்தால் தன்னுடைய எல்லைகளை மூன்று மடங்காக அதிகரித்துக் கொண்டுள்ளது வேம்பநாடு ஏரி என செண்ட்ரல் வாட்டர்போர்ட் கமிசன் கூறியுள்ளது.
கேரளாவின் உயரமான பகுதிகளில் முறையான நீர் தேக்கம் இல்லாமல் போனதன் விளைவாகவே இப்படியான ஒரு பாதிப்பினை சந்தித்திருக்கிறது வேம்பநாடு ஏரி.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகும் பம்பை, மணிமலா, அச்சன் கோவில் மற்றும் மீனாச்சில் போன்ற ஆறுகள் நேராக இந்த வேம்பநாடு ஏரியில் தான் வடிகின்றன. இந்த எரி நீரே இறுதியில் கடலில் கலக்கிறது.
இந்த மழையின் காரணமாகவும், வண்டல் மண் படுகைகளின் காரணமாகவும் ஏரியின் கொள்ளளவு குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்திருக்கிறது செண்ட்ரல் வாட்டர்போர்ட் கமிசன்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அதே சமயத்தில் பேக்ஃபுலோ ஆவதற்கான வாய்ப்புகளும் அதிகம். கழிமுகங்களில் அதிக அளவு நீரை வெளியேற்றுவதற்கான வாய்ப்புகள் குறைகின்ற பட்சத்தில் இப்படியும் நடக்கலாம் என்றும் கூறியிருக்கிறது செண்ட்ரல் வாட்டர்போர்ட் கமிசன்.
கடற்கரையோரம் அமைந்திருக்கும் இந்த ஏரி ஏற்கனவே பேக்வாட்டர்ஸ் போன்ற அனைத்து விதமான இயற்கை நிகழ்வுகளையும் சமாளித்து வருகிறது. இந்த வெள்ளத்தினால் பெரிய மாற்றங்களை சந்தித்திருக்கிறது வேம்பநாடு எனும் பொன்னுமடா ஏரி.
வேம்பநாடு ஏரி
ஆலோசனைகளில் ஈடுபட்டு வரும் கேரள அரசு
இந்த வருடம் மிகவும் விரைவாகவே தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஆகஸ்ட் மாதம் மிகவும் தீவிரமடைந்தது. விளைவாக அணைகள் அனைத்தும் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.
இதுவரை 480 பேர் இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இப்போது மத்திய நீர் மேலாண்மை மையம், இது போன்ற நிலை ஏற்படும் போது அணைகளில் இருந்து எவ்வளவு நீரினை வெளியேற்றலாம் என்பது குறித்து மாநில அரசுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
35 அணைகளில் இருந்து ஒரே நேரத்தில் நீர் திறந்து விட்டதால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும், இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் நிகழக் கூடாது என்பதிலும் தெளிவான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது கேரள அரசு.