/tamil-ie/media/media_files/uploads/2022/10/MG_4499.jpg)
பரமபதம் மூலம் கொரோனா விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தனர். (Express Photo)
கொரோனா பெருந்தொற்று காலங்களில் மக்கள் அனைவருக்கும் இந்த நோயின் அபாயத்தை பற்றி அரசாங்கமும் அரசு சாரா நிறுவனங்களும் பல்வேறு விதத்தில் விழிப்புணர்வு அளித்து வந்தனர்.
இருப்பினும், அவர்களால் எல்லா மக்களிடமும் விழிப்புணர்வையும் தடுப்பூசியையும் கொண்டு சேர்ப்பது என்பது எண்ணிப் பார்ப்பதை விட கடுமையான ஒன்றாக இருந்தது.
இவ்வாறு இருந்த சூழ்நிலையில், கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக மக்களிடையே கொண்டு சேர்த்த பயணம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள சமோடா என்ற பகுதியில், தடுப்பூசி எப்படி செலுத்தப்பட்டது என்பது பற்றின செய்தி தொகுப்பு இது.
மக்களினிடையே நம்பிக்கையை வளர்ப்பதில் இருந்து மத போதகர்களின் உதவியைப் பெறுவது வரை புதுமையான விழிப்புணர்வு முறைகளைப் பயன்படுத்தி, விளிம்பு நிலை மக்களுக்கு கோவிட் தடுப்பூசி விழிப்புணர்வை எப்படி தன்னார்வத் தொண்டர்கள் அறிமுகப்படுத்தினார்கள் என்பது பற்றி காணலாம்.
இங்கு (MOMENTUM Routine Immunization Transformation and Equity Project)இன் முயற்சியால் குழந்தைகள் மத்தியில் கொரோனா பெருந்தொற்று பற்றின விழிப்புணர்வு அளிப்பதற்கு பரமபதம் விளையாட்டை பயன்படுத்தியுள்ளனர். விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி சென்றடைய இந்த திட்டம் பெரும் உதவி செய்துள்ளது.
இந்த விளையாட்டு வரைபடத்தை தரையில் அமைத்து, அதன் மேல் காய்களுக்கு பதிலாக குழந்தைகளே நின்று விளையாடுவது போல் அமைத்துள்ளனர்.
மேலும், இந்த விளையாட்டிலேயே கோவிட்-19 தடுப்பூசி பற்றிய செய்திகளை சேர்த்துள்ளனர், இது 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அதன் முக்கியத்துவம் மற்றும் தடுப்பூசியைச் சுற்றியுள்ள தவறான மூடநம்பிக்கைகளை முறியடிக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டது.
USAID-ஆல் ஆதரவளிக்கப்பட்ட இந்தத் திட்டம், அரசாங்கத்துடன் இணைந்து ஜான் ஸ்னோ இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இந்தியா முழுவதும் 18 மாநிலங்களில், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மற்றும் விளிம்புநிலை மக்கள் வாழ்கின்ற பகுதிகளில், கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள்.
சமோதாவின் சாஸ்திரிபுரம் மத்யமிக் ஷாலா என்ற பள்ளியின் ஆசிரியர் அருணா மகாரியா கூறுகையில், "விளையாட்டுகள் மூலம் விஷயங்களை விளக்கினால், குழந்தைகள் மிக வேகமாக கற்றுக்கொள்கின்றனர். கற்றபின்பு, அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவார்கள்."
மக்காரியா கிராமத்தில் கோவிட் விழிப்புணர்வு அளிக்கும் பணியில் இருந்தபோது, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடாமல் இருப்பதை ஆசிரியர் அருணா மகாரியா கவனித்துள்ளார்.
தடுப்பூசி குறித்த அச்சம் கிராம மக்களிடையே பரவியுள்ளது, கொரோனா பாதிப்பினால் அவர்களை சுற்றி நிகழ்ந்த இறப்புகளை தடுப்பூசியுடன் இணைத்து அச்சப்பட ஆரம்பித்தனர்.
தடுப்பூசி முகாம்களைக் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க வீடு வீடாகச் சென்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு எதிர்ப்பு மட்டுமே மிஞ்சியது.
"கிராம மக்கள் புரிந்து கொள்ள தயாராக இல்லை. தடுப்பூசிகள் வேண்டாம் என்றும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்” என்று பிராந்திய சுகாதார அதிகாரி பூபேந்திர தேவாங்கன் தெரிவித்தார்.
"நாங்கள் மக்களிடமிருந்து நிறைய (எதிர்மறையான பதில்களை) கேட்டோம், ஆனால் நாங்கள் அவற்றைப் திருத்தி விழிப்புணர்வு அளிக்க முயற்சி செய்தோம்”, என்கிறார் திரௌபதி டெஸ்லேஹ்ரே.
“அப்போதுதான் பரமபதம் மூலமாக விழிப்புணர்வு அளிக்கலாம் என்ற யோசனை எழுந்தது. இரண்டு பேர் கொண்ட குழுவின் உதவியால் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டது.
இதில் ஒரு குழந்தை பகடைகளை உருட்டும்பொழுது, மற்றொரு குழந்தை பலகையில் நடந்து செல்வர். தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஊக்குவிக்கும் மஞ்சள் பெட்டியில் அவர்கள் காலடி வைத்தால், மாணவர் ஒரு ஏணியைப் பெறுவார். தடுப்பூசியைப் பற்றி ஏதேனும் தவறான தகவலைக் கொண்ட ஒரு பெட்டியில் அவர்கள் காலடி வைத்தால், அது அவர்களைப் பலகையில் இருந்து வீழ்த்திவிடும்.
இதன் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தடுப்பூசியைச் சுற்றியுள்ள பல கட்டுக்கதைகள் முறியடிக்கப்பட்டது", என்று பள்ளி முதல்வர் திகாரம் சாஹு கூறினார்.
திருநங்கைகள் சமூகம்
/tamil-ie/media/media_files/uploads/2022/10/MG_4702.jpg)
சத்தீஸ்கரின் துர்க்கில், தடுப்பூசி தீதி என்று பிரபலமாக அறியப்படும் காஞ்சன் சென்ட்ரே என்ற திருநங்கை ஆர்வலர், தனது சமூகத்தை தடுப்பூசி பெற்றுக்கொள்ள வழிவகுத்தார். தனது சமீபத்திய பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை தடுப்பூசி பதித்துவிடுமோ என்று அஞ்சியதனால், Sendre, திட்டத்தின் ஒரு பகுதியாக, தனது தோழர்களுக்கு கல்வி கற்பதற்கும் அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் பல மாதங்கள் செலவிட்டனர்.
ஆரம்பத்தில், அவரது சமூகத்தில் பலர் வைரஸின் தீவிரத்தை புறக்கணித்தனர். "கொரோனா ஒன்றும் இல்லை," என்று சிலர் சொன்னார்கள். காலப்போக்கில், அவர்கள் இறப்புகளையும், அவர்களைச் சுற்றியிருப்பவர்களும் நோய்வாய்ப்படுவதையும் கண்டு மனம் மாறினர்.
திருநங்கைகள் சமூகத்தின் பல உறுப்பினர்கள் பாலின மாற்ற மருந்துகளை உட்கொள்கிறார்கள் அல்லது ஆன்டிரெட்ரோவைரல் தெரபி (ART)-க்கு உட்படுத்தப்படுகிறார்கள் - ஒரு HIV சிகிச்சை முறை, அவர்களை அதிக ஆபத்துள்ள குழுவாக ஆக்குகிறது. கோவிட்-19 தடுப்பூசிக்கு அவர்கள் தயக்கம் காட்டியது, அவர்களின் தற்போதைய மருந்துகளுடன் தலையிடக்கூடிய பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
அவரது குழுவிற்கு ஆவணங்கள் மற்றொரு பிரச்சினையாக இருந்தது. சென்ட்ரே, “பலரிடம் ஆண்களாக ஆவணங்கள் இருந்தன, ஆனால் இப்போது பெண்களாக வாழ்கின்றனர். கேலி செய்யப்படுவார்கள் என்ற பயத்தில் தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல அவர்கள் பயப்படுகிறார்கள்.
தொழு நோயாளிகள்
மற்றொரு ஒதுக்கப்பட்ட சமூகமான தொழுநோயாளிகள், அவர்கள் தங்கள் கைகால்களின் ஒரு பகுதியை இழந்து, சோர்வு மற்றும் காயங்களை அனுபவிக்கின்றனர். மேலும் உடல் வேலை செய்ய இயலாமையால் குறைந்த வருமானம் கொண்ட காப்பகத்தில் உள்ளனர். அவர்கள் குறைகளினால், பலர் சமூகத்தில் பாகுபாடு மற்றும் கேலிக்கு ஆளாகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/MG_4990.jpg)
இந்தியாவில் 750க்கும் மேற்பட்ட தொழுநோய் காலனிகள் உள்ளன, அதில் சத்தீஸ்கரில் சுமார் 34 உள்ளன.
1986 ஆம் ஆண்டு முதல் ராய்பூரின் இந்திர குஷ்ட் பஸ்தியில் காசிராம் போய் வசித்து வருகிறார். அவர் வசிக்கும் பகுதி தொழுநோய் காலனி என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் 150 பேர் வசிக்கின்றனர், அவர்களில் 80-85 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரின் சாரிபாலியில் பிறந்த இவர், ஏழு வயதில் தொழுநோயால் பாதிக்கப்பட்டார். காசிராம் போய் தனது சிகிச்சைக்கு அவரது கிராமம் உதவிய பின்பு குணமடைந்தார். இதைத்தொடர்ந்து, தொழுநோயாளிகளின் உரிமைகளுக்காக வாதிட்டு வருகிறார்.
ஊரடங்கின் போது, மளிகைப் பொருட்களை ஏற்பாடு செய்வதன் மூலம் காலனிக்கு உதவினார். மேலும், குடியிருப்பாளர்களுக்கு கோவிட் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு அவர் பணியாற்றினார்.
"அவர்கள் (காலனி உறுப்பினர்கள்) நன்கு அறியப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் எங்களை நம்பும் அளவுக்கு வெளி நிறுவனங்களை நம்புவதில்லை. நாங்கள் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறோம். அவர்களை தடுப்பூசி போடுமாறு கைகூப்பி வேண்டி கேட்டுக் கொண்டோம்", என்று போய் கூறினார்.
தடுப்பூசி போடும் வாய்ப்பை தவறவிட்டாவர்கள்:
இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் துறைகளில் போக்குவரத்துத் துறையும் ஒன்று. இருப்பினும், லாரி ஓட்டுநர்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்படாத குழுவாக உள்ளனர்.
அதிக நடமாட்டம், நீண்ட வேலை நேரம் மற்றும் நாட்டில் எங்கும் எங்கும் திட்டமிடப்படாத பயணங்களை மேற்கொள்ளுதல் ஆகியவை கொரோனாவிற்கு தடுப்பூசி போடும் வாய்ப்பை கடினமாக்கியது. இந்த குழுவிற்கு தடுப்பூசி போட முடிவு செய்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/MG_4861.jpg)
பீகாரைச் சேர்ந்த டிரக் டிரைவர் பங்கஜ், ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது 15 நாட்கள் மும்பையில் சிக்கிக் கொண்டார். உணவு மற்றும் தண்ணீர் ஏற்பாடு செய்வதில் அவர் சிரமங்களை எதிர்கொண்டார். அவரது குடும்பத்தினர் கவலையடைந்தனர். ஆகையால் அவரை மீண்டும் அழைத்து, அவர் அவர்களுடன் இருக்க வேலை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினர். ஆனால், நாடு முழுவதும் 10 சக்கர டிரக்கை ஓட்டி, அவர் சம்பாதிக்கும் வருமானத்தை அவரது குடும்பம் இழந்துவிடும் என்று பங்கஜ் அஞ்சினார்.
தடுப்பூசி டோஸ்களை எடுத்துக் கொண்ட பிறகு பலர் நோய்வாய்ப்படுகிறார்கள் அல்லது இறக்கிறார்கள் என்று மக்கள் பங்கஜிடம் தெரிவித்தனர். "ஆனால் நான் சென்று டோஸ் எடுத்தேன்," என்று அவர் கூறினார்.
முதியவர்கள்
ராய்ப்பூரில் உள்ள முதியோர் இல்லத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் அரவிந்த் நேரல், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் நோயால் பாதிப்படைய நேரிடும் என்று அஞ்சினார். அவர்களில் 40 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவிற்கு கோவிட் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்தது, ஏனெனில் பல உறுப்பினர்கள் நீரிழிவு, இதயம் மற்றும் சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/MG_4782.jpg)
"ஒரு நபர் கூட பாதிக்கப்பட்டிருந்தால் அதை நிர்வகிப்பது கடினமாக இருந்திருக்கும், ஏனென்றால் தனிமைப்படுத்தப்படுவது கடினமான ஒன்று" என்று டாக்டர் நெரல் கூறினார்.
கோவிட் அலைகளின் போது வெளிப்புற தொடர்புகளைத் தவிர்ப்பதற்காக 6-9 மாதங்களுக்கு ஊரடங்கு போடப்பட்டது. வீட்டில் அங்கத்தினர்களிடம் பணம் வசூலிக்காததால், மளிகைப் பொருட்களை ஏற்பாடு செய்வது கடினமாக இருந்தது. "இந்த திட்டம் மளிகை பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு எங்களுக்கு உதவியது" என்று மருத்துவர் கூறினார்.
ராய்பூரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய கிருஷ்ண சட்டர்ஜி, 10 ஆண்டுகளாக ஆஷ்ரே முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். “விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தடுப்பூசிகளைப் பற்றி கூறியது எங்களுக்கு உதவியது. நாங்கள் பயப்படவில்லை, ”என்று சாட்டர்ஜி கூறினார். உறுப்பினர்கள் இப்போது பூஸ்டர் டோஸ் உட்பட மூன்று தடுப்பூசிகள் போட்டுள்ளனர்.
மதத் தலைவர்களின் பங்களிப்பு
இந்தத் திட்டம் மக்களைச் சென்றடைந்த வழிகளில் ஒன்று மதத் தலைவர்களின் உதவி ஆகும்.
""இது உண்மையில் தடுப்பூசியா? அல்லது ஊசி போடுவது மட்டும்தானா?’’ தடுப்பூசி போடும் பணி எப்போது தொடங்கியது என்று மக்கள் ஆச்சரியப்பட்டனர். தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் ஊடகங்களில் அதிகமாக இருந்தது,” என்று செயின்ட் ஜோசப் தேவாலயத்தின் பாதிரியார், செபாஸ்டியன் கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/MG_4350.jpg)
ராய்ப்பூர் மறைமாவட்டத்தில் உள்ள 68 தேவாலயங்களுக்கு தடுப்பூசி பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துகளை உடைத்து விழிப்புணர்வு அளிக்க பாதிரியார் சென்று உதவினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.