How to Link Aadhaar card with PF Account : ஊழியர்கள் மற்றும் சந்தாதாரர்களுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் EPFO ஆன்லைன் சேவை, பி.எஃப் தொடர்பான டெவலப்மெண்ட் குறித்து அப்டேட்டுகளை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது ஆதார் எண்ணை பி.எஃப் கணக்குடன் இணைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இனி வரவிருக்கும் அப்டேட்டுகளை அவர்கள் எளிதில் தெரிந்துக் கொள்ள முடியும். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் ஆதார் எண்ணை தனது பிஎஃப் கணக்குடன் இணைத்ததும், அவர் ஈ.பி.எஃப்.ஓ-வின் சமீபத்திய புதுப்பிப்புகளைப் பெறத் தொடங்குவார். EPFO-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான epfindia.gov.in -ஐ விசிட் செய்து, ஆதார் எண்ணை PF கணக்குடன் இணைக்கலாம்.
இதனால் ஏற்படும் நன்மை குறித்து, மேலாண்மை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “EPFO ஊழியர்கள், EPFO சந்தாதாரர்கள் மற்றும் பிற அனைத்து PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் EPFO தனது ஆன்லைன் சேவைகளைத் தொடங்கியுள்ளது. இந்த ஆன்லைன் சேவை, பிஎஃப் கணக்கு வைத்திருப்பவருக்கு பிஎஃப் இருப்பு, பிஎஃப் பங்களிப்பு மற்றும் பிற அனைத்து புதிய அப்டேட்டுகள், ஈ.பி.எஃப்.ஓ விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவைகளை அறிந்துக் கொள்ள உதவும். இருப்பினும், அந்த ஈ.பி.எஃப்.ஒ ஆன்லைன் சேவைகளைப் பெற, ஒருவரின் ஆதார் அட்டை எண்ணை அதன் பிஎஃப் கணக்குடன் இணைக்க வேண்டும். ஒருமுறை, இதைச் செய்தால், வருங்கால வைப்பு நிதி கணக்கு மற்றும் அதன் விதிமுறைகள் தொடர்பான சமீபத்திய டெவலப்மெண்டுகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள முடியும்" என்றார்.
பி.எஃப் அக்கவுண்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?
epfindia.gov.in இணையதளத்தை விசிட் செய்யவும்.
KYC போர்ட்டலை க்ளிக் செய்யவும்.
UAN ஆதார் என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
UAN எண்ணையும், பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரையும் குறிப்பிடவும்.
அப்போது அந்த மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும்.
அதனை பதிவிடவும்.
இப்போது உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டுக் கொள்ளவும்.
OTP பட்டனைத் தொடர்ந்து, ’சமர்ப்பி’ பட்டனைக் க்ளிக் செய்யவும்.
உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு மீண்டும் OTP வரும். அதனை சமர்ப்பித்து, ஆதார் எண்ணை இறுதியாக PF கணக்குடன் இணைக்கவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.