நீரில் நனைந்தாலும் கிழியாது: பிவிசி ஆதார் கார்டு இன்னும் வாங்கவில்லையா?
பி.வி.சி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பாதுகாப்பு அம்சங்களுடன் அதாவது டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பாதுகாப்பான க்யூஆர் (QR) குறியீடு, ஹாலோகிராம், கோஸ்ட் படம், மற்றும் கில்லோசே முறையுடன் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
பி.வி.சி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பாதுகாப்பு அம்சங்களுடன் அதாவது டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பாதுகாப்பான க்யூஆர் (QR) குறியீடு, ஹாலோகிராம், கோஸ்ட் படம், மற்றும் கில்லோசே முறையுடன் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI), இந்திய குடிமகன்கள் / குடிமகள்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன் படி அந்த ஆணையத்தால் இந்திய குடிமகன்கள் / குடிமகள்கள் ஒவ்வொருவருக்கும்ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் துவங்கிய போது காகித அட்டைகளில் வழங்கப்பட்டு வந்தது. இந்த காகித அட்டைகள் நீரிலோ, அல்லது மழையில் நனைந்தாலோ அவை ஊறிவிடும். மற்றும் அதிலுள்ள தகவல் அழிந்து விடும். எனவே தான் ஆதார் வழங்குக்கும் ஆணையம் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
Advertisment
தற்போது அவை பாலிவினைல் குளோரைடு - ஆல் பி.வி.சி பிளாஸ்டிக்கில் வழங்கப்பட உள்ளன. அதில் பி.வி.சி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பாதுகாப்பு அம்சங்களுடன் அதாவது டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பாதுகாப்பான க்யூஆர் (QR) குறியீடு, ஹாலோகிராம், கோஸ்ட் படம், மற்றும் கில்லோசே முறையுடன் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
பி.வி.சி ஆதார் அட்டை பெறுவது எப்படி?
முதலில் இந்த இணைய பக்கத்தை (https://uidai.gov.in/) க்ளிக் செய்ய வேண்டும். அந்த பக்கத்தின் மேற்புறத்தில் My Aadhaar, About UIDAI, Ecosystem, Media & Resources, Contact & Support போன்றவை தோன்றும் அதில் 'My Aadhaar' என்பதை க்ளிக் செய்யவும். Get Aadhaar எனும் செக்சனில், 'Order Aadhaar PVC Card' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இப்போது புதியதாக ஒரு இணைய பக்கம் ஒன்று தோன்றும்.
இப்போது உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும். பின்னர் பாதுகாப்பு குறியீடு அல்லது கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். உங்கள் உங்களது மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை எனில், 'எனது மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை' (My Mobile number is not registered) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு, 'Send OTP' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு முறை கடவுச் சொல்லை 'OTP' பெறுவீர்கள். பின்னர்விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் சரிபார்த்து சமர்ப்பி (Submit) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது புதிய பக்கம் ஒன்று தோன்றும், நீங்கள் கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து தேவையான (ரூ .50) தொகையை செலுத்த வேண்டும்.
அவ்வளவுதான்! நீங்கள் பணம் செலுத்தியதும், கோரிக்கை அளித்த நாள் தவிர்த்து, ஐந்து வேலை நாட்களுக்குள் 'ஸ்பீட் போஸ்ட்' மூலம் புதிய ஆதார் அட்டையைப் பெறுவீர்கள்.
புதிய ஆதார் அட்டை, UIDAI - இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்களின் ஆதார் பி.வி.சி அட்டையின் நிலையையும் நீங்கள் சரிபார்க்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil