உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியைச் சேர்ந்தவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங். 66 வயதான இவர் மல்யுத்த வீரர் ஆவார். இந்திய மல்யுத்த சமமேளத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
இவர் மீது பெண் வீரர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். பாலியல் புகார் அதிகரித்துவரும் நிலையில் இந்திய மல்யுத்த தலைவர் பதவியில் இருந்து சிங்-ஐ நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஸ்ரீ ராம ஜென்ம பூமி இயக்கத்தின் மூலம் அரசியலில் அறியப்பட்ட சிங், இன்றளவும் பாபர் மசூதி இடிப்பு வழக்குகளை எதிர்கொண்டுவருகிறார்.
மேலும் இவர் பல்ராம்பூர் மற்றும் கோண்டா தொகுதியில் 6 முறை எம்.பி.ஆக வென்றுள்ளார். ஒருமுறை சமாஜ்வாதி கட்சி சார்பிலும், 5 ’முறை பாஜக சார்பிலும் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
தற்போது கோண்டா சதார் தொகுதி எம்.எல்.ஏ. ஆக உள்ளார். மேலும், WFI தலைவராகவும், யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்த-ஆசியாவின் துணைத் தலைவராகவும் சிங் இருந்து வருகிறார்.
இவர் ஒவ்வொரு ஆண்டும் ஜன.8ஆம் தேதி தனது பிறந்தநாளை வெகுசிறப்பாக கொண்டாடுவார் என உள்ளூர் தலைவர்கள் கூறுகின்றனர்.
அபபோது போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் நபர்களுக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு, கோண்டா மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களான லக்னோ, அயோத்தி, பஹ்ரைச், ஷ்ரவஸ்தி, பல்ராம்பூர் மற்றும் பாரபங்கி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பங்கேற்றுள்ளார்.
இது குறித்து பாஜக பிரமுகர் ஒருவர் கூறுகையில், “சிங் கட்சியின் அடையாளமாக உள்ளார். அவர் சொந்த செல்வாக்கில் வெல்வார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் பப்ளிசிட்டி அடிப்படையிலானவை” என்றார்.
மேலும், ஆதித்யநாத் அரசாங்கத்தை தாக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் கருத்துகளை எழுப்பியபோதும், சிங் பாஜகவிடம் இருந்து எந்தவிதமான கண்டனத்தையும் பெறவில்லை.
பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை சிங் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக அறியப்படுகிறார். இவர் 6 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களும் நடத்திவருகிறார். இதனால் இவர் மீதான குற்றச்சாட்டு தற்போதுதான் புகைய தொடங்கி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/