கேரளா வெள்ளம் : கேரளா மாநிலத்தில் தற்போது இரண்டு நாட்களாக மழையின் அளவு குறைந்திருந்தாலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல இடங்கள் இன்னும் சீரான நிலைக்கு திரும்பவில்லை.
கேரளா வெள்ளம் : நிவாரணத் தொகை :
வெள்ளத்தினால் பாதிப்படைந்த பல்வேறு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு நிவாரண தொகை அனுப்பட்டு வருகிறது.
கேரளாவின் துக்கத்தில் பங்கெடுக்கும் அண்டை மாநிலத்தார்கள் - குவியும் வெள்ள நிவாரண நிதி
கேரளா முதல்வர் பொது நிவாரண நிதி கணக்கிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களால் இயன்ற தொகையை மக்கள் அனுப்பி வருகின்றனர். இருப்பினும் கேரள மக்களுக்கு தேவைப்படும் ஆடை, உணவு, சேனிட்டரி பேட் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப பலரும் விடை தேடி அலைக்கின்றனர்.
கேரளா வெள்ளம் : நிவாரணப் பொருட்கள் அனுப்புவது எப்படி:
நீங்கள் இருக்கும் பகுதிக்கு அருகே உள்ள இடத்தில் இருந்து கேரளாவிற்கு நிவாரண பொருட்களை எப்படி அனுப்பலாம்? எங்கிருந்து அனுப்பலாம்? முகவரி கீழே:
டெல்லி:
- டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றம் வளாகத்திற்கு வெளியே இருக்கும் ஐ.எல்.டி பார்க் என்ற இடத்தில் வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. 9711943928 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம்.
- டெல்லியில் இருக்கும் கேரளா இல்லத்தில் பணம் மற்றும் உணவு பொருட்கள் சேகரிக்கப்படுகிறது. அவர்களை 09446993823, 01123360350 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கொல்கத்தா:
- கொல்கத்தாவில் கீழ்கண்ட விலாசத்தில் பொருட்கள் சேகரிக்கப்படுகிறது.
இந்தியன் ப்ளூரலிஸ்ம் ஃபவுண்டேஷன்.
47 ஏ, ஷேக்ஸ்பியர் சாரனி,
2பி குண்டாலியா டவர்
கொல்கத்தா - 700017
- அவர்களை 9051312323, 9903313210, 9831041884, 9830786771, 9830342584 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம்.
- கூன்ஜ், ஆக்ஸ்ஃபேம் ஆகிய சமூக ஆர்வல நிறுவனங்களும் நிவாரண பொருட்களை சேகரிக்கிறது.
ஹைதராபாத்:
- ஹைதராபாத்தில் எஸ்.எம்.ஆர் வினய் சிட்டி, போலரம் ரோடு, மியாப்பூர், (900035188, 9703503573, 8886555226, 9840921173), ஆங்கிலம் மற்றும் பண்ணாட்டு மொழிகள் பல்கலைகழகம், சிதாஃபல் மண்டி மேம்பாலம், (8086869573, 9746286425, 91775096030), பஞ்ஜாரா ஹில்ஸ், ஆனந்த் நகர், (7842216157, 8790408101, 8606821009), டாடா இன்ஸ்டிடுயூட் ஆஃப் சோஷியல் சைன்ஸ், என். ஐ. ஆர். டி ரோடு, ராஜேந்திர நகர், (73820922647, 7995926635, 9633134831, 8547930466).
சென்னை:
- லோட்டஸ் எக்ஸோட்டிக் ஜர்னி, தாமஸ் நகர், லிட்டில் மவுண்ட், சைதாப்பேட்டை, சென்னை - 15 (9789053919)