ஆதார் கார்டில் போட்டோ அசிங்கமா இருக்கா? உடனே மாத்திருங்க!!

ஆதார் கார்டில், முகவரி உள்ளிட்டவைகளை மாற்றியமைப்பது போல், போட்டோவையும் மாற்றலாம். ஆனால், ஆன்லைனில் மாற்ற இயலாது.

ஆதார் கார்டில், முகவரி உள்ளிட்டவைகளை மாற்றியமைப்பது போல், போட்டோவையும் மாற்றலாம். ஆனால், ஆன்லைனில் மாற்ற இயலாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
My Aadhaar Online Contest

My Aadhaar Online Contest

ஆதார் கார்டில் உள்ள போட்டோ, எல்லோருக்கும் சரியாக அமைந்திருப்பதில்லை. நாம் நன்றாகவே போட்டோவாக எடுத்திருந்தாலும், ஆதார் கார்டில் வரும்போது விகாரமாகவே பலருக்கு வந்திருக்கும். ஐயய்யோ, இந்த கார்டும், இந்த கார்டில் உள்ள போட்டோவை தான் நாம் எல்லாத்துக்கும் ஆதாரமாக தரணுமா என்று வேதனைப்படுபவர்களுக்குத்தான் இந்த செய்தி.

Advertisment

ஆதார் கார்டில், முகவரி உள்ளிட்டவைகளை மாற்றியமைப்பது போல், போட்டோவையும் மாற்றலாம். ஆனால், ஆன்லைனில் மாற்ற இயலாது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆதார் என்ரோல்ட்மென்ட் மையங்களுக்கு சென்று, தேவையான விபரங்களை அளித்து போட்டோவை மாற்றிக்கொள்ளலாம்.

இந்தா....இதுதாங்க வழிவகை....மாத்துங்க உடனே உங்க அசிங்கமான போட்டோவ

1. ஆதார் என்ரோல்ட்மென்ட் மையத்திற்கு செல்லவும்

Advertisment
Advertisements

2. UIDAI இணையதளத்திலிந்து படிவத்தை பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்யவும்.

.3 இந்த படிவத்துடன் உங்களுடைய பயோமெட்ரிக் விபரங்களையும் அளித்தால், அந்த மையத்தின் ஊழியர் , உங்களை போட்டோ எடுப்பார்.

4. உங்கள் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்

5. இது கட்டணச்சேவை என்பதால், இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

6. உங்களுக்கு ஒரு உறுதி எண்ணுடன் கூடிய ரசீது வழங்கப்படும்.

7. இந்த எண்ணை வைத்து, தங்கள் கோரிக்கையின் நடப்பு விபரத்தை அறியலாம்.

உங்கள் ஊரில், இந்த ஆதார் என்ரோல்ட்மென்ட் மையம் இல்லையெனில், UIDAI இணையதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கி, போட்டோ உள்ளிட்ட தேவையான பயோமெட்ரிக் விபரங்களை நிரப்பி,

UIDAI மண்டல அலுவலகம்

கனிஜா பவன்

49, மூன்றாவது மாடி

ரேஸ்கோர்ஸ் சாலை, தெற்கு விங்

பெங்களூரு- 560001 என்ற முகவரிக்கு அனுப்பியும், ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்றியமைக்கலாம்.

Aadhaar Card

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: