Advertisment

6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரவழைப்பு; 200 ரயில்கள் ரத்து: டானா புயலை சமாளிக்க ஒடிசா தயாராகி வருவது எப்படி?

புயல் பாதிப்பு நிகழும் மாவட்டங்களில் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உதவுவதற்காக, தாங்கள் கலெக்டராக இருந்த காலத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வகித்த அனுபவம் உள்ள 6 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஒடிசா அரசு நியமித்துள்ளது.

author-image
WebDesk
New Update
How Odisha bracing to tackle cyclone Dana Tamil News

புயல் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படும் 14 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று புதன்கிழமை முதல் வருகிற வெள்ளி வரை விடுமுறை அறிவித்துள்ளது ஒடிசா அரசு.

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவாகியுள்ளது . இந்த புயலுக்கு 'டானா' புயல் என பெயரிடப்பட்டுள்ளது

Advertisment

'டானா' புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஒடிசாவின் புரி பகுதிக்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.

இந்நிலையில், இந்தப் புயலை எதிர்கொள்ள ஆளும் பா.ஜ.க-வின் முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையிலான ஒடிசா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: 6 IAS officers called in, 200 trains cancelled, monuments shut: How Odisha is bracing to tackle cyclone Dana

'டானா' புயல் ஒடிசா மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலசோர், பத்ரக், கேந்திரபாடா, மயூர்பஞ்ச், ஜகத்சிங்பூர் மற்றும் பூரி மாவட்டங்களில் அதிகபட்ச பாதிப்பு இருக்கும் என அம்மாநில அரசு எதிர்பார்க்கிறது. மேலும், இந்தப்  புயல் மற்ற அருகிலுள்ள மாவட்டங்களிலும் கனமழையைத் தூண்டலாம் என்றும், அதனால் திடீர் வெள்ளப் பெருக்கு நிகழும் சூழல் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், புயல் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படும் 14 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று புதன்கிழமை முதல் வருகிற வெள்ளி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு கடற்கரை வழியாக பயணிக்கும் கிட்டத்தட்ட 200 ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

ஒடிசா மாநில அரசு ஏற்கனவே பேரிடர் விரைவு நடவடிக்கைப் படையின் 20 குழுக்களையும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்களையும் அனுப்பியுள்ளது. மருத்துவர்களின் விடுப்பு ரத்து செய்யப்பட்டு, அவர்கள் அந்தந்த சுகாதார மையங்களுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் வயிற்றுப்போக்கு மற்றும் விஷ எதிர்ப்பு ஊசி உள்ளிட்ட மருந்துகளை போதுமான அளவு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய சுகாதாரத்துறை மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அரசு வலியுறுத்திய ஒரு நாளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் பூரியை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். அனைத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. சந்தைகளில் உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து, மக்கள் பீதியுடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, புயல் பாதிப்பு நிகழும் மாவட்டங்களில் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உதவுவதற்காக, தாங்கள் கலெக்டராக இருந்த காலத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வகித்த அனுபவம் உள்ள 6 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஒடிசா அரசு நியமித்துள்ளது. மேலும், "பூஜ்ஜிய விபத்து" என்பதை உறுதி செய்வதற்காக, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கான அதன் முந்தைய உத்தியின்படி, ஒடிசா அரசாங்கம் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் தொடங்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் பூஜாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். 800 பல்நோக்கு புயல் முகாம்கள் தவிர, பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களைப் பயன்படுத்தி மேலும் 500 தற்காலிக தங்குமிடங்களை அரசாங்கம் தயார் செய்துள்ளது. தங்குமிடங்களில் சமைத்த உணவு உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் நாங்கள் உறுதி செய்கிறோம்,”என்று  கூறினார்.

ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, அனைத்து எம்.எல்.ஏ-க்களும் தங்கள் தொகுதிகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பித்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Cyclone Odisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment