கோவிட்-19 மறுதொற்று ஏற்பட வாய்ப்பு எவ்வளவு? ஓர் அலசல்

health news in tamil, how covid 19 reinfections explained in tamil: SARS-CoV2 ன் மறுதொற்று என்பது ஒரு திறந்த அறிவியல் விவாதத்திற்கு இட்டு செல்கிறது. இப்போதைக்கு ஒருமுறை நோய்த்தொற்றுக்குள்ளான ஒருவர் நோய்க்கு எதிராக நிரந்தர நோய் எதிர்ப்பு சக்தியை பெறுகிறாரா அல்லது மீண்டும் நோய்தொற்றுக்கு உள்ளாகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு மறுசீரமைப்பின் சாத்தியம் பற்றிய புரிதல் முக்கியமானது. இது இந்நோய் பரவலை கட்டுப்படுத்த மக்கள் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை எவ்வளவு காலம் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க உதவுகிறது. இது தடுப்பூசி இயக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானிகள் குழு இந்தியாவில் SARS-CoV2 மறுதொற்று ஏற்பட உள்ள வாய்ப்புகளை ஆய்வுகளையும் மேற்கொண்டுவருகிறது. தொற்றுநோயியல் மற்றும் தொற்று இதழில் வெளியிடுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் விஞ்ஞானிகள் வைரஸூக்கு இருமுறை பாசிடிவ் ஏற்பட்ட 1300 நபர்களின் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்தனர்.

1300 நபர்களில் 58 அல்லது 4.5% நபர்களுக்கு திரும்பவும் தொற்று ஏற்படலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவற்றுக்கு இடையில் நெகடிவ் சோதனை முடிவுகளும் இருந்தன. இந்த 58 நபர்களுக்கும் இரண்டு பாசிடிவ் முடிவுகளும் குறைந்தது 102 நாட்கள் இடைவெளியில் வந்துவிட்டன.

SARS-CoV2 ன் மறுதொற்று என்பது ஒரு திறந்த அறிவியல் விவாதத்திற்கு இட்டு செல்கிறது. இப்போதைக்கு ஒருமுறை நோய்த்தொற்றுக்குள்ளான ஒருவர் நோய்க்கு எதிராக நிரந்தர நோய் எதிர்ப்பு சக்தியை பெறுகிறாரா அல்லது மீண்டும் நோய்தொற்றுக்கு உள்ளாகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு மறுதொற்றின் சாத்தியம் பற்றிய புரிதல் முக்கியமானது. இது இந்நோய் பரவலை கட்டுப்படுத்த மக்கள் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை எவ்வளவு காலம் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க உதவுகிறது. இது தடுப்பூசி இயக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், முதல் உருமாறிய கொரோனா தொற்று ஹாங்காங்கிலும், பின்பு அமெரிக்கா மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்தியாவில் ஒருமுறை தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டபோதும், அது உருமாறிய கொரோனாவாக இல்லை. தொற்று ஏற்பட்டவரின் உடலில் மூன்று மாதங்கள் வரை குறைந்த அளவு வைரஸ் இருக்கும். இவை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவிடினும் பரிசோதனையில் பாசிடிவ் ஆக இருக்கும்.

வைரஸானது வடிவத்தை மாற்றிக்கொண்டே இருப்பதால் விஞ்ஞானிகள் வைரஸின் மரபணு தரவுகளையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஒருமுறை தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டபோதும், அவற்றின் மரபணு ஒத்திருப்பதில்லை. இதனால் நிரந்தர நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது கடினமாக உள்ளது.

இந்தியாவில் மறுதொற்று ஏற்பட்ட இந்த 58 பேருக்கும் வைரஸின் மரபணுத் தகவல் போதுமான அளவு இல்லாத காரணத்தால் அவை உருமாறிய கொரோனா என்று உறுதியாக கூற முடியவில்லை. மேலும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் மரபணுவை பகுப்பாய்வு செய்தால்தான் முழுமையான நிரந்தர நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How likely covid reinfection explained in tamil

Next Story
படிப்படியாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி- எய்ம்ஸ் இயக்குனர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com