Advertisment

புதிய நாடாளுமன்ற கட்டடம் பழைய கட்டடத்தில் இருந்து எப்படி வேறுபட்டது?

கட்டடக் கலைஞர் பிமல் பட்டேலின் கீழ் அகமதாபாத்தைச் சேர்ந்த எச்.சி.பி வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. புதிய கட்டமைப்பு - மே 28-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

author-image
WebDesk
May 24, 2023 14:53 IST
New Update
parliament news,parliament news, new parliament building, new parliament building and the old one, difference between new parliament building and existing one news, புதிய நாடாளுமன்ற கட்டடம், புதிய நாடாளுமன்ற கட்டடம் பழைய கட்டடத்தில் இருந்து எப்படி வேறுபட்டது, புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா, புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சிறப்பு அம்சங்கள், how the new parliament building differs from the existing one news, india news, current affairs, narendra modi parliament building news, faqs, Tamil indian express

புதிய நாடாளுமன்ற கட்டடம்

கட்டடக் கலைஞர் பிமல் பட்டேலின் கீழ் அகமதாபாத்தைச் சேர்ந்த எச்.சி.பி வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. புதிய கட்டமைப்பு - மே 28-ம் தேதி திறக்கப்பட உள்ளது - புதிய கட்டடம் டாடா புராஜெக்ட்ஸ் லிமிடெட் மூலம் கட்டப்பட்டது.

Advertisment

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை மே 28, ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். “புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. மேலும், புதிய கட்டடம் தன்னம்பிக்கை இந்தியாவின் (ஆத்மநிர்பர் பாரத்) உணர்வைக் குறிக்கிறது” என்று மக்களவை அறிக்கை கடந்த வாரம் தெரிவித்தது.

பிரதமர் மோடி டிசம்பர் 10, 2020-ல் புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அதன் கட்டுமானப் பணிகள் ஜனவரி 2021-ல் தொடங்கியது. அகமதாபாத்தை தளமாகக் கொண்ட எச்.பி.பி வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் மேலாண்மை கட்டடக் கலைஞர் பிமல் பட்டேலின் கீழ் வடிவமைக்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகில் டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மூலம் கட்டப்பட்டுள்ளது.

நெருங்கி வரும் திறப்பு விழா நாள், தற்போதைய கட்டடத்திற்கும் புதிய கட்டடத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளைப் பார்ப்போம்:

01

அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமளிக்க முடியும்.

தற்போதுள்ள நாடாளுமன்ற மாளிகைக்கு அடுத்துள்ள புதிய கட்டடத்தில், லோக்சபாவில் 888 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 300 பேரும், முறையே 543 மற்றும் 250 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமளிக்க முடியும்.

02

புதிய நாடாளுமன்ற கட்டடம் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டடம் சுமார் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. அதேசமயம், பழைய நாடாளுமன்ற கட்டடம் 560 அடி (170.69 மீட்டர்) விட்டம் கொண்ட வட்ட வடிவ கட்டடம். அதன் சுற்றளவு ஒரு மைலில் மூன்றில் ஒரு பங்கு அல்லது 536.33 மீட்டர் அளவை உள்ளடக்கியது. கிட்டத்தட்ட ஆறு ஏக்கர் (24,281 சதுர மீ) பரப்பளவு ஆகும்.

03

கூட்டு அமர்வுகளுக்கு பயன்படுத்தப்படும் லோக் சபா அறை

புதிய கட்டடத்தில் தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் உள்ளது போல் மத்திய மண்டபம் இல்லை. அதற்கு, பதிலாக லோக்சபா அறை கூட்டு அமர்வுகளுக்கு பயன்படுத்தப்படும்.

04

புதிய கட்டடத்தில் அதிநவீன தொழில்நுட்பம்

மத்திய விஸ்டா இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பழைய கட்டடத்தில், தற்போதைய தீ பாதுகாப்பு விதிமுறைகளின்படி வடிவமைக்கப்படாததால், தீ பாதுகாப்பு பெரும் கவலையாக இருந்தது. பல புதிய மின்சார கேபிள்கள் இணைந்து தீ ஆபத்தை ஏற்படுத்தும். மேலும், நீர் விநியோக பாதைகள், கழிவுநீர் பாதைகள், ஏர் கண்டிஷனிங், தீயணைப்பு, சிசிடிவி, ஆடியோ-வீடியோ சிஸ்டம் போன்ற சேவைகளில் காலப்போக்கில் கூடுதலாகத் திட்டமிடப்படவில்லை, அவை கசிவுகளுக்கு வழிவகுத்தது. அது கட்டடத்தின் ஒட்டுமொத்த அழகியலை அழித்தது.

இதற்கிடையில், புதிய கட்டடத்தில், உறுப்பினர்களின் வாக்களிக்கும் வசதிக்காக பயோமெட்ரிக்ஸ், டிஜிட்டல் மொழி விளக்கம் அல்லது மொழிபெயர்ப்பு அமைப்புகள் மற்றும் நிரல்படுத்தக்கூடிய மைக்ரோஃபோன்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பம் உள்ளது. அரங்குகளின் உட்புறங்களில் விர்ச்சுவல் ஒலி உருவகப்படுத்துதல்கள் பொருத்தப்பட்டு எதிரொலியின் சரியான அளவுகளை அமைக்கவும், எதிரொலிகளை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

05

கட்டட அமைப்பின் தோற்றம்: தற்போதைய மற்றும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாறுபட்ட வடிவமைப்புகள்.

தற்போதைய நாடாளுமன்ற கட்டடம், காலனித்துவ கால கட்டடம், பிரிட்டிஷ் கட்டடக்கலை நிபுணர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. அதேசமயம் புதிய கட்டடம் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட எச்.சி.பி வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் நிர்வாகம் மற்றும் கட்டடக் கலைஞர் பிமல் படேல் அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் விஸ்டா இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, புதிய நாடாளுமன்ற கட்டடமும், மறுசீரமைக்கப்பட்ட கட்டடமும், தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று இருக்கும் அனைத்து வசதிகளையும் இணைக்க பயன்படுத்தப்படும்.

சுவாரஸ்யமாக, சனாதன் பரம்பரை மற்றும் வாஸ்து சாஸ்திரம் ஆகியவை கிட்டத்தட்ட 5,000 கலைத் பொருட்களுக்குப் பின்னால் வழிகாட்டும் கொள்கைகளாக உள்ளன - ஓவியங்கள், அலங்காரக் கலை, சுவர் ஓவியங்கள், கல் சிற்பங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் - புதிய நாடாளுமன்ற கட்டடம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இந்தியன் எக்ஸ்பிரசுக்கு தெரியவந்துள்ளது.

மேலும், ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் ஒரு கூட்டு மத்திய செயலகம், ராஜ்பாத் மறுசீரமைப்பு, புதிய பிரதமர் இல்லம், புதிய பிரதமர் அலுவலகம், புதிய துணை குடியரசுத் தலைவர் இடம் ஆகியவை அடங்கும். பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானம் கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் (1921-1927) ஆனது. பழைய நாடாளுமன்ற கட்டடம் கட்டி முடிக்க ரூ 83 லட்சம் செலவானது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

#India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment