ஜூன் 21, 2023 அன்று டெல்லியில் உள்ள சராய் காலே கானில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
2014 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) ஜூன் 21 ஐ சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அப்போது, பண்டைய இந்தியாவின் ஆன்மீக நடைமுறைகளை உலகளவில் கொண்டாடுவதும், அதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதும் யோசனையாக இருந்தது.
Advertisment
இருப்பினும், யோகா கலை, பல தசாப்தங்களாக மேற்கு நாடுகளில் பரவலாக உள்ளது. அது, ஆன்மீகப் பயிற்சிக்கான அறிவியல் வழிமுறையாகக் கருதப்படுகிறது. அது அறிவியலுக்கும் மதத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும்.
மேலும், அமெரிக்காவில், 1893 செப்டம்பர் 11ஆம் தேதி சுவாமி விவேகானந்தரின் சக்தி வாய்ந்த சொற்பொழிவு மேற்குலகை திரும்பி பார்க்க வைத்தது. சுவாமி விவேகானந்தரின் அந்தப் புகழ்பெற்ற உரையை தொடர்ந்து, இந்திய மத மரபுகளின் ஆன்மீக மேன்மை பரவத் தொடங்கியது. அமெரிக்கர்களின் அபிமானத்தைப் பெற்றது. அப்போது, இந்த செயல்பாட்டில் சுவாமி விவேகானந்தருக்கு உதவ யோகா சிறந்த கருத்தாக இருந்தது.
சிகாகோவில் சுவாமி விவேகானந்தர்
Advertisment
Advertisements
பிரம்ம சமாஜ் இயக்கத்தின் நிறுவனர்கள் வேதக் கருத்துக்களை மேற்கத்திய மனிதநேயத்துடன் இணைத்தனர். இந்தப் பின்னணியில்தான் பிரம்ம நிறுவனர் கேசப் சந்திர சென், பண்டைய இந்திய நூல்கள் மற்றும் மேற்கத்திய அறிவியல் கருத்துக்கள் இரண்டையும் உள்ளடக்கிய யோகாவின் நவீன வடிவத்தை உருவாக்கினார்.
சென்னின் யோகாவின் கருத்து நரேந்திரநாத் தத்தாவின் போதனைகளில் மீண்டும் தோன்றும். அவர்தான் சுவாமி விவேகானந்தர் என்று அழைக்கப்படும் மனிதர். விவேகானந்தர் சென்னின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார், பின்னர் 1881 இல் ராமகிருஷ்ணருக்கு அவரால் அறிமுகப்படுத்தப்பட்டார். அமெரிக்க இந்தியவியலாளர் டேவிட் கார்டன் வைட் எழுதியது போல், விவேகானந்தர் ஒவ்வொரு வகையிலும் பிரம்ம சமாஜத்தின் நவ-வேதாந்த போதனைகளின் மரபுக்கு ஒரு வாரிசாக இருந்தார்.
ராமகிருஷ்ணரின் மரணத்திற்குப் பிறகு, விவேகானந்தர் இந்து சீர்திருத்தம் மற்றும் சமூக மேம்பாடு பற்றிய நற்செய்தியைப் பரப்புவதற்கு நிதி ஆதரவைப் பெறுவதற்காக இந்திய நாட்டுக்குள் வெகுதூரம் பயணம் மேற்கொண்டார். அவரது முயற்சிகளை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், அவர் 1893 இல் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார், அங்கு அவர் தனது புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார்.
கேசப் சந்திர சென், தேபேந்திரநாத் தாகூர் மற்றும் ராஜா ராம் மோகன் ராய்
அங்கு அவர் 17 நாள்களில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டினார் என வைட் எழுதியுள்ளார். 1894 கோடையில், விவேகானந்தர் தனது பாடத்திட்டத்தில் யோகாவைச் சேர்த்தார். அமெரிக்காவில் உள்ள ஏராளமான மக்கள் இந்திய ஆன்மீகத்தின் தனிப்பட்ட அனுபவத்திற்காக ஏங்குகிறார்கள் என்பதை அவர் உணர்ந்ததன் மூலம் அவரது முடிவு எடுக்கப்பட்டது.
அவர் 1895 இல் நியூயார்க்கில் வேதாந்த சங்கத்தை நிறுவினார், அது இன்றுவரை தொடர்ந்து செழித்து வருகிறது. மேலும், யோகா ஒரு ‘இந்திய’ பாரம்பரியம் அல்ல, இந்து அல்ல என்பதை வலியுறுத்துவதற்காக யோகாவின் புதிய வேதாந்த வடிவத்தை விவேகானந்தர் பயன்படுத்தினார்.
மேலும் நவ-வேதாந்த யோகாவின் அடிப்படையை உருவாக்கிய மனிதாபிமானத்தின் மேற்கத்திய கருத்து அமெரிக்கப் பின்பற்றுபவர்களை மிகவும் கவர்ந்தது. “யோகா தத்துவம் விவேகானந்தருக்கு ஒரு சிறந்த தளமாக இருந்தது, அதில் இருந்து இந்திய அறிவியலின் தொன்மை மற்றும் மேற்கத்திய அறிவியலின் மேன்மை, கிறிஸ்தவத்தை விட இந்து மதம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது” என்றும் வைட் எழுதியுள்ளார்.
மேற்குலகில் விவேகானந்தரின் பணியைத் தொடர்ந்து பல தசாப்தங்கள் இந்தியாவின் "யோகா மறுமலர்ச்சி" என்று அழைக்கப்படுகின்றன. 1946 இல் வெளியிடப்பட்ட "யோகியின் சுயசரிதை" உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிய பரம்ஹம்ச யோகானந்தா போன்றவர்களால் பிற்காலத்தில் மேற்கில் ஆன்மீகவாதிகளின் போதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
பரமன்ச யோகானந்தா, டபிள்யூ.பி. யீட்ஸ் மற்றும் டி.எஸ். எலியட்
பின்னர் 1919 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று நியூயார்க்கில் யோகா நிறுவனத்தை நிறுவியவர் ஸ்ரீ யோகேந்திரா. ருமேனிய மிர்சியா எலியாட் மற்றும் ஜெர்மன் யோகா அறிஞரான ஜேக்கப் வில்ஹெல்ம் ஹவுர் போன்ற மேற்கத்திய அறிஞர்கள் மேற்கத்திய நாடுகளில் யோக மரபுகளை மேலும் பிரபலப்படுத்தினர்.
குறிப்பாக கி.பி 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பதஞ்சலியின் யோகா சூத்திரங்களிலிருந்து பெறப்பட்டன. ஐரிஷ் கவிஞர் டபிள்யூ பி யீட்ஸ் மற்றும் பிரிட்டிஷ் எழுத்தாளர் டி எஸ் எலியட் ஆகியோரும் யோகாவின் பிரபலத்தை பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தனர். 1960 களின் பிற்பகுதியில், மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியான திட்டத்தை பீட்டில்ஸ் இசைக்குழு உலகிற்கு அறிமுகப்படுத்தியபோது யோகாவில் உள்ள ஆன்மீகம் மேற்கத்திய நனவை மேலும் விரிவாக்கியது.
தற்போது யோகா மேற்கத்திய உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது, மேலும் இது உடல் மற்றும் மன நலனுக்கான பயனுள்ள நுட்பமாக பரவலாக அறியப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“